Header Ads



பொதுபல சேனாவுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் பதில்


முறையாக எழுத்து மூலம் அனுகினால் குர்ஆன் தொடர்பாக பகிரங்க விவாதம் நடத்துவதற்கு தாம் தயார் என்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் இன்று நடத்திய பத்திரிக்கையாளர் மாநாட்டில் அறிவித்தது.

பொது பல சேனாவினால் குர்ஆன் தொடர்பாக சொல்லப்பட்டுள்ள அவதூரு செய்திக்கு பதிலளிக்கவும், பொது பல சேனா அறிவித்துள் விவாத அழைப்பு தொடர்பாக பதில் வழங்குவதற்காகவும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் இன்று ஜமாத்தின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜமாத்தின் செயலாளர் ஆர். அப்துர் ராசிக் மேற்கண்டவாரு தெரிவித்தார்.

“அல்லாஹ்வை நம்புவது மூடத்தனமான கொள்கை” என்று முஸ்லிம்களின் கடவுற் கொள்கையை இழிவு படுத்தியும், இஸ்லாமியர்களின் புனித நூலான திருமறைக் குர்ஆனில் சொல்லப்படாத செய்திகளை அதில் இருப்பதாக போலியாக இட்டுக்கட்டி, இனவாதத்தை தூண்டும் விதமாக அதனை ஊடகங்கள் வாயிலாக மக்கள் மயப்படுத்தி குர்ஆனை நிந்தனை செய்தும் வரும் பொது பல சேனா மற்றும் அதன் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் ஆகியோரது செயற்பாடுகளுக்கு எதிரான வன்மையான கண்டனத்தை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துக் கொள்கின்றது.

அத்தோடு, ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் குறித்தும், இஸ்லாம் மற்றும் குர்ஆன் குறித்தும் தங்களது கருத்துக்களை மட்டும் எடுத்தோதும் ஒரு பக்கச் சார்பான ஊடகங்களில் ஆங்காங்கே கொக்கரித்துத் திரிந்து காலம் கடத்துவதை விட்டு விட்டு, முறையாக எமக்கு கடிதம் அனுப்பி, விவாதத்திற்குண்டான ஏற்பாடுகளில் களமிறங்குமாறு பொது பலசேனா அமைப்பினரிடம் நாம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஜனநாயக அடிப்படையில் இலங்கை நாட்டின் அரசியல் யாப்புக்கு உட்பட்டே ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் செயற்பட்டு வருகின்றது. சமுதாயப் பணிகளானாலும், உரிமைப் போராட்டங்களானாலும், மார்க்கப் பிரச்சாரமானாலும் சாத்வீக ரீதியான அனுகுமுறைகளிலேயே இது கால வரை நாம் களமிறங்கியுள்ளோம். ஆனால், பொலிஸ் துறை அதிகாரத்தை தமது கையில் எடுத்து, காவற்துறை செய்ய வேண்டிய பணிகளை தன்னிச்சையாக முடிவெடுத்து, பல அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டு வரும் பொது பலசேனா என்ற தீவிரவாத அமைப்பினர் ஜனநாயக வழியில் செயற்படும் எம்மை தீவிரவாதிகளாக சித்தரித்து, எம்மை தடை செய்யுமாறு அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதையும் இங்கு நாம் வண்மையாக கண்டிக்கின்றோம்.

30 வருட கால யுத்தத்திற்குப் பின் இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்தையும், சுபீட்சத்தையும் இல்லாமல் செய்து, இனவாதத்தைத் தூண்டுவதினூடாக இனங்களுக்கு மத்தியில் பிரிவினையையும், கசப்புணர்வுகளையும் தோற்றுவித்து, ஓர் அரசு ஆற்ற வேண்டிய பணிகளை தமது ஆளுகைக்குள் எடுத்து அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட முயலும் பொது பல சேனா என்ற தீவிரவாத அமைப்பை அரசாங்கம் உடனடியாக தடை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அரசாங்கத்தை வினயமாய் கேட்டுக் கொள்கின்றது.

