Header Ads



ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் எது, அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் எது என்ற வித்தியாசம் தெரியாத ஒருவர்..!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா அத்தும் அகில இலங்கை தவ்ஹீத் ஜமா அத்தும் ஆகிய  இருவேறு அமைப்புகள் பற்றிய செயற்பாடுகளை என்னவென்று தெரியாத பொது பலசேனாவின் செயலாளர் பௌத்த மதமா சிறந்தது அல்-குர் ஆனா சிறந்தது என விவாதிக்க அழைப்பது கேலித்தனமானது என உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அல்-குர்ஆன் சிறந்ததா இல்லையா என்பதை முழு உலகுமே அறியும். அல்-குர் ஆனில் முடிந்தால் பிழை கண்டு நிரூபியுங்கள் என்று குர்ஆனே ஆயிரம் வருடங்களுக்கு மேலாக சவால் விடுத்தும்கூட இன்று வரை எவராலும் முடியாமல் போனது என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. இந்த நிலையில் அல்-குர்ஆன் சிந்ததா, பௌத்த மதம் சிறந்ததா என்பதை முஸ்லிம்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள். 

இது பற்றிய விவாதத்துக்கு அழைப்பு விடுத்த பொதுபல சேனாவின் ஞானசார தேரர் அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் தம்மோடு விவாதத்துக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். உண்மையில் இவருக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா அத்துக்குமிடையே அண்மையில் முரண்பாடுகள் எழுந்தன. அதில் இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் இது விடயங்களில் ஒரு வார்தையேனும் இதுவரை பேசியதில்லை. அப்படியொரு ஜமாஅத் இயங்குகிறதா என்பதுகூட வெளியுலகத்துக்கு தெரியாது. இந்த நிலையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா அத் எது, அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் எது என்ற வித்தியாசம் கூட தெரியாத ஒருவர் அல்-குர்ஆன் சிறந்ததா, பௌத்தம் சிறந்ததா என விவாதிக்க அழைப்பது நகைப்புக்குரிய விடயம் மட்டுமல்ல, இத்தகைய விவாதம் என்பது நிச்சயம் அறிவுபூர்வமாக இருக்காது. 

No comments

Powered by Blogger.