Header Ads



எனது மகளைக் கொன்றதற்கு நன்றி - ரஷ்ய ஜனாதிபதிக்கு ஒரு தந்தை எழுதியுள்ள உருக்கமான கடிதம்


உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனது ஒரே மகளை இழந்த நெதர்நலாந்து நாட்டைச் சேர்ந்த ஹான்ஸ் டி போர்ஸ்ட் என்பவர், ரஷ்ய அதிபர் விளாடிமின் புடினுக்கு நெஞ்சை உருக்கும் வகையிலான ஒரு திறந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

ஹான்சின் 17 வயது மகள் எல்ஸ்மீக் கடந்த வாரம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் பயணம் செய்து பலியான 298 பயணிகளில் ஒருவர்.

"எனது ஒரே ஒரு அருமையான மகளை கொன்றதற்காக, எனது மனமார்ந்த நன்றியை புடின், உக்ரைனின் கிளர்ச்சியாளர்களின் தலைவர்கள் மற்றும் உக்ரைன் அரசுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது முகநூல் பக்கத்தில் ஹான்ஸ் டி போர்ட்ஸ் வெளியிட்டுள்ளார். இந்தத் திறந்த கடிதத்தை நெதர்லாந்து நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.

மேலும் அந்தக் கடிதத்தில், ஒரு இளம் பெண்ணின் உயிரை பறித்ததற்காக நீங்கள் அனைவரும் பெருமைப்படுவீர்கள் என்றும், உங்களை அடுத்த முறை கண்ணாடியில் பார்க்கும் போது அதனை உணர்வீர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.