Header Ads



இஸ்ரேலை ஒழித்துக்கட்டுவது மாத்திரமே தீர்வாகும் - ஆயதுல்லாஹ் அலி கொமைனி


இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்தும் போராடுமாறும் இந்த போராட்டத்தை காசாவில் இருந்து ஆக்கிரமிப்பு மேற்குக் கரை வரை விரிவுபடுத்துமாறும் ஈரான் உயர்மட்ட தலைவர் ஆயதுல்லாஹ் அலிகொமைனி வலியுறுத்தி யுள்ளார்.

'மிருகத்தனமான அரசுடன் தொடர்ந்து போராடுவது மற்றும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பது மற்றும் அதனை மேற்குக் கரை வரையில் விரிவுபடுத்துவதே ஒரே வழி" என்று டெஹ்ரானில் பல்கலைக்கழக மாணவர் முன் உரையாற்றும்போது கொமைனி குறிப்பிட்டார். 

இஸ்ரேலின் கற்பனைக்கும் எட்டாத குற்றங்கள் அதன் உண்மை முகத்தை காட்டுகிறது. இதனை சரிசெய்ய அதனை ஒழித்துக்கட்டுவது மாத்திரமே தீர்வாகும் என்றும் கொமைனி விபரித்துள்ளார். இதில் மேற்குக் கரையும் காசா போன்று அயுதம் ஏந்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.