Header Ads



அல் கஸ்ஸாம் படையணியின் அதிரடி

ஹமாஸ் ஆயுதப் பிரிவு போராளிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி இஸ்ரேல் படை வீரர் ஒருவரை கொலை செய்யும் வீடியோவை ஹமாஸின் அல் அக்ஸா தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. 

இதில் அல் கஸ்ஸாம் படையணியின் பல வீரர்களும் காசாவிலிருந்து இரகசிய சுரங்கப்பாதை ஊடாக இஸ்ரேலுக்குள் ஊடுருவி இஸ்ரேல் இராணுவ முகாமுக்குள் நுழைந்து இஸ்ரேல் படையுடன் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபடுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 

இந்த விடியோவில் பலஸ்தீன போராளிகளால் இஸ்ரேல் படைவீரர் ஒருவர் கொல்லப்படுவது மற்றும் இஸ்ரேல் இராணுவத்தின் ஆயுதங்கள் கைப்பற்றப்படுவது காண்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலின் நஹல் ஒஸ் இராணுவ தளத்தின் மீது நடத்திய தாக்குதலில் 10 இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதில் குறைந்தது ஐந்து படையினர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் உறுதிசெய்திருந்தது. 

ஹமாஸ் வெளியிட்டிருக்கும் விடியோவில் தாக்குதலில் ஈடுபடும் வீரர்களின் முகங்கள் கருப்பு புள்ளியால் மறைக்கபட்டிருந்தது. இந்த வீடியோ அல் அக்ஸா தொலைக்காட்சில் வெளியிடும் முன்னர் அல் கஸ்ஸாம் படையணியின் தளபதி மொஹம்மத் தைப்பின் அறிக்கை ஒன்று ஒளிபரப்பப்பட்டது. "எமது திட்டமிட்ட இலக்கு இஸ்ரேல் இராணுவமாக இருக்கும்போது எமது எதிரிகளின் இலக்கு பொதுமக்களும் குழந்தைகளுமாக இருக்கிறது" என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. 

"ஒரு நடுத்தரமான தீர்வொன்றை நாம் ஏற்கப்போவதில்லை" என்று குறிப்பிட்ட தைப், "தாக்குதல்கள் நிறுத்தப்படுவது மற்றும் முற்றுகை விலக்கப்படும்வரை நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கப்போவதில்லை" என்றார்.

No comments

Powered by Blogger.