Header Ads



இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்காக பல மில்லியன் ரூபாய்கள் - டெய்லி நியூஸ்

இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்காக அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு பல மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அரசாங்க பத்திரிகையான டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

இதன்படி மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனத்துக்கு 618.33 மில்லியன் ரூபாய்கள் கிடைத்துள்ளன.

தேசிய சமாதான பேரவைக்கு 277 மில்லியன் ரூபாய்கள் மற்றும் ட்ரான்ப்பேரன்சி இன்டர்நெசனல் 174 மில்லியன் ரூபாய்கள்; கிடைத்துள்ளதாக பத்திரிகை தெரிவித்துள்ளது.

பத்திரிகையின் தகவல்படி, வெளிநாட்டு அரசாங்கங்கள்,  மேற்கத்தைய நாடுகளின் நிறுவனங்களான ஐரோப்பிய ஒன்றியம், ஹெல்வேட்டாஸ் ஸ்ரீலங்கா, பெடரல் ரீப்பல்லிக் ஒப் ஜெர்மனி மற்றும் கனேடியன் சர்வதேச அபிவிருத்தி நிறுவனம், யுஎன்எச்சிஆர் மற்றும் யுஎஸ்எய்ட் என்பவற்றுக்கு நிதிகளை வழங்குகின்றன.

இந்த நிறுவனங்களே வெளிநாடுகளின் அரசாங்கங்களை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

இந்தநிலையில் நிதிகளை பெற்றுள்ள இலங்கையின் அரசசார்பற்ற அமைப்புக்கள் நிதிகளை பங்குசந்தையிலும் ஏனைய துறைகளிலும் முதலீடு செய்வதாக இலங்கையின் அரசாங்க பத்திரிகை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.