Header Ads



முஸ்லிம்களும், அர்த்தமற்ற வாதங்களும்

(முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)

   பலசேன அமைப்பின் செயலாளர் ஞானதேரர் அவர்களின் சவாவை ஏற்று அவருடன் விவாதத்தில் ஈடுபடுவதற்காக முஸ்லிம் அமைப்புக்களோ, முஸ்லிம் அமைச்சர்களோ செல்வது இக்கால கட்டத்தில் ஆரோக்கியமானது அல்ல.இவ்விவாத நிகழ்வின் ஊடாக விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏதும் இடம்பெறலாம்.ஆகவே,இவ்விடயத்தில் மிகவும் விழிப்பாகவும் ,அவதானமாகவும் இருக்கவேண்டும்.ஹலால் பிரச்சினை ,பள்ளி வாயல் பிரச்சினை ,அபாயாப் பிரச்சினை ,சட்டக்கல்லூரிப் பிரச்சினை ,மறிச்சுக்கட்டி வில்பத்துகாணிப் பிரச்சினை என்று புதிது புதிதாக முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் வளர்ந்து கொண்டே செல்கிறன.

   முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் மஹிந்த அரசில் உள்ளன.அமைச்சர்களாக உள்ளனர்.முஸ்லிம் மக்களும் அரசின் பக்கமே உள்ளனர்.நீதி அமைச்சராகவும் முஸ்லிம் ஒருவரே உள்ளார்.அவரையே தாக்குகின்றனர்.இங்கு என்ன நடை பெறுகிறது.சட்டத்துறை என்ன செய்கிறது.நீதி அமைச்சருக்கே இந்தக் கதி என்றால் சாதாரண குடிமகனின் நிலை என்ன? வஞ்சிக்கப்பட்ட வடபுல முஸ்லிம் மக்களின் பிரதி நிதி றிசாத் பதியுதீன் அவர்கள் இம்மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகள் அனைத்தையும் செய்து வருகின்றார்.முஸ்லிம் நாடுகளின் உதவியுடன் வீடுகளை கட்டிக்கொடுக்கிறார்.காணிகள் அற்ற இலங்கையின் பூர்வீக குடிகளான இவர்கட்கு சட்டரீதியாக காணிகளையும் பெற்றுக் கொடுக்கின்றார்.வெளிநாடுகள் வீடுகளை இங்கு கட்டிக் கொடுக்கும் போது அரசின் சுமையே குறைகின்றது. 

   2004 சுனாமி ஏற்பட்ட பிறகு உலகின் பல நாடுகள் முன்வந்து பல கிராமங்களையே உருவாக்கிக் கொடுத்துள்ளன. ஆங்கிலத்தில் போட்கள் போடப்பட்டன.இந்திய அரசும் 50,000 வீட்டுத்திட்டத்தை அமுல்ப்படுத்தி வருகின்றது.இவற்றையெல்லாம் கறுப்புக் கண்ணாடி போட்டு ,வெள்ளைக்கர இராச்சியம் உருவாக்கப்படுகின்றன.எனக்கோஷம் இடாமல் இருந்து விட்டு ,முஸ்லிம் நாடுகளால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளுக்கும் அன்று எவ்வித இனவியாக்கியானமும் செய்யாமல் தற்போது கட்டார் நாட்டு தனவந்தர்களால் கட்டிக்கொடுக்கப்படும் வீட்டுத்தி;ட்டத்திற்கு எதிராக முஸ்லிம் இராச்சியம் உருவாக்கப்படுகிறது.என்ற கோஷமும், ஏன் வெளிவந்து உள்ளது.

   பொதுகன முன்னனி அரசில் இருக்கின்ற ஆளும் கட்சிகளிடையே விரிசல்கள் பெருகி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.அமைச்சர் விமல் வீரவன்சவின் அணியினர் அமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்களோடு அடிக்கடி மோதுகின்றனர். ஜாதிக ஹெலஉருமய கட்சியினர் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் மோதுகின்றனர்.இப்பிரச்சினைகளை தீரக்கவேண்டிய பொறுப்பு பொதுஜன முன்னனி செயலாளர் சுசில் பிரேம ஜயந்த அவர்களுக்கும் ,நாட்டின் ஜனாதிபதிக்கும் உண்டு.

