Header Ads



இரும்பை விட உறுதியான கண்ணாடி கண்டுபிடிப்பு

இரும்பை விட உறுதியான கண்ணாடியை, அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவின், 'யேல்' பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சிக்கலான கலப்பு உலோக தாதுக்களில் இருந்து, ஒரு புதிய சிறப்பு தாதுவை உருவாக்குவதற்கான வழியைக் கண்டுபிடித்துள்ளனர். 

இதுகுறித்து விஞ்ஞானிகள் குழு தலைவர், ஜான் ஸ்கோர்ஸ் கூறியதாவது,

வளையும் தன்மையுடன், இரும்பை விட வலிமையான இந்த தாதுவுக்கு, 'பல்க் மெட்டாலிக் கிளாஸ்' (பி.எம்.ஜி) என, பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய, கண்ணாடியைக் கொண்டு, உடையாத மருத்துவ உபகரணங்கள், மொபைல் போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கலாம். கடந்த நான்கு ஆண்டுகளில், உடையாத, வலிமையான கண்ணாடியை தயாரிப்பதற்கான, 1.20 லட்சம் கலவை தாதுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு ஜான் ஸ்கோர்ஸ் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.