Header Ads



பொது பலசேனாவுக்கு எதிராக பதில் கொடுப்பதற்கு, முஸ்லிம்கள் மதகுருமாரை பயன்படுத்தலாமா..?

(நஜீப் பின் கபூர்)

பொது பல சேனாவுக்கோ, ஞான சாரருக்கோ விளம்பரத்தைக் கொடுக்கின்ற செய்திகளை எழுதக்கூடாது பேசக்கூடாது என்ற உணர்வில் இருந்தாலும் விரும்பியோ விரும்பாமலோ அது பற்றி எழுதப் பேச  வேண்டி ஏற்படுவது துரதிஸ்ட நிகழ்வாகத்ததான் தொடர்கின்றது. எனவே முஸ்லிம் சமூகத்திற்கு இந்தக் குறிப்பையும் சொல்லி வைக்க வேண்டும் போல் தோன்றுகின்றது.

பொது பல சேனாவுக்குப் பதில் கொடுக்க ஜாதிக  பலசேனா அமைப்பு என்ற அமைப்பு, அதற்கு வேறு முஸ்லிம்கள் தரப்பில் ஒரு உலமா தலைமை. அவர்களுக்கு வேறு பத்திரிகையாளர் மாநாடு. இவை எல்லாம் எவ்வளவு அறிவு பூர்வமான நடவடிக்கைகள் என்பது முஸ்லிம்கள் தரப்பில் சிந்திக்கபட வேண்டி இருக்கின்றது. இந்த அமைப்பை முஸ்லிம் அரசியல்வாதிகள் வழிநடாத்தினாலும் புத்திஜீவிகள் வழிநடாத்தினாலும் தனி நபர்கள் வழிநடாத்தினாலும் ஜாதிக  பல சேன பிறப்பிலேயே நெறிபிறந்த ஒரு அமைப்பு என்பது இவன் பார்வை. பெயரில் கூட தனித்துவத்தைப் பேணிக் கொள்ளத் தெரியாது அதிலும் காப்பியடித்தல்..! 

ஜனநாயக நாட்டில் எவருக்கும் கூட்டம் போடவும் பத்திரிகையாளர் மாநாடு போடவும் அதிகாரம், உரிமை இருக்கின்றது. என்பது ஏட்டில் பதியப்பட்டிருந்தாலும் சில சமயங்களில் அது கறிக்கு உதவுவதில்லை. தங்கல்லை குராம் Nஷக் கொலை, ஹம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டங்களைப் பார்க்கப்போன ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நடந்த சம்பவமும், சட்டமும் பொலிசும் நம் நாட்டில் ஏட்டுச் சுரக்காய் என்ற நிலையில் இந்த இடங்களில் இருந்திருக்கின்றது என்பதற்று நல்ல உதராணங்கள். அத்துடன் மேற்குறிப்பிட்ட ஜாதிக பல சேனா ஊடகவியலாளர் சந்திப்பில் ஞான சாரர் நடவடிக்கைகள் அவரைக் கைது செய்யப்போதுமானதாக இருந்தாலும் அதனால் ஏற்படுகின்ற பின் விளைவுகளினால் அப்படிச் செய்வது தவிர்கக்ப்பட்டிருக்கின்றது என்ற ஒரு பத்திரிகை குறிப்பொன்றை இன்று பார்க்ககூடியதாக இருந்தது. இதிலிருந்து நமது சமூகம் எதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.?

பொது பல சேன அல்லது ஞானத்திற்குப் பதில் கொடுப்பதற்கு முஸ்லிம்கள் தரப்பில் பௌத்த குருமாரை உபயோகித்துக் கொள்ளவது மிகப் பிழையான ஒரு நடவடிக்கை மட்டுமல்ல முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கின்ற நடு நிலையாளர்களையும் இந்த நடவடிக்ககைகள் பாதிக்கச் செய்யும் என்பது இந்த குறிப்பை முன்வைக்கின்ற கட்டுரையாளனின் நிலைப்பாடாகும். இதற்கு நல்ல தொரு உதாரணம் இவ்வளவு நாளும் பொது பல சேனாவுக்கு எதிராக பேசி வந்த அமைச்சர் டிலான் பெரோ நேற்று ஜாதிக  பல சேனா அமைப்புப் பற்றியும் சவூதிப் பணம் பற்றியும் பேசி, இரண்டு அமைப்புக்களையும் சாடிஇருக்கின்றார்.

