Header Ads



'சிங்­க­ள­வர்­க­ளுக்கு முஸ்­லிம்­களை எதி­ரி­யா­க காண்பித்து மோதலை உண்­டுப்­பண்ண முயற்­சி­'

முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்­த­னாவின் அர­சாங்கம் செயற்­பட்­டதை போன்று தனது இய­லா­மையை மூடி மறைப்­ப­தற்கு ராஜபக் ஷ அரசு இன­வா­தத்தை தூண்­டி­வி­டு­வ­தாக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அநுர குமார திஸா­நா­யக்க குற்றம் சுமத்­தினார்.
 
அத்­தோடு தேசிய பிரச்­சி­னைக்கு இந்­தியா தீர்வு வழங்­கு­மென தமிழ் மக்கள் நம்­பிக்கை கொள்­வதில் எவ்­வித பிர­யோ­சன­மு­மில்லை. அதற்கு ஒத்­து­ழைக்கபோவ­து­மில்லை. மாறாக வடக்கு கிழக்­கி­லுள்ள தமி­ழர்­களின் உடை­மை­களை பறித்­தெ­டுக்­கவே இந்­தியா முனை­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
 
மீண்­டு­மொரு கறுப்பு ஜூலை வேண்டாம் என்ற தொனிப்­பொ­ருளின் கீழ் நேற்று இடம் பெற்ற பேரணி முடி­வ­டைந்த பிற்­பாடு விஹா­ர­மா­தேவி பூங்­காவின் திறந்த வெளி அரங்கில் இடம் பெற்ற கூட்­டத்தின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
 
இது தொடர்பில் அவர் இங்கு மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
 
சோஷ­லிச இளைஞர் சங்­கத்தின் இத்­த­கைய நிகழ்வு பாராட்­டிற்­கு­ரி­யது. தற்­போ­தைய இளை­ஞர்கள் இத்­த­கைய நிகழ்­வு­களை மேற்­கொள்ள வேண்டும். மாறாக இந்த அர­சாங்கம் இளை­ஞர்­களை கார்ரேஸ், ரக்பி விளை­யாட்­டுக்­களில் ஈடுப்­ப­டுத்­தவே முனை­கி­றது. இந்­நி­லையில் இளை­ஞர்­களை சரி­யான வழிப்­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு அனை­வ­ரிற்கும் உள்­ளது.
 
இருப்­பினும் தற்­போது இளை­ஞர்­க­ளுக்­கான நாளை நாமல் ராஜபக் ஷ மயப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனவே நாட்டின் தற்­போ­தைய கால­கட்­டத்தில் தேசிய ஐக்­கியம் கறுப்பு ஜூலை பற்றி பேசு­வ­தற்கு இலங்கை சுதந்­திரம் பெற்ற பின்பு ஆட்சி செய்­த­வர்­களே மூலக்­கா­ரணம். குறிப்­பாக 1950 இற்கு பிற்­பாடு ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்­களே மூலக்­கா­ரணம்.
 
இந்­நாட்டில் கறுப்பு ஜூலை ஏற்­ப­டு­வ­தற்கு முன்பு ஜே.ஆர். ஜெய­வர்­த­னவின் ஆட்சி காலத்தில் பல்­வே­றுப்­பட்ட பிரச்­சி­னைகள் காணப்­பட்­டது. ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொலை செய்­யப்­பட்ட தொழிற் சங்­கத்­தினர் வீதி­யி­லி­றங்கி போரா­டி­ய­மைக்கு எதி­ராக தாக்­குதல் மேற்­கொண்­டனர். பல்­வேறு பிரச்­சி­னை­களை தீர்க்க முடி­யாமல் ஜே.ஆர்.ஜெய­வர்­தன தீண்­டா­டிய வேளை­யி­லேயே சிங்­க­ள­வர்­க­ளுக்கும் தமி­ழர்­க­ளுக்கும் மோதல் நிலையை உரு­வாக்கி கறுப்பு ஜூலையை ஏற்­ப­டுத்­தினார்.
 
அது போலவே 2005 ஆம் ஆண்­டிற்கு பிற்­பாடு மதங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்கம் காணப்­பட்ட போதிலும் 2009 ஆம் ஆண்­டிற்கு பின்பு நாட்டில் பொரு­ளா­தார ரீதியில் பல்­வேறு பிரச்­சி­னையை அர­சாங்கம் முகங்­கொ­டுத்து வரு­கி­றது. நாட்டின் வைத்­தி­ய­சா­லை­களில் மருந்து இல்­லாது நோயா­ளர்கள் பெரும் அவ­திப்­ப­டு­கின்­றனர். அது போன்றே கல்­வியின் நிலையும் காணப்­ப­டு­கி­றது. அது மாத்­தி­ர­மின்றி தற்­போது நாட்டில் கடனை கொண்டே அரசின் செல­வீ­னங்­களை மேற்­கொள்ள வேண்டி எற்­பட்­டுள்­ளது.
 
எனவே இது போன்று பல்­வேறு பிரச்­சி­னை­களை மூடி­ம­றைக்க ஜே.ஆர்.ஜெய­வர்­தன கறுப்பு ஜூலையை ஏற்­ப­டுத்­தி­யதை போன்று ராஜபக் ஷவின் அர­சாங்­கமும் தனது இய­லா­மையை மூடி­ம­றைக்க சிங்­க­ள­வர்­க­ளுக்கு முஸ்­லிம்­களை எதி­ரி­யா­கவும் தமி­ழர்­க­ளுக்கு சிங்­க­ள­வர்­களை எதி­ரி­யா­கவும் காண்­பித்து மோதலை உண்­டுப்­பண்ண அரசு முயற்­சி­கி­றது. இத­ன­டிப்­ப­டை­யி­லேயே அளுத்­கம வன்­முறை ஏற்­பட்­டது. இந்த இன­வாத அர­சி­யலை அரசு உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும்.
 
30 வருட யுத்தம் நிறை­வ­டைந்த போதும் அதனால் தமி­ழர்­க­ளுக்கு ஏற்­பட்ட வடுக்கள் இதுவரை ஆரயவில்லை. இந்நிலையில் தமிழர்கள் இந்தியா தமக்கு தீர்வும் வழங்கும் என எதிர் பார்க்கின்றனர். அவ்வாறாயினும் வடக்கு கிழக்கில் அனைத்து தமிழர்களின் உடைமைகளும் இந்தியா வசப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழர்கள் இந்தியாவை நம்பிக்கை கொள்வதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. அது போன்று இந்தியா தீர்வு வழங்க போவதுமில்லை என்றார்.

No comments

Powered by Blogger.