Header Ads



ஹமாஸ் + ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு நாங்கள் ஆயுத உதவி செய்வதில்லை - வடகொரியா

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு, நாங்கள் ஆயுத உதவி செய்வதில்லை' என, வட கொரியா அறிவித்துள்ளது. 

அமெரிக்கா போன்ற பல நாடுகளின் பொருளாதாரத் தடையால், இயல்பான வர்த்தகங்களை மேற்கொள்ள முடியாத வட கொரியா, பல நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து, அதன் மூலம், தன் பொருளாதாரத்தை மேம்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த, 2009ல், 35 டன் ஆயுதங்களுடன் ஈரானுக்கு சென்ற வட கொரியா விமானம், தாய்லாந்தின் பாங்காக் நகரில் பிடித்து வைக்கப்பட்டது. அது போல், 2012லிலும் வட கொரியாவின் ஆயுத விமானம் சிறை பிடிக்கப்பட்டது. 

இந்நிலையில், மத்திய தரைக்கடல் நாடுகளில் ஒன்றான பாலஸ்தீனத்தின், ஹமாஸ் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு, வட கொரியா, ஆயுதங்கள் சப்ளை செய்வதாக, புதிய புகார் கிளம்பியுள்ளது. அதற்கு, வட கொரிய அரசு நிர்வாகம் அளித்துள்ள பதிலில், 'இது எங்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். மத்திய தரைக்கடல் நாடுகள் பிரச்னையில் எங்களை இழுக்கும் இந்த செயலை கண்டிக்கிறோம்' என, தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.