Header Ads



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பெருநாள் வாழ்த்துச் செய்தி..!

ஐக்கியம் மற்றும் புரிந்துணர்வுக் கலாசாரத்தில் நாட்டின் முன்னேற்றத்திற்காக இலங்கை முஸ்லிம் சமூகம் செய்துள்ள பெறுமதியான பங்களிப்புக்களை நாம் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூருவதுடன் இலங்கையின் எதிர்கால முன்னேற்றத்துக்காக இத்தகைய நல்லுறவுகள் தொடர வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இன்று ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் மக்களுக்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இஸ்லாமிய பாரம்பரியங்களுக்கேற்ப ஒரு முக்கியமான இஸ்லாமிய கடமையான ஒரு மாத கால நோன்பை நிறைவேற்றியதன் பின்னர் இலங்கை வாழ் முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாட்டத்தில் உலகெங்கிலு முள்ள தமது சகோதர முஸ்லிம்களுடன் இன்று இணைந்து கொள்கின்றனர். 

இது புனித அல்குர்ஆனினதும் இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களினதும் போதனைகளுக்கேற்ப நோன்பு, ஆன்மீகப் பெருமானங்கள் மீதான ஆழ்ந்த ஈடுபாடு. தொடர்ச்சியான வணக்க வழிபாடுகள். தியாகங்கள் போன்ற சமயக் கடமைகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து புத்துணர்ச்சியுடன் மகிழ்வுறும் சந்தர்ப்பமாகும்.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக எமது நாட்டின் ஏனைய இனங்கள் மற்றும் சமயங்களைச் சேர்ந்த மக்களுடன் மிகவும் ஐக்கியமாக வாழ்ந்து கடந்த காலங்களிலும் இந்த வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

நாட்டில் இன்று நிலவும் அமைதியான சூழ்நிலை அவர்களது சமய நடவடிக்கைகளுக்கு சாதகமாக அமைந்துள்ளதுடன் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் உதவும் வகையில் இந்த நிலைமை மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்.

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள். ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Naatil amaithibnilawuthu athanal.muslimka.nimmathiyaka nonpu pidikkirarkal entru solkirar anku amaithi nilawuthu awarra manathilum ippa amaithi illai muslimkalukku saiya wendiya aniyaayankal allam saithu wittu parunaal waalththu wera! ketta kettukku intha nonputhan unda gov last nonpu aduththa nonpukku nee thoththupoi jaill iruppai irunthu paaru allahda sapakkedu unmeethu undaakiwittathu.

    ReplyDelete
  2. Nadihanin nayavanjahamanana valthu muslikalukku thevai illai

    ReplyDelete
  3. முஸ்லிம்கள் ஒருபோதும் துரோகிகளாக இருந்ததில்லை மற்றவர்களுடன் ஒருபோதும் பகைத்ததுமில்லை அவர்களுண்டு அவர்கள் மார்கமுண்டு என்று உண்மையாக வாழ்கின்றார்கள் அதேவேளை அந்த உண்மையை தம்முடன் அண்டி வாழும் மாற்று மதங்களும் உணர்வதன் மூலம் அவர்களும் அதன் உன்மை நிலை உணர்ந்து நற்பயன் பெறவேண்டும் என்பதற்காகவே இஸ்லாம் மார்க்கம் பற்றி எடுத்துரைக்கின்றார்கள் தவிர வேறில்லை. இதை உணர்ந்தவர்கள் அமைதியாக இருக்கின்றார்கள் இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு, பொறாமை கொண்ட வெளி நாட்டு உள் நாட்டு தீய சக்திகளுக்கு அடிபணிந்து சில கூட்டங்கள் முஸ்லிம்களுக்கெதிராக தீவிரவாத செயலில் ஈடுபடுகின்றனர் இதை நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி தெரிந்திருந்தும் ஆரம்பத்திலேயே தவிர்த்துக்கொள்ள தவறி விட்டது. அதேவேளை ஜனாத்பதியின் சகோதர் அனுசரைணையுடன் சில பயங்கரவாதிகளின் நடவடிக்கையினால் முஸ்லிம்கள் பல இன்னல்களையும் பல கோடி ரூபாய் பொறுபதியான சொத்துக்களையும் இழந்தார்கள் அத்துடன் உயிர் இழப்புகளும் ஏற்பட்டன. இவைகள் அனைத்தையும் ஆரம்பத்தில் நாம் ஒவ்வொருவரும் ஜனாதிபதிக்கு தனிப்பட்ட ரீதியிலும் கட்சித்தலைமைகள் ஊடாகவும், சமுதாய நலன் விரும்பிகளூடாகவும் ஏனைய மதம் சார்ந்த அனைவரூடாகவும், எடுத்து தெரிவித்தோம் ஆனால் ஜனாதிபதியோ இதை ஏற்று தன் நாட்டில் வாழும் சிறுபானமை இனத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையுடன் செயற்படாமல் தனது சுய அரசியல் நோக்குக்காகவோ அல்லது தனது சகோதரனின் செயற்பாடுகளுக்கு தலைசாய்த்தோ எமக்கு எதுவித உதவிக்கரமோ அல்லது தீவிரவாதிகளின் கெடுபிடிகளுக்கு எதிராக கட்டுப்பாட்டு விதிகளையோ அல்லது அவர்களுக்கு எதுவித அறிவுறுத்தல்களையோ செய்யாது விட்டமையினால் இறுதியாக அளுத்கமை தர்ஹா டவுன் போன்ற இடங்களில் அவ்வளவு கொடூரச்செயல் களும் நடந்தன.

    அவைகள் அனைத்துக்கும் மெளனமாக இருந்த ஜனாதிபதி எமது தலைமத்துவங்கள் எடுத்துச்சொன்ன ஒவ்வொரு தகவல்களுக்கும் உம்மால் எதுவித ஆதரவு வழங்கப்படவுமில்லை எமது மக்கள் காப்பாற்றப்ப்டவுமில்லை. அதன் காரணமாகவே முஸ்லிம்கள் எமக்கு ஏற்பட்ட கொடூரங்களையும் அநீதிகளையும் வெளியுலகிற்கு கொண்டு செல்லவேண்டி ஏற்பட்டது. அன்று ஜனாதிபதி எமது பிரச்சினைகளுக்கு காதுகொடுத்து அதற்கு ஒரு தீர்வை கண்டிருந்தால் இன்று உமது பேருக்கே கழங்கம் வருமளவிற்கு பெளத்த மக்களே பேசும் நிலை ஏற்பட்டிருக்காது. நாம் நினைக்கின்றோம் காலம் சற்று கடந்துவிட்டது அனைத்தும் கை நழுவிய நிலையே இன்றய நிலை.
    முஸ்லிம்களுக்கு ஆறுதலாகவோ ஆதரவாகவோ இருக்காத ஜனாதிபதியின் வாழ்த்துக்களை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். உம்மில் இருந்த கடுகளவு நன்மதிப்பும் நம்பிக்கையும் தவிடு பொடியாகக்காரணம் உமது சகோதரனின் தான் தோன்றித்தனமும், இராணுவ அடக்குமுறையால் எதையும் சாதிக்கலாம் என்ற முட்டாள்தனமான எண்ணமுமே, இன்றைய நிலையில் உம்மை ஆதர்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவடையக்காரணம் அதுவே என்பதை நீர் என்று உணர்வோரோ அன்று நீர் கைசேதப்பட்டவராகவே இருப்பீர் என்பதை எம்மால் நன்கு உணர முடிகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.