Header Ads



ரிசாட் பதியூதீனின் அமைச்சிற்குள் நுழைந்த பொதுபல சேனா தேரர்கள் மீது சட்ட நடவடிக்கை - பொலிஸ்

அமைச்சர் ரிசாட் பதியூதீனின் அமைச்சிற்குள் உள்நுழைந்த பொது பல சேனா அமைப்பின் தேரர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

அத்துமீறி உள்நுழைந்தமை மற்றும் சட்டவிரோத பேரணி ஆகிய குற்றச்சாட்டின் கீழ், குறித்த தேரர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த நிலையில் இன்றைய தினம் இது தொடர்பில் வாக்கு மூலம் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொது பல சேனா அமைப்பின் தேரர்கள் சிலர் நேற்றைய தினம் அமைச்சர் ரிசாட் பதியூதினின் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சை முற்றுகையிட்டனர்.

ஜாதிக பலசேனா அமைப்பின் தலைவர் வட்டரக்க விஜித தேரர் அமைச்சில் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே இந்த முற்றுகை இடம்பெற்றது.

1 comment:

  1. அரசாங்கமே பொதுபலசேனவை பின்னிருந்து இயக்கும் போது, எப்படி சட்ட நடவடிக்கை எடுக்க முடிவது. பொதுபலசேனவுக்கு எதிராக யாரும் ஒன்றும் பண்ண முடியாது. அது அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக இயங்கி வருகின்றது. ஆழமாக சிந்தித்து செயல்பட்டால் ஒழிய இதுக்கு ஒரு முடிவை யாராலும் இப்போதைக்கு கொண்டு வர முடியாது. முடிவு நச்சென்று இருக்கவேண்டும்.

    முடிவு முடிவாக இருக்கவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.