Header Ads



"காமரி முதல், கிராம நிலதாரி வரை "


(யு.எல்.எம். றியாஸ்)

"காமரி முதல் கிராம நிலதாரி வரை " வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழ
நேற்று (19.04.2014) சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது. சம்மாந்துறை பிரதேச கிராம உத்தியோகத்தர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் வெளியீட்டு  விழா நிகழ்வு இடம்பெற்றது.

சங்கத்தின்  தலைவர் நிருவாக கிராம உத்தியோகத்தர் ஏ.எம். இல்யாஸ் தலைமயில் இடம்பெற்ற இவ் வெளியீட்டு விழாவில் உள்ளூராட்சி மற்றும் மகான சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

"காமரி முதல் கிராம நிலதாரி வரை " வரலாற்று ஆய்வு நூல் முதல் பிரதியை ஒளிபரப்பாளர் சாமசிரி மனிதநேயன் இரசாத் ஏ காதர் அமைச்சர் ஏ.எல்.எம்.
அதாஉல்லாஹ்விடம்  இருந்து பெற்றுக்கொண்டார்.

இவ் வைபவத்தில் "காமரி முதல் கிராம நிலதாரி வரை " வரலாற்று ஆய்வு  நூல் தொகுப்பாசிரியர் ஒய்வு பெற்ற நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எம். சலீம் பொன்னாடை  போர்த்திக்  கௌரவிக்கப்பட்டார்.

இவ் வைபவத்தில் கிழக்கு மாகான சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர்,கிழக்கு மாகான சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர்,சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம். நௌசாத்,சம்மாந்துறை பிரதேச செயலாளர்
ஏ.மன்சூர் மற்றும் ஒய்வு பெற்ற  கிராம உத்தியோகத்தர்கள்,உலமாக்கள் உட்பட பல அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.




No comments

Powered by Blogger.