Header Ads



''நாங்கள் வெறியர்கள் அல்ல, ஆக்கிரமிப்பாளர்களுடனேயே போராடுகிறோம்" - ஹமாஸ்


காசா மீதான முற்றுகையை இஸ்ரேல் தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஹமாஸ் தலைவர் காலித் மிஸால் தமது நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் பலஸ்தீனர்களுக்கு தமது அயலவருடன் ஒன்றிணைந்து வாழ முடியாது என்றும் வலியுறுத்தினார். 

கட்டார் தலைநகர் டோஹாவில் இருக்கும் மிஸால் அமெரிக்காவின் பீ.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலேயே இதனை தெரிவித்தார். இதில் இஸ்ரேலியருடன் அருகருகே அமைதியாக வாழ முடியுமா என்ற கேள்விக்கு, எதிர்கால பலஸ்தீன தேசமே யூத தேசத்தை அங்கீகரிப்பதைத் தீர்மானிக்கும் என்று பதிலளித்தார். 

'நாங்கள் வெறியர்களோ அடிப்படைவாதிகளே அல்ல. அவர்கள் யூததர்களாக இருப்பதனால் உண்மையில் நாம் அவர்களுடன் போராடவில்லை. நாம் எந்த ஒரு இனத்துடனும் மோதவில்லை. நாம் ஆக்கிரமிப்பாளர்களுடனேயே போராடுகிறோம்" என்று மிஸால் குறிப்பிட்டார். 

யூதர்களுடனும், கிறிஸ்தர்களுடனும், அரபிகளுடனும், அரபியல்லாதோருடனும் ஒன்றாக இணைந்து வாழ நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால், ஆக்கிரமிப்பாளர்களுடன் இணைந்து வாழ தயாராக இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.

பலஸ்தீனர்கள் இஸ்ரேல் ஒரு யூத தேசம் என்பதை அங்கீகரிக்குமா என்பது குறித்து  கேட்கப்பட்டபோது, அவர் தமது குழு இஸ்ரேலை அங்கீகரிக் கப்போவதில்லை என்று ஹமாஸ் அமைப்பின் நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.

'எமக்கு பலஸ்தீன தேசம் ஒன்று உருவாகும்போது பலஸ்தீன் தேசத்தின் கொள்கைகள் பற்றி தீர்மானிப்போம். உண்மையில் உங்களால் எதிர்காலம் பற்றி என்னிடம் பதில் எதிர்பார்க்க முடியாது" என்று அவர் குறிப்பிட்டார். 

'ஆனால் ஆக்கிரமிப்பற்ற பலஸ்தீன சொந்த தேசத்தில் பலஸ்தீன மக்களுக்கு பதிலளிக்க முடியும்" என்று மிஸால் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.