Header Ads



இலங்கையின் மத சுதந்திரம் குறித்த அமெரிக்க அறிக்கை வெளியாகிறது

அனைத்துலக மத சுதந்திரம் தொடர்பான 2013ம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இன்று வெளியிடவுள்ளது. 

வொசிங்டனில் உள்ள இன்று காலை 11.15 மணியளவில் நடைபெறும் நிகழ்வில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி இந்த அறிக்கையை வெளியிட்டு அறிமுக உரை நிகழ்த்துவார். 

அதையடுத்து, ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மலினோவ்ஸ்கி விளக்கவுரை நிகழ்த்தவுள்ளதுடன், செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளிப்பார். 

இந்த அறிக்கையில், சிறிலங்கா குறித்துக் கடுமையாக விமர்சிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சிறிலங்காவில் சிறுபான்மை மதங்களுக்கு எதிரான, பௌத்த அடிப்படைவாதக் குழுக்களின் வன்முறைகள் கடந்த ஆண்டில் தீவிரமடைந்திருந்தன. 

இதுகுறித்து, அமெரிக்கா தொடர்ச்சியாக கவலை வெளியிட்டு வரும் நிலையில், மத சுதந்திரம் தொடர்பான, தனது கடமைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளதான குற்றச்சாட்டு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.