முஸ்லிம்கள் தரப்பில் பௌத்த கடும் போக்கு அமைப்பிற்கு எதிரான மற்றுமொரு பௌத்த அமைப்பையோ குருவையோ சந்தைப்படுத்துவதை சாதாரண பௌத்த மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இஸ்ரேலை இந்த நாட்டிற்கு எடுத்துவர 1980 களில்  ஜே.ஆர். நடவடிக்கை மேற் கொண்ட போது அதற்குச் சார்பாக முஸ்லிம்கள் தரப்பில் அப்போது சிலர் ஆஜரான போது முஸ்லிம் சமூகத்தின் உணர்வுககள் அன்று எப்படி இருந்து என்பது நம்மில் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கின்றது.  எனவே இந்த விடயத்திலும் நமது நண்பர்கiளும் தாம் விரும்பியோ விரும்பாமலோ முஸ்லிம் விரோதிகளின் அணியில் போய் இணைந்து கொள்ளும் நிலை ஏற்படும். 

முஸ்லிம் விரோதிகளின் நடவடிக்கைகளுக்கு முகம் கொடுப்பது தொடர்பாக முஸ்லிம் அரசியல் தலைமைகளிடத்திலோ சமய அமைப்புக்களிடமோ, பரிகாரங்கள் கிடையாது என்ற காரணத்தினால் தடி எடுத்தவன் எல்லோரும் வேட்டைகக்காரன் என்று நிலை முஸ்லிம்கள் தரப்பில் இன்று தோன்றி இருக்கின்றது எனவேதான் பத்திரிகையாளர் மாநாடு, விவாதத்தில் பங்கு கொள்ள போட்டி நிலை சமூகத்தில் தேன்றி இருக்கின்றது. இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? சமூகத்தில் இது விடயத்தில் காணப்படுகின்ற இடைவெளியை நிரப்பலாம் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு இவர்களை சமூகத்தின் பேரால் அங்கிகரிக்க முடியுமா என்பது அடுத்த கேள்வி.  

இப்படியே ஒருவரை ஒருவர் சாடிக் கொண்டும் அவருக்கு இவர் பதில் கொடுத்துக் கொண்டும் போனால் இந்த பூனைக்கு மணி கட்டுவது யார் எப்போது எப்படி என்ற கேள்வி எம் மீது எழுப்பப்படும் என்பதும் தெரிந்த விடயம். என்றாலும் முஸ்லிம் சமய சங்கங்களும் அரசியல் தலைமைகளும் இது விடயத்தில் உரிய விதத்தில் காரியம் பார்க்க வில்லை என்பதனை சிலர்  மறுத்தாலும் சமூகத்தின் ஒட்டுமொத்த கருத்தும் அதுவாகவே இருக்கின்றது.

பஷPர் சேகு தாவூத் சமூக அழுத்தக் குழுவின் தேவை பற்றி பேசி இருந்தார். அதே கட்சியில் இருந்து அண்மையில் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பனர் ஒருவரும் இந்த இணையத்தளத்திற்கே கட்சி இது விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்வில்லை என்று தகவல் கொடுத்து இருந்தார். 

முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமது குறுநிலங்களில் அரசியல் ஸ்திரத்தன்மையை எப்படி பாதுகாத்து அடுத்த தேர்தலில் கரைசேருவது பற்றித்தான் தமது முழுக் கவனத்தையும் செலுத்தி  வருகின்றார்கள். இந்த நெருக்கடியான நிலையிலும் அதல் எப்படி தமது செல்வாக்கை நிலை நாட்ட முடியும் என்று ஏறிகின்ற வீட்டில் சுருட்டு பற்றவைக்கின்ற பாணியில் அவர்கள் காரியம் இருக்கின்றது. எனவே முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமது கையாலாக தன்மையை இந்த நிகழ்வுகள் மூலம் சமூகத்திற்கு பகிரங்கமாக சொல்லி இருக்கின்றது என்பதனை இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் அவ்வப்போது சொல்லுகின்ற செய்திகளைப் படித்துவிட்டு சிலர் தமது தலைவர்களைப் பாதுகாத்துக் கொள்கின்ற விதமாக தமது பின் குறிப்புகளையும் இங்கு பதிந்து வருகின்றனர்.

