Header Ads



இஸ்ரேலுக்கு எதிராக பேச நீ யார்..? தயான் ஜயதிலக்கவுக்கு எச்சரிக்கை

இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக கருத்து தெரிவித்தமையால் ஜனாதிபதியின் சகோதரர் ஒருவர் தன்னை அச்சுறுத்தியதாக முன்னாள் ராஜதந்திரியும் அரசியல் விமர்சகருமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற இலங்கை - பாலஸ்தீன ஒத்துழைப்பு குழு ஏற்பாடு செய்திருந்த பாலஸ்தீனத்திற்கு ஆதரவு வழங்கும் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கையின் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற 2008 ஆம் 2009 ஆம் ஆண்டுகளில் இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தியது.  நான் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு வழங்கினோன். இலங்கையின் யுத்தத்திற்கும் இஸ்ரேலின் யுத்தத்திற்கும் இடையிலான வேறுபாட்டை காட்ட வேண்டும் என்பதே எனது தேவையாக இருந்தது.

அப்போது தொலைபேசியில் குறுஞ் செய்தியை அனுப்பிய ஒருவர், இஸ்ரேலுக்கு எதிராக பேச நீ யார் என கேட்டார்.

அதற்கு பதிலளித்த நான் உங்களது அண்ணன் நியமித்த தூதுவர் எனக் கூறினேன். 

இஸ்ரேலின் முறையை வடக்கு கிழக்கில் முன்னெடுத்தன் காரணமாகவே பிரிவினைவாதத்திற்கு உந்து சக்தி கிடைத்தது.

இலங்கை தற்போது இஸ்ரேலின் பொறியில் விழுந்துள்ளது. அன்று மொசாட் அமைப்பு இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளித்து கொண்ட உண்மையான பயிற்சிகளை புலிகள் அமைப்பு வழங்கியது.

இலங்கை, இஸ்ரேலின் முட்டாள் தனமாக வேலைகளை செய்ததால், இலங்கை பற்றி அனைவரும் பேசி வருகின்றனர்.

மற்றைய விடயம் முஸ்லிம் எதிர்ப்பு. மாளிகாவத்தையை காஸாவாக மாற்ற முயற்சித்தால், தாம் இஸ்ரேலாக மாற தயார் என ஒருவர் கூறியிருந்தார். அவர் மாளிகாவத்தை மக்கள் மீது குண்டுகளை வீச போவதாக கூறுகிறார்.

இவை திடீரென நடக்கும் விடயங்கள் அல்ல. பாதுகாப்பு அமைச்சில் இஸ்ரேலின் ஆதரவாளர்கள் இருக்கின்றனரா என்பதை ஜனாதிபதி தேடிப்பார்க்க வேண்டும் எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.