Header Ads



மொடல் ஆடைகளில் கலக்கப்போகும் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பரில் அமெரிக்கா செல்லும் போது அணியும் ஆடைகளை தயாரிப்பதற்காக, பிரபல ஆடை வடிவமைப்பாளர், டிராய் கோஸ்டாவிடம், 'ஆர்டர்' அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் இளம் பிரதமர்களில், ராஜீவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ள நரேந்திர மோடி, ஸ்டைல் பிரதமராக விளங்குகிறார். அணியும் ஆடைகள், நடந்து செல்லும் பாங்கு, பேசும் விதம் போன்றவற்றில், தனித்தன்மையை கடைபிடிக்கிறார். இதனால், இந்தியாவின், 'ஸ்டைல் பிரதமர்' என, 'பிரிக்ஸ்' மாநாட்டின் போது, வெளிநாட்டு பத்திரிகைகள் அவரை புகழ்ந்துள்ளன. இந்நிலையில், அவரின் ஆடைகளை தயாரிக்க, நாட்டின் பிரபல வடிவமைப்பாளர்களான, ஜே.ஜே.வல்லாயா, அஷிமா சிங் போன்றவர்கள் முன்வந்துள்ளனர். இந்தியர்களின் பாரம்பரிய உடைகளையே அணியும் மோடி, அவற்றை சற்று மாறுபாடாக தனக்கென சிறப்பாக வடிவமைத்து அணிவதால், அவருக்கு ஆடை அறிவும் அதிகமாக இருப்பதாக, அந்த வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, வரும் செப்டம்பரில் அமெரிக்கா செல்ல உள்ள மோடிக்கு, சிறப்பான ஆடைகளை தயாரிக்கும் பணி, பிரபல ஆடை தயாரிப்பாளர், டிராய் கோஸ்டாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மும்பையில் வசிக்கும் தொழிலதிபர், அனில் அம்பானி மற்றும் பல பிரபலங்களுக்கு ஆடைகளை வடிவமைத்து வழங்குபவர், டிராய் கோஸ்டா.

No comments

Powered by Blogger.