சமயத்தின் பெயரால் அமைப்புக்களை வைத்திருப்போர் பிழையான செயல் முறைகளினால் மேல் மட்டங்களில் சிக்கிக் கொண்ட கதைகளைத் தெரிந்திருக்காத இன்னும் சிலர் இல்லை சங்கம் வைத்திருப்போர் எல்லாம் நல்லபடியாகத்தான் செய்து முடித்திருக்கின்றார்கள். என்று அவர்கள் அறிவுக்கு எட்டியவாறு பின் குறிப்புக்ககளையும் இங்கே பதிந்து அவர்களுக்காக ஆஜராக முனைவதும் தெரிகின்றது. இது பற்றிய கதைகளை ஆதாரபூர்வமாகச் சொல்ல முடியும் என்றாலும் சமூகத்தின் நலனுக்காக சில விடயங்களை அம்பலத்தில் அவிழ்த்து விடமுடியாது என்பதனையும் நமது ஹலால் காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

எனவே வெரும் வார்த்தைகளால் அடுக்கிக் கொண்டு போவதும் தற்போதய  பிரச்சினைக்குத் தீர்வல்ல. எனவே இன்று இந்த வன்முறை நாளை இதேபோன்று மற்றுமொரு உருவத்தில் வரும் என்பது தெரிந்த விடயம். 

பிரசமூகங்களுடன் நல்லுறவுகளை பேணி திறந்த மனதுடனும் புரிந்துணர்வுடனும் இவ்வாறான  பிரச்சினைகளுக்கு எப்படி  முகம் கொடுப்பது? அதற்கான அழுத்தக் குழுவை முஸ்லிம் சமயக் குழுக்களினதும், அரசியல் பாசறைகளிலிருந்து விலகி தனித்துவமாக முன்னெடுப்பது தொடர்பான வேலைத்திட்டம் ஒன்று தற்போது பரிசீலனையில் இருந்து வருகின்றது. அதற்கான ஆளணியை முஸ்லிம் சமூகத்தலிருந்து தேடி எடுப்பதில் உள்ள சிரமங்களை நமது சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

இனங்களிடையே நல்லுறவைத் தோற்றுவிப்பதிலும் இந்த நாட்டில் முஸ்லிம்களின்  இருப்பை உறுதிப்டுத்துவதில் நமது சமூகத்தின் பலமும் பலயீனங்களும் முதலில் இனங் காணப்பட வேண்டி இருக்கின்றது. முஸ்லிம்கள் தரப்பில் எங்காவது ஒரு கூட்டம் சந்திப்பு என்றால் அங்கு போய் பார்த்தால் வருகின்றவர்கள் அனேகம் பேர் வந்த நோக்கத்திற்கு- தலைப்பிற்குப் பொருத்தமில்லாது காலத்தை வீணடிக்கின்ற நிலை பரவலாகக் காணப்படுகின்றது.  இது போன்ற பலயீனங்கள் சமூகத்திலிருந்து  முதலில் களையப்பட வேண்டி இருக்கின்றது. மேலும் இது விடயத்தில் தெருச் சண்டைக்காரன் பாணியல் முஸ்லிம் சமூகம் தீர்மானங்களை எடுக்க முடியாது என்பதனை நினைவு படுத்த வேண்டும். முஸ்லிம் சமூகம் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற விடயத்தில் அறிவியல் ரீதியில் தன்னை இன்னும் நிறையவே தன்னை வளர்த்தக் கொள்ள வேண்டி இருக்கின்றது.   

4 comments:

  1. BBS இன் தலைவர் அல்குர்ஆனுக்கு தவரான விளக்க கொடுத்த பின்னரும் ACJU மௌனமாக இருக்கும் போது இதற்கு யார்தான் பதில் சொல்லப்போகிறார்களோ......??

    ReplyDelete
  2. News a news a eluthinal pothum athuku oru periya kattura pola elutha theva illa.....

    ReplyDelete
  3. our way pray and dua sabr.be patient.allah with is ,insha allah

    ReplyDelete
  4. Unmayyaana Muslimkalai adayaalam kaana,Allah BBS anuppivaiththirukkiraan enru
    yaarum izuvarai cholla munvaraazazu oru puzinam thaan!!!

    ReplyDelete

Powered by Blogger.