Header Ads



இதுவரை 788 காஸா உறவுகள் வீரமரணம் - மேலும் 8 இஸ்ரேலியரை தீர்த்துக்கட்டியது கஸ்ஸாம்


காசா மீது இஸ்ரேல் இராணுவம் தரை, வான் மற்றும் கடல் வழியால் தொடர்ந்து 17 ஆவது தினமாக 24-07-2014 நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட மொத்த பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 788 ஐ தாண்டியுள்ளது.

இதில் நேற்று வியாழக்கிழமை நடாத்தப்பட்ட தாக்குதல்களில் 37 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதன்மூலம் இதுவரை கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 788 ஆக அதிகரித்துள்ளது. 4,500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்களாவர். நேற்று இடம்பெற்ற தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர். 

எவ்வாறாயினும் இஸ்ரேலின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் கான் யு+னிஸ் பகுதிக்கு மீட்பு பணியாளர்கள் மற்றும் அம்புலன்ஸ்; வண்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலை யில் இஸ்ரேல் எல்லையை ஒட்டியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவ உதவிகளை பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதோடு அங்குள்ள இறந்த உடல்கள் அப்புறப்படுத்தப்பட முடியாமலும் காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்ல முடியாமலும் இருப்பதாக உள்@ர் வாசிகள் குறிப்பிட்டுள்ளனர். 

ஐ.நா. மனிதாபிமான உதவிகளுக்கான தலைவர் வெலரி அமோஸ், 'காசாவில் சிவில் மக்கள் மிகப் பயங்கரமான நிலைக்கு முகம்கொடுத்திருக்கிறார்கள்" என்று விபரித்தார். 'ஐ.நா.வினால் நடத்தப்படும் பாடசாலைகளில் 119,000 அதிகமானோர் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். மக்களுக்கான உணவும் முடிந்து வருகிறது. தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டார். 

காசாவின் 44 வீத நிலப்பகுதியில் இஸ்ரேல் இராணுவம் பயணத்தடை விதித் திருப்பதாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவல கம் குறிப்பிட்டுள்ளது. இந்த பகுதிக்குள் செல்லும் பொதுமக்கள் இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றனர். 

இதேவேளை ஹமாஸ் ஆயுதப்பிரிவான அல் கஸ்ஸாம் படையணி வடகிழக்கு காசா நகரில் எட்டு இஸ்ரேல் வீரர்களை கொன்றதாக நேற்று அறிவித்தது. அல் துப்பா பகுதியில் நிலைகொண்டிருந்த இஸ்ரேல் இராணுவத்தின் மீது நேற்று காலை ஊடுருவி தாக்கியதாக கஸ்ஸாம் படையணி விபரித்துள்ளது. இதன்போது ஒரு கவச வாகனமும் அழிக்கப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது. 

எனினும் இது குறித்து இஸ்ரேல் தரப்பில் உறுதி அளிக்கப்படவில்லை. தவிர, வடக்கு காசாவின் பைத் ஹனுனிலுள்ள இரு பகுதிகளில் இஸ்ரேல் துருப்புகளுடன் மோதலில் ஈடுபட்டு வருவதாக கஸ்ஸாம் படையணி குறிப்பிட்டுள்ளது. முன்னாதாக கடந்த ஞாயிற்றுக்கிழமையும் ஹமாஸ் போராளிகள் இதேபோன்று இஸ்ரேல் கவச வாகனம் மீது நடத்திய தாக்குதலில் 7 இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டனர். ஏற்கனவே காசா மீதான படையெடுப்பை தொடர்ந்து 51 இஸ்ரேல் துருப்புகள் கொல்லப்பட்டதாக கஸ்ஸாம் படையணி அறிவித்திருந்தது. 

எனினும் இதுவரை 32 இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் தரப்பு குறிப்பிடுகிறது. நூற்றுக்கும் அதிகமான வீரர்கள் காய மடைந்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது. 

1 comment:

  1. அல்லாஹ் யஹூதி உங்களை அடியோடு அழிப்பானாக

    ReplyDelete

Powered by Blogger.