Header Ads



காஸா தொடர்பில் இலங்கை கவலைப்படுகிறதாம்..!


காஸா நிலப்பரப்பில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

வன்முறைகளினால் பெருமளவு பொதுமக்கள் கொல்லப் பட்டதுடன் பாரியளவில் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வன்முறைகளில் அப்பாவிச் சிறுவர் சிறுமியர் அவலங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதனை எவராலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாள்தோறும் அப்பாவி மக்களின் உயிர் மற்றும் உடமைச் சேதங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளது.

பிராந்திய வலயத்தில் நிலவி வரும் சர்ச்சைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் கிடையாது என குறிப்பிட்டுள்ளது.

அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டங்களை எட்ட முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடாத்தி நிலையான தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் வாழ்வதற்கான உரிமையை இரண்டு தரப்பினரும் மதிப்பார்கள் என எதிர்பார்ப்பார்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் விசேட அமர்வுகள் நடத்தப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.