Header Ads



காஸாவின் இரந்தக் கரை படிந்த நாள், இஸ்ரேலின் துயரம் மிகுந்த நாள்...!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் காஸாவை ஆளும் ஹமாஸ் இடையே கடந்த 23 நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று இஸ்ரேல் போர் விமானங்களும், டாங்கிகளும் காஸா மீது தொடர்ந்து குண்டு மழை பொழிந்தன. அதில், ஒரே நாளில் மட்டும் 100 பேர் பலியாகினர். இது தற்போது நடந்து வரும் போரில் மிக மோசமான நாளாக கருதப்படுகிறது. அதிக ரத்தக்கறை படிந்த நாளாக வர்ணிக்கப்படுகிறது.

இதற்கிடையே ஹமாஸ் தலைவர் இஸ்மாயில்ஹனியா வீட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் 2 தடவை குண்டு வீசி தாக்கியது. இந்த தகவலை அவரது மகன் அபேத் சலாம் ஹனியா தெரிவித்தார்.

பாலஸ்தீனத்தின் காஸாவில் ஒரே ஒரு அணுமின் நிலையம் உள்ளது. அதன் மீது இஸ்ரேல் 60 தடவை குண்டு வீசியது. அதில் அந்த மின் உற்பத்தி நிலையம் தீப்பிடித்து எரிகிறது. அதை அணைக்கும் முயற்சியில் பாலஸ்தீன தீயணைப்பு படையினர் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.

ஹமாஸ் நேற்று நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 10 பேர் பலியாகினர். அவர்களில் 5 பேர் இஸ்ரேல் எல்லையில் உள்ள தீவிவாதிகளின் சுரங்க பாதை வழியாக காஸாவுக்குள் நுழைய முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகு கூறும்போது, இது ஒரு துயரம் மிகுந்த நாள் என்றார். காஸாவில் உள்ள தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள் மற்றும் சுரங்க பாதைகளை அழிக்கும் வரை இஸ்ரேல் வீரர்கள் ஓயமாட்டார்கள்.

அந்த பாதை வழியாக வந்துதான் இஸ்ரேல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பொதுமக்களை கொன்று வருகின்றனர். எனவே தாக்குதல் தொடர்ந்து தீவிரமடையும் என்றார்.

No comments

Powered by Blogger.