Header Ads



காஸாத் திரைக்கு பின்னால் உள்ள அவலங்கள்...!

(பர்ஹான் பாரிஸ்)

பலஸ்தீனம் முஜாஹித்களின் பூமியாகும். அன்று முதல் இன்றுவரை இது பல தூய போராளிகளை உருவாக்கிவருகின்றது. இதன் விளைவாக இன்று அங்கு பல போராட்டக் குழுக்கள் கொடிய இஸ்ரேலுக்கு எதிராக போராடி வருகின்றன. இதில் தலைவர் அஹ்மத் யாஸீன் அவர்கள் உருவாக்கிய ஹமாஸ் முன்நிலை வகிக்கின்றது. 1948 இல் தொடங்கி இன்றுவரை ஓயாது நடைபொரும் இந்த யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கானோர் ஷஹீதாக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் அகதிகலாக்கப்பட்டனர். பலஸ்தீனம் என்ற நாடு முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு சில பகுதிகள் மாத்திரம் எஞ்சியுள்ளன. 

தற்போது 18 நாட்களாக நடைபொற்றுவரும் இந்தப் போராட்டத்தில் 900 க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் ஷஹீதாக்கப்பட்டுள்ள அதேவேளை 5000 க்கும் அதிகமானோர் காயப்பட்டுள்ளனர். கொடிய இஸ்ரேலின் தரப்பில் 57 போர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் உட்பட அனைத்து போராட்க் குழுக்களும் ரொக்கட் தாக்குதல் மற்றும் பல உத்திகள் மூலம் எதிரிகளுக்கு எதிராக களத்தில் போராடுகின்றன.

இந்நிலையில் பல இஸ்லாமிய நாடுகள் பலஸ்தீன போராட்டத்திற்கு உதவியுள்ளன. இவற்றில் கட்டார், துருக்கி போன்றன முக்கியமானவை. எனினும் தற்போதைய நிலையில் முதுகெழும்பில்லாத எமது அரபுத் தலைவர்கள் தங்களது உதவிகளை வெறும் கண்டன அறிக்கைகளோடும் யுத்தத்திற்கு பின்னரான புனர்நிர்மான உதவிகளுக்கான வாக்குறுதிகளோடும் மாத்திரம் நிறுத்திக்கொண்டது கவலைக்குறியதும் நயவஞ்கத்தனமுமாகும்.
இஸ்ரேல் காஸா மீதான தாக்குதளுக்கு முன்பே அமெரிக்காவின் உதவியுடன் முக்கிய அரபுலகத் தலைவர்களை பல சூழ்ச்சிகள் மூலம் அடிமையாக்கி பொம்மைகளாக மாற்றிவிட்டது. மேலும் இலங்கையில் இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிடையிலான முட்டாள்தனமான இயக்க சண்டைகளை பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான தமது திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்திக் கொள்வது போன்று இஸ்ரேல் அரபிகளுக்கிடையிலான முட்டாள்தனமான கொள்கை, அரசியல் சண்டைகளை பயன்படுத்தி அதன் சியோனிச திட்டத்தை அழகாக நடைமுறைப்படுத்துகின்றது.

உதாரணத்திற்கு எகிப்தை எடுத்துக் கொள்ளுங்கள், காஸாவோடு இணைந்து காணப்படும் முஸ்லிம் நாடான இது இன்றுவரை அதன் ரபஃ எல்லையை மூடிவைத்து இஸ்ரேலியர்களுக்கு உதவுகின்றது. இதன் மூலம் காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு; துணைநிற்கின்றது. காஸா போராளிகளின் தளங்களை சரியாக தாக்குவதற்காக காஸாவில் உலவு பார்க்கும் வேலையையும் ஸீஸீயின் அநியாயக்கார அரசாங்கம் இஸ்ரேலுக்கு அழகாக செய்து கொடுத்தது எல்லோரும் அறிந்த உண்மையாகும். 

ஏன் இவ்வாரான துரோகத்தை அரபு நாடுகள் செய்கின்றன என்று பார்த்தால் 2 காரணங்களை கூறலாம். 

01. தமது ஆட்சியையும் ஆடம்பர வாழ்க்கையையும் பாதுகாப்பது

02. முட்டால்தனமான கொள்கை ரீதியிலான முறிவுகள் (வேறுபாடு).