   அரசியல் இருக்கின்ற முஸ்லிம் அமைச்சர்களையும் ,பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசையிட்டு  வெளியேறிச்செல்ல தூண்டுவது.ஆரேக்கியமானதல்ல இது அரசுக்கு பெரும் பாதிப்பாகவே அமையும். முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மனக்காயங்களுக்கு ஒத்தடம் போடவேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.பிரதமர் தி.மு.ஜயரத்ன ,அமைச்சர் பசீல் ராஜபக்ஷ, அமைச்சர் ராஜித சேன ரத்ன ,வாசுதேவ நாணயக்கர ,டீ.யு.குணசேகர ,மேல் மாகாண சபை உறுப்பினர் லால்காந்த  போன்றோர் நல்ல தர்ம சிந்தனையுடன் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுக்கின்றனர்.இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். 

2 comments:

  1. உங்களின் இந்த 'அர்த்தமுள்ள அறிக்கை' வாசிப்பதற்கு ஏதோ நன்றாக உள்ளது. தலைக்கு மேல் வெள்ளம் வரப்போகிறது.... இந்த தருனத்தில் கூட 'கொஞ்சம் பொருமையாக இருங்கள்' என்று சொல்வது போன்றுதான் உங்களின் இந்த கருத்து வெளிப்படுத்துகிறது.

    முஸ்லீம் கட்சிகள் 'அனைத்தும்' ஆழும் கட்சியில் இருக்கிறார்களா.... !! அப்படியே எடுத்துக்கொண்டாலும் அது அவர்களின் சுயநலத்துக்காக அன்றி அதன் மூலம் எமது மக்களுக்கு 'நல்லது' நடந்தது என்று சொல்லவேண்டுமானால் அது விரல்விட்டு என்னக்கூடியதே. முஸ்லீம் மக்களும் அரசின் பக்கமே.... ?? தென் மாகாண மற்றும் மேல் மாகாண தேர்தலில் எத்தனை ஆழும் கட்சி முஸ்லீம் உறுப்பினர்கள் வெற்றிபெற்றார்கள்..?? மற்றும் முஸ்லீம் நீதயமைச்சர்....?? இந்த ஒருநாட்டில் மட்டும்தான் முஸ்லீம் ஒருவர் நீதியமைச்சராக இருக்க முஸ்லீம்களுக்கு நீதியில்லாமல் இருக்கிறது. அவரைக்கூட இந்த அரசு 'விரும்பினால் போகலாம்' என்று உறுதியாக கூறிவிட்டது.

    சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சவுதி அரசாங்கம் கட்டிக்கொடுத்த வீடுகளுக்கு என்னவானது? அடுத்தது கட்டார் நாட்டு உதவியுடன் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளுக்கு இன்று 'கேள்விக்குறி'.

    மொத்தத்தில் எதிர்கட்சி மற்றும் ஆழும் கட்சி முஸ்லீம் தலைவர்கள் 'அறிக்கை' விடுவதுடன் அவர்களது 'கடமை' முடிந்தாகிவிட்டது என்று நினைத்துள்ளார்கள்.

    இதனால் தான் பொதுமக்கள் மாற்று வழிமுறைகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியான பயனுள்ள முயற்சிகளுக்கு நாமும் ஊடகங்களும் ஆதரவு கொடுக்க வேண்டுமே தவிர அவர்களை கோழைகளாக்க முற்படுவது அறிவற்ற செயலாகத்தான் கருத வேண்டும்.

    ReplyDelete
  2. Thank you bro posting such a wonderful post though you lived in effected area. As far as i am concern what i have to tell is our eeman weakness greadyness try to live 100 nd 100 years. As you mentioned from halal to wilpathu they brought up many issues but what happened majority of our buddist brothers want belive these aligations one day will come and our almaighty will make that BBS means no one liars. See now they became terorists. The person with patient sabar he is my man this is our beloved prophat rasullah's word. If we belive islam properly insha allah victory our almaighty will bring to us. Before that we must real muslima practical muslim not limited NIC. Must belive in almaighty not any one else. Insha allah

    ReplyDelete

Powered by Blogger.