Header Ads



''முஸ்லிம்களாகிய எங்களிடம் விடுதலை வேட்கை இல்லை'' ஹசன் அலி

தமிழ் மக்களாகிய நீங்கள் அழிந்து போனாலும் பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் மீண்டும் உயிர் பெற்றுக் கொண்டு போராடி வருகின்றீர்கள். உங்களிடம் இருக்கும் அந்த விடுதலை வேட்கை முஸ்லிம்களாகிய எம்மிடம் இல்லை என்பதை ஒத்துக் கொள்ளுகின்றேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலர் ஹசன் அலி. 

யாழ்ப்பாணத்தில நேற்று நடந்த ஈபிஆர்எல்எவ் கட்சியின் 34 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் ஒரே ஒரு முஸ்லிம் சகோதரர் நானாகவே இருக்கின்றேன். 

அது மட்டுமல்ல அரசாங்க தரப்பிலிருந்தும் இந்த நிகழ்வில் பங்குகொள்ளுகின்றவர் நான் மட்டும்தான். 

இது ஒரு முக்கியமான விடயம். 

அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆற்றுக்குள் விழுந்த வெறும் கூழாங்கற்களைப் போன்றதே. 

பலவிதமான நிர்பந்தங்களுக்கு மத்தியில் இந்த அரசாங்கத்தில் நாங்கள் இணைந்துள்ளோம். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது நன்றாக தெரியும். 

அவர்களும் நாங்களும் பல விதமான பேச்சுக்களை நடத்தியிருக்கின்றோம். 

இந்தப் பேச்சுக்களின் போது காரசாரமான விவாதங்களும், காதலுடன் கூடிய பேச்சுக்களும் எங்களுக்கு இடையில் நடைபெற்றிருக்கின்றன. 

நாங்கள் உங்களைப் போன்றவர்கள் தான். வேறுபட்டவர்கள் அல்ல. 

எங்களுடைய பிரச்சினைகளும் உங்களுடைய பிரச்சினைகளும் அனேகமாக ஒரே மாதிரியான பிரச்சினைகள் தான். 

ஆனால் இந்த பிரச்சினைகளுக்கு ஒரு விடிவு காண வேண்டுமென்றால் இந்த இரு சமூகங்களும் ஒன்றுபட வேண்டும். 

அந்த ஒற்றுமையின் பின்னால் மட்டும்தான் இந்த நாட்டிலே இப்பொழுது இருக்கின்ற அராஜகமான இனவாத அரசாங்கத்தில் இருந்து விடிவினைப் பெற்றுக் கொள்ள முடியும். 

ஓர் இனம் அழிக்கப்படுவது கொடுமை, அதனிலும் கொடுமை அந்த இனத்தவரையே அதை அறிந்து கொள்ள முடியாதபடி அறியாமையில் ஆழ்த்திவைப்பது. 

நாங்கள் அழிந்து கொண்டு இருக்கின்றோம். 

ஆனால் தமிழ் மக்களாகிய நீங்கள் அழிந்து போனாலும் பீனிக்ஸ் பறவை போல மீண்டும் மீண்டும் உயிர் பெற்றுக்கொண்டு போராடி வருகின்றீர்கள். 

இதற்கான நாங்கள் தலைவணங்குகின்றோம். 

உங்களிடம் இருக்கும் அந்த விடுதலை வேட்கை முஸ்லிம்களாகிய எங்களிடம் இல்லை என்பதை நான் ஒத்துக்கொள்கின்றேன். 

அதற்கான காரணம், எங்களிடம் நிறைய பலவீனங்கள் இருக்கின்றன. 

ஆனால் அந்தப் பலவீனங்களை எல்லாம் நாங்கள் தொடர்ந்தும் வைத்துக் கொண்டிருக்க முடியாது. 

நாங்கள் பலவீனத்தில் இருந்து விடுபட வேண்டும். 

சில நப்பாசைகளையும் சில எதிர்பார்ப்புக்களையும், அடிப்படையாகக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் ஓர் ஆட்சியை அமைப்பதற்கு சம்மதித்தோம். 

அந்த நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எங்களுக்கும் இடையில் மிகவும் காரசாரமான பேச்சுக்கள் இடம்பெற்றது. 

நாங்கள் மிகவும் மனம் திறந்து பேசிக் கொண்டோம். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எங்களைக் கூப்பிட்டார்கள்- உங்களுக்கு முதலமைச்சர் பதவி தருகின்றோம், விரும்பிய அமைச்சுக்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். 

இருப்பினும் அந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்டு பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு அங்குள்ள பெரும் தொகையான முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்கள். 

ஆதனால் தான் நாங்கள் 7 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டோம். அந்த ஆசனங்களும் வரலாறு காணாத வெற்றியாக எங்களுக்கு இருந்தது. 

அந்த வரலாற்று வெற்றியைப் பெற்றுக் கொண்டும் - அரசாங்கத்துடன் சில நிபந்தனைகளை வைத்து, அவர்களுடன் சேர்ந்து கொள்ள கட்சியின் உயர்பீடம் ஏன் தீர்மானித்தது? 

