Header Ads



கடந்த பல ஆண்டுகளில் இஸ்ரேல் இராணுவம் சந்தித்த பாரிய இழப்பு


நோன்பு பெருநாளை ஒட்டி நேற்று காசாவில் தாக்கு தல்கள் தணிந்திருந்தபோதும் காசா மீது படையெடுத் திருக்கும் இஸ்ரேல் இராணுவம் அங்கிருக்கும் ஹமாஸ் சுரங்கப்பாதைகளை அழிக்கும் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதாக அது குறிப்பிட்டுள்ளது. 

கடந்த ஜ{லை 8 ஆம் திகதி தொடக்கம் காசாவில் இருந்து 2000க்கும் அதிகமான ரொக்கெட்டு தாக்குதல் கள் இஸ்ரேல் மீது நடத்தப்பட்டிருப்பதாகவும் மேலும் 492 ரொக்கெட்டுகளை இஸ்ரேல் இடைமறித்து அழித்திருப்பதாகவும், இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார். பலஸ்தீன போராளிகளின் தாக்குதல்களில் இதுவரை 43 இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் இரு இஸ்ரேல் சிவிலியன்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த 20 தினங்களாக நீடிக்கும் மோதலில் குறைந்தது 90 இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டிருப்ப தாக ஹமாஸ் இஸ்லாமிய அமைப்பின் ஆயுதப் பிரிவான அல் கஸ்ஸாம் படையணி குறிப்பிட்டுள்ளது. 

இதில் குறைந்தது 142 இஸ்ரேல் படையினர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாவும் இஸ்ரேல் ஊடகங்களை மேற்கோள்காட்டி குறிப் பிடப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் கடந்த பல ஆண்டுகளில் இஸ்ரேல் இராணுவம் சந்தித்த பாரிய இழப்பாக இது கருதப்படுகிறது.

No comments

Powered by Blogger.