Header Ads



இலங்கையில் 4 பேரைக் கொண்ட குடும்பமொன்றின் மாத மொதச் செலவு 60000 ரூபா

(gtn)

நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றின் மாத மொத்தச் செலவு சுமார் 60000 ரூபா என சிரேஸ்ட அமைச்சரும், பிரதி நிதி அமைச்சருமான சரத் அமுனுகம பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நகரத்தில் நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றின் மாத மொத்தச் செலவுகள் 59001 ரூபா என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் உணவுக்காக 18000 ரூபாவும் ஏனைய தேவைகளுக்காக 40000 ரூபாவும் செலவிடப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கிராமப் பகுதிகளைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் மாத மொத்தச் செலவு 40000 ரூபா எனத் தெரிவித்தள்ளார்.

இதில் உணவுக்காக 16000 ரூபாவும் ஏனைய தேவைகளுக்காக 24000 ரூபாவும் செலவிடப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் மாத மொத்தச் செலவு சுமார் 30000 ரூபா எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதில் உணவுக்காக 15000 ரூபாவும் ஏனைய தேவைகளுக்காக 15000 ரூபாவும் செலவிடப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பங்கள் அதிகளவில் செலவிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்ற சராசரியாக மாதாந்தம் 63000 ரூபா செலவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.