அதற்கு கிழக்கை விட்டு வெளியில் வாழும் முஸ்லிம்களின் நன்மைகளும் கருதப்பட்டிருந்தன. 

ஆனால் இன்று நடக்கிறது என்ன? அன்று அரசாங்கத்துடன் இணையும் போது எந்தப் பிரச்சினை தமக்கு வரக் கூடாது என்று முஸ்லிம் மக்கள் நினைத்தார்களோ அதே பிரச்சினை இன்று முழுமையாக முஸ்லிம் மக்களைச் சூழ்ந்துள்ளது. 

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரைக்கும் 300இற்கும் மேற்பட்ட சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இனரீதியில் புதிதாக உருவாக்கப்பட்ட சக்திகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

அவ்வாறான கட்டத்தில் எங்களுடைய நிலைப்பாடுகளை நாங்கள் மாற்றுவதற்கு தீவிரமாக சிந்திக்க வேண்டியிருக்கின்றது. 

அந்த வகையிலேதான் நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகமும் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றது. 

அந்த வகையில் எங்களுக்கான நெருக்குதல்களும் வருவதற்கு காத்துக் கொண்டு இருக்கின்றது. 

ஆனால் ஒரு விடயம் நீண்டகாலமாக சிறுபான்மைச் சமூகங்களின் அரசியலை சிறப்பாக நடத்திக் கொண்டு இருக்கின்ற இரண்டு அரசியல் சக்திகளும் இன்னும் இன்றும் பலமுறை பேசினாலும் முக்கியமாக பேசக் கூடிய கட்டத்தை நாங்கள் நெருங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

அதாவது இனப்பிரச்சினைக்கு பூரணமான தீர்வு ஒன்று வரும் போது, முஸ்லிம் சமூகமும் தமிழ் சமூகமும் இறுதி நிலைப்பாட்டை பற்றி எடுக்கின்ற கட்டத்தை நோக்கி நகரவில்லை. 

அந்தக் கட்டத்திற்கு நாங்கள் போக வேண்டும். 

முஸ்லிம் மக்களுக்கு என்ன, தமிழ் மக்களுக்கு என்ன என்ற, இருவருக்கும் தேவையான கௌரவம் தொடர்பாக பேச வேண்டும். 

இந்த பேச்சுக்களைத் தொடர்ந்து பேச வேண்டும்; முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. ஒன்றும் தேவையில்லை இந்த அரசாங்கத்தால் கிடைக்கப் பெரும் வரப்பிரதாசமும் வசதி வாய்ப்புக்களும் நிறுத்தப்படுமானால் முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவமும் அதன் அடிவருடிகளும் இந்த கட்சியை விட்டு விட்டு ஓடிவிடுவார்கள், முஸ்லிம் காங்கிரசும் அதன் உண்மையான பயணத்தை வெற்றி கரமாக முன்னெடுத்து செல்லும்.

    ReplyDelete
  2. பரவாயில்லையே.. காலம் கடந்தாவது ஞானம் பிறக்கின்றதே.. சலுகைகளை எதிர்பார்த்து தவறுகளைச் செய்தாலும் தாங்கள் இன்னதுதான் செய்கின்றோம் எனும் பிரக்ஜையுடன்தான் இருக்கின்றார்கள். ஆனால் இனி இந்த சுய புலம்பல்களால் மட்டும் சமூகத்தை காப்பாற்றவோ ஏமாற்றிக் கொண்டிருக்கவோ முடியாது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்!

    கசாப்புக்கடையில் இருந்து கொண்டு காந்தீயம் பேசுவதால் பயனேது..? அதேவேளை தனிமனிதனின் ஆதிக்க வெறிக்காக போரிலும் உட்கொலைகளிலும் பல்லாயிரம் உயிர்களைப் பறிகொடுத்த பின்பும் அதுபற்றிய குற்றவுணர்வோ சுயவிமர்சனமோ இல்லாமல் சந்தர்ப்பத்தேவைக்காக நம்மை அழைக்கும் தமிழ்சமூகத்துடன் ஒன்றி ஒன்றிணையும்போது இன்னும் கவனமாக இருக்க வேண்டியிருக்கும் என்பதையும் அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

    சர்வதேசத் தலையீட்டுடனான தீர்வு கிடைக்கும் வேளையில் ஆறுகடந்த பின்பு "அண்ணன் என்னடா தம்பி என்னடா...?" பாட்டு பாடாமல் இருப்பார்களா என்று பார்த்துக் கொள்ளுங்கள்..

    ReplyDelete
  3. Summa pothikitu iriyuum oy

    ReplyDelete
  4. Modayarhal, ayyamuljahiliyakkala Arivilihal enpavarhal thaan em Sri Lanka Muslims enpathai intha SLMCyinar nalla arinthu vaithullanar, em mooda samooham innum ivarhalaipponravarhalin kathaihalai nambuhirathe.... muddal Muslim samooham

    ReplyDelete

Powered by Blogger.