Header Ads



கர்ப்பிணியின் மீது பாய்ந்த மின்சாரம் - வயிற்றில் இருந்த குழந்தை அதிர்ச்சி

நாம் காணும் திரைப்படங்களில், யாருக்காவது, 'ஷாக்' அடித்தால், அவர்களது காதுகளில் இருந்து புகை வருவது போன்றும், தலைமுடி கருகி, குத்திட்டு நிற்பது போன்றும், நகைச்சுவையாக காட்டப்படுகிறது. இது போன்று, கர்ப்பிணியின் மீது பாய்ந்த மின்சாரம் அவரது வயிற்றில் இருந்த குழந்தையையும் பாதித்த சம்பவம், மெக்சிகோவில் நடந்துள்ளது. 

மெக்சிகோவை சேர்ந்தவர் கேன்ட்ரா விலானுயேவா. இவர் கர்ப்பமாக இருந்தபோது, எதிர்பாராதவிதமாக, மின்சாரம் தாக்கியது. இதைக் கண்ட, அவரது கணவர், மின்சார ஷாக்கில் இருந்து, கேன்ட்ராவை மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள், வயிற்றில் இருந்த குழந்தையின் உயிரை காக்க, அறுவை சிகிச்சை செய்தனர். தாயும், குழந்தையும் மின்சார தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்தனர். குழந்தைக்கு கிம்பர்லே என்று பெயரிட்டனர். 

ஆனால், ஒரு வயது ஆகியும், குழந்தையின் தலைமுடி குத்திட்டு நிற்பதுடன், பேசவோ, உட்காரவோ முடியவில்லை. எப்போதும் அதிர்ச்சி நிறைந்த பார்வையுடன் குழந்தை இருப்பதால், அவனது பெற்றோர் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். தாய்க்கு, 'ஷாக்' அடித்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி, வயிற்றில் இருந்த குழந்தையை தாக்கியதால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். தற்போது, குழந்தைக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை நீக்கும் முயற்சியில், டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.