அஸ்கிரிய மஹாநாயக்க தேரரிடம் SLTJ பற்றிய சி.டி ஒன்றை பொது பல சேனா வழங்கியது பற்றி :

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் பௌத்த மதத்தை இழிவு படுத்திப் பேசியதாக குறிப்பிட்டே குறித்த சி.டி யை மஹாநாயக்க தேரரிடம் பொது பல சேனாவினர் வழங்கியுள்ளனர். பௌத்த மதத்தை இழிவு படுத்திப் பேச வேண்டிய எந்தத் தேவையும் நமக்குக் கிடையாது. கடந்த பல வருடங்களாக இஸ்லாமியப் பிரச்சாரத்தையும், சமூக சேவைகளையும் செய்து வரும் எம்மைப் பற்றிய பௌத்த மதத்தை இழிவு படுத்துவதாக ஒரே ஒரு சி.டி யை மாத்திரம் தான் பொது பல சேனாவினால் காட்ட முடிகின்றது.

பிற மதங்களையும் மத தலைவர்களையும் அடிப்படையில்லாமல் விமர்சனம் செய்பவர்கள் தனது மதத்தை இன்னொருவர் விமர்சனம் செயவதாக கொதித்து எழும்புவது வேடிக்கையாக உள்ளது. ஏற்கனவே 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் பல தடவைகள் திட்டமிட்டு இஸ்லாத்தின் கடவுள் கொள்கையையும் திருக்குர்ஆனையும் கொச்சை படுத்தியவர்கள் தான் இந்த பொது பல சேனா என்பவர்கள். அதற்கு விளக்கமளிக்கும் வகையில் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்போம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட சீடியில் இஸ்லாத்தை இழிவு படுத்துவதற்கு முன்பதாக தங்களின் மத புத்தகங்கள் மற்றும் பிக்குமார்கள் போதிக்கும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி எங்களுக்கு விளக்கம் தாருங்கள் என்ற பேசப்பட்ட சில விடயங்களை திருத்தி மறைத்த சீடியிலிருந்து நீக்கி புத்த மதத்தை இழிவு படுத்தியதாக குற்றம் சுமத்துகின்றனர். இது முற்றிலும் தவறாகும். இனவாதத்தை தூண்டுவதாகும்.

பல ஆண்டு காலமாக ஏகத்துவ பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நாங்கள் எந்த மதத்தையும் இழிவு படுத்தியது கிடையாது. எந்த மதத்தையும் இழிபு படுத்த வேண்டிய தேவையும் எமக்கு இல்லை.

மாறாக பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தான் இஸ்லாத்தையும் முஸ்லிம்களின் புனித வேத நூலான அல் குர்ஆனையும் கேவலப்படுத்தும் விதமான கற்பனை கலந்த பொய்யை அப்பட்டமாக பரப்பி வருகின்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும்.

எனவே மஹா நாயக தேரருக்கு தவறான முறையில் சித்தரிக்கப்பட்டு பொய்யான தகவல் கொடுத்து இந்த நாட்டை ஆள நினைக்கும் பொது பல சேனா அதற்கான ஒரு வாய்ப்பை தனக்கு ஏற்படுத்திக் கொள்வதற்காக நமது இந்த சீடியை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தான் மறைக்கப்படும் உண்மையாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மத தலைவர்கள் அறிக்கைகள் விடுவதற்கு முன் குறித்த விடயம் தொடர்பாக தெளிவாக ஆராய்ந்த பிறகு தான் முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதையும் அப்படி இல்லாவிட்டால் தங்களின் கூற்றுக்களே மதக் களவரங்களுக்கு காரணமான அமைந்து விடும் என்பதையும் பொதுவாக தெரிவித்துக் கொள்கிறோம்.

1 comment:

  1. மதக் கலவரம் வருமானால் அது இந்த கூட்டத்தால தான் ,அவசர புத்தியும் ,ஆவேசமும் ,இவர்களின் தூரநோக்கு அற்ற சிந்தனையும் ,அடுத்த ஜமாஅத் களுடன் கலந்து ஆலோசிகடதும் தான் காரனெம்.

    ReplyDelete

Powered by Blogger.