இந்த கொள்கை ரீதியிலான வேறுபாடு மிகவும் ஆபத்தானது. இந்த வேறுபாடுகள் காலப்போக்கில் (கொள்கைஃஇயக்க) வெறியாக மாறி தமது சகோதர முஸ்லிமை அந்நியரிடம் காட்டிக் கொடுக்கும் இழிவான, சமூகத் துரோக வேலையை செய்ய வைக்கும். மேலும் தனது சகோதரன் நல்ல விடயத்தை செய்தாலும் அதனை எப்படியாவது விமர்சித்து அவனை அழித்துவிட வேண்டும் என்பதில் மிகவும் குறியாக இயக்க வைக்கும்.
முஸ்லிம்களது ஒற்றுமையில்லாத் தன்மை இன்று தேசிய ரீதியில் முஸ்லிம்களை பலவீனப்படுத்தியுள்ளது போலவே சர்வதேச ரீதியிலும் பலவீனப்படுத்தியுள்ளது. இதுவே நபி (ஸல்) அவர்கள் எச்சரித்த ஆபத்தான நிலையாகும். நபியவர்கள் கூறியது போன்றே இன்று முஸ்லிம்கள் எண்ணிக்கையில் அதிகளவாக இருந்தும் பலவீனப்பட்டு 'நீரால் அடித்துச் செல்லப்படும் சருகுகளைப்' போன்று காணப்படுகின்றார்கள். இவற்றின் விளைவால் இன்று முஸ்லிம்களின் இரத்தம் பெருமதியற்றதாக மாறிவிட்டது. உலக அகதிகளின் எண்ணிக்கையில் 75 வீதமானோர் முஸ்லிம்களாகக் காணப்படுகின்றனர். 

இவற்றையெல்லாம் தாண்டி, வேடிக்கையான விடயம் என்னவென்றால் இன்று காஸாவில் இஸ்லாத்திற்காக ஷஹீதாகக் கூடியவர்களை பயங்கரவாதிகள் என முதுகெழும்பில்லாத இந்த அரபுத் தலைவர்கள்; சிலர் பார்ப்பதாகும். மேற்குலகிற்கும் இஸ்ரேலுக்கும் இவர்கள் காட்டும் விசுவாத்தை சில வார்த்தைகளால் கூறிமுடிக்க முடியாது. இவ்வாறான சமூகத் துரோகிகளது பார்வையில் ஹமாஸ் தீவிரவாத இயக்கம், அவ்வியக்கத்திற்கு உதவும் நாடுகளான கட்டார், துருக்கி போன்றன தீவிரவாதத்திற்கு துணைபோகும் நாடுகள். இவ்வாறான சமூகத் துரோகிகளுக்கு கூஜாதூக்கும் சிலர் சமூக வலைத்தளங்களில் பலஸ்தீன மற்றும் ஆப்கான் போன்ற இடங்களில் போராடும் போராளிகளுக்கு எதிராகவும் இவர்களுக்கு உதவும் துருக்கி, கட்டார் போன்ற நாடுகளுக்கு எதிராகவும் பல கட்டுக்கதைகளையும் அபாண்டங்களையும் அழகாக ஜோடித்துவருகின்றனர். 

அமெரிக்க, இஸ்ரேலிய ஏஜன்ட்கள் செய்ய வேண்டிய இவ்வேலைகளை அறியாமையினால் செய்துகொண்டிருக்கும் இவர்கள் விடயத்தில் சமூகம் தெளிவாக இருக்க வேண்டும். கொள்கைவாதம் என்ற பெயரில் தங்களது கொள்கைகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துள்ள முஜாஹித்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது சமூக துரோகமாகும். தமது கொள்கைக்கு மாற்றுக் கருத்துள்ள அறிஞர்களையும் அமைப்புகளையும் மிகவும் கேவலமாக விமர்சித்து, அந்நியர்களுக்கு எமது சமூகத்தை காட்டிக் கொடுக்கும் சில சமூக துரோகிகள் தங்களை கொள்கைவாதிகள் என்று அழைத்துக் கொள்வது ஆச்சரியமே. இவர்களது குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் மாற்றமான இக்கொள்கை சமூகத்தை பிரித்து, எதிரிகளுக்கு துணைபோகின்றது என்று இவர்கள் அறிவதில்லை. அவ்வாறு அறிந்தாலும் அவர்களது கொள்கை வெறி, இஸ்லாம் கூறும் பிரகாரம் அவர்களை ஏனைய முஸ்லிம்களோடு சேர்ந்து ஒற்றுமையாக வாழவும் பிறரின் நல்ல முயற்சிகளை பாராட்டவும் விடுவதில்லை.  இக்கொள்கையின் உச்சநிலையை அடைந்தோரே இஸ்லாத்தின் எதிரிகளுக்கு உதவினாலும் தவறியாவது மாற்றுக் கருத்துடையவனின் முயற்சிகளை அங்கீகரிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பர்.

எனவே இஸ்லாத்திற்காக போராடும் காஸா, எகிப்து, ஈராக், ஆப்கான், மியன்மார், இலங்கை போன்ற அனைத்து இடங்களையும் சேர்ந்த இஸ்லாமிய உள்ளங்களுக்காகவும் பிரார்த்தனை செய்து, தொடர்ந்தும் அவர்களுக்கு ஆதரவளிப்போம். கொள்கையின் பெயரில் சமூகத்தை குழப்பி, ஐக்கியத்தை அழித்து, முஸ்லிம்களை பிளவுப்படுத்துவதன் மூலம் எதிரிகளுக்கு துணைபுரியும் தீய சக்திகளின் தோலை சமூகத்திற்கு உரித்துக் காட்டுவோம். சூறதுஸ் ஸப்பிலே (வசனம்:4) அல்லாஹ் வர்ணிக்கும் ஒற்றுமைமிக்க தூய முஜாஹித்களாக அல்லாஹ் எங்களை மாற்றுவானாக.. ஆமீன்.

No comments

Powered by Blogger.