Header Ads



பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் விசேட அறிக்கை..!


அளுத்கம சம்பவம் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் பதில் நடவடிக்கைகள் குறித்து எமது கட்சி உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறது” என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் கட்சியின் அதியுயர் பீட கூட்டம் நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர் களைச் சந்தித்த அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உணர்வு பூர்வமான பேச்சுக்களைப் பேசி இனவாதத்தைத் தூண்டும் வகையில் மக்களை வன்முறையில் ஈடுபடச் செய்யும் வகையில் பொதுபலசேனா செயலாளர் பேசிய விடயம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மீது தொடர்ந்தும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் முதல் அளுத்கம சம்பவம் வரையிலான விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

இவ்வாறானவர்களைத் தண்டிப்பதற்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் புதிய சட்டத்திருத்தமொன்று கொண்டுவரப் பட்டுள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இதனை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அமுல்படுத்த வேண்டுமென்றும் அமைச்சர் ஹக்கீம் கேட்டுக்கொண்டார்.

2 comments:

  1. பொது பலசேனவை தடைசெய்யவேண்டும் அதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை முஸ்லிம் தலைவர்கள் செய்யவேண்டும். இந்த விடயத்தில் எல்லோரும் ஒத்து முடிவெடுத்து செய்யவேண்டியதை செய்து ஜனாதிபதியின் இந்த மெளன் நாடகத்துக்கு ஒரு முடிவு கட்டவும். இல்லையேல் நாடு கண்டிப்பாக கண்டிப்பாக மிக மோசமான விளைவுகளை மேற்கொள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை. வாய் பேச்சுடன் இருந்தவர்கள் இப்போது காடைத்தனத்தில் இறங்கியுள்ளார்கள். ஆரம்பித்து விட்டார்கள். ஞான சார சொல்லுவதைக்கவனித்தீர்களா? முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அளித்து விடுவோம் என்று சொல்லுவதை!!! இதற்கு மேல் ஒன்றும் செய்யாத தலைமைத்துவம் இருந்தென்ன இறந்தென்ன....

    ReplyDelete
  2. Athaullah, Basheer Shegu Dawood ippoluthavathu yaar muslimkalukku unmaiyaana thalaivar enra unkalathu kuppadi sandaya kaividdu oththumaippadungdappa.

    ReplyDelete

Powered by Blogger.