Header Ads



எத்தனை இஸ்ரேல் படையினர் கொல்லப்படுவதை பார்க்க வேண்டும்...? ஹமாஸ் தலைவர் கேட்கிறார்


காசா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவரப்படும்வரை யுத்த நிறுத்தத்தை ஹமாஸ் தலைவர் காலித் மிசால் நிராகரித்துள்ளார்.

'பல ஆண்டுகால பலஸ்தீன நிலத்தின் மீதான முடக்குதல் விலக்கிக்கொள்வது உட்பட ஹமாஸின் கோரிக்கைகள் பேச்சு வார்த்தைக்கு உட்படாதவரை யுத்த நிறுத்தம் ஒன்றை நாம் இன்று நிராகரிக்கிறோம். எதிர்காலத்திலும் நிராகரிப்போம்" என்று கட்டார் தலைநகர் டோஹாவில்  இடம்பெற்ற ஊடக மாநாட்டில் மிசால் வலியுறுத்தினார்.

காசா மீது இஸ்ரேல் கடந்த எட்டு ஆண்டுகளாக முன்னெடுத்துவரும் முற்று கையை விலக்குவது காசாவுக்கான எகிப்தின் ராபாஹ் எல்லையை திறப்பது மற்றும் இஸ்ரேல் சிறையில் இருக்கும் பலஸ்தீன கைதிகளை விடுவிப்பது ஆகிய நிபந்தனைகளை ஹமாஸ் விதித்துள்ளது. 

எனினும் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வர முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஹமாஸ் வரவேற்பு தெரிவிப்பதாக குறிப்பிட்ட மி'hல், தாம் எகிப்து உட்பட மத்தியஸ்தம் வகிக்கும் எந்த தரப்பையும் எதிர்க்கவில்லை என்றும் தெரிவித்தார். 'எமது மக்களின் தியாகத்தை மதிக்காத எமது மக்கள் மீதான முற்றுகையை அகற்றாத எந்த முயற்சியையும் நாம் ஏற்கப்போவதில்லை" என்றார்.

எகிப்து ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் அல் சிசியின் அரசு அயலில் இருக்கும் காசாவில் ஹமாஸை தனிமைப்படுத்த முயற்சித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ{க்கு இடையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த எகிப்து முன்வைத்த பரிந்துரையை ஹமாஸ் நிராகரித்தது. இந்த யுத்த நிறுத்த முயற்சி இஸ்ரேலுக்கு சாதகமானது என்று ஹமாஸ் குற்றம் சுமத்தியது. 

'எமது கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் அந்த தருணத்திலேயே நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்குவோம்" என்று மிசால் வாக்குறுதி அளித்தார். 'முற்றுகை தளர்த்தப்படுவதற்கு எத்தனை இஸ்ரேல் படையினர் கொல்லப்ப டுவதை பார்க்க வேண்டும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

யுத்தம் நிறுத்தம் ஏற்படும்வரை இருக்காமல் காசா வந்து உதவிகளை புரியுமாறு சர்வதேச சமூகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவ னங்களுக்கு மிசால் அழைப்பு விடுத்தார். எல்லைகளை திறந்து உதவிகள் வர அனுமதி அளியுங்கள் என்று கோரிய மிசால் காசாவில் அனைத்தும் உருக்குலைந்துவிட்டதாகவும் அங்கு தண்ணீர், மின்சாரம், மருந்துகள், எரி பொருள், உணவு எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.