Header Ads



மன்னார் ஆயருக்கும், வடமாகாண உலாமாக்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களுக்கும் வடமாகாண மச்ஜிரசுல் உலாமா சபையினருக்கும்  இடையில் நேற்று புதன் கிழமை மாலை மன்னார் ஆயர் இல்லத்தில் விசேட சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.

நேற்று மாலை 5.30 மணியளவில் இடம் பெற்ற இச்சந்திப்பில் வடாகாண மச்ஜிரசுல் உலாமா சபைத்தலைவர் மௌலவி முபாரக் ரசாபி தலைமையில் சென்ற மன்னார் மாவட்ட மச்ஜிரசுல் உலாமா சபை தலைவர் மௌலவி எம்.அசீம்,சமாதான பேரவையின் தலைவர் வைத்தியர் எம்.எலியாஸ் ஆகியோர் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன் போது வடமாகாணத்தில் உள்ள தமிழ்,முஸ்ஸிம் மக்கள் எதிர் நேக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதோடு முசலி பிரதேசச் செயலாளர் பிரிவிற்குற்பட்ட முள்ளிக்குளம், மறிச்சிக்கட்டி ஆகிய கிராமங்களில் மீள் குடியேறியுள்ள தமிழ்,முஸ்ஸிம் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சிளைனகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. -இந்த நிலையில் வடமாகாணத்தில் உள்ள தமிழ்,முஸ்ஸிம் மக்களை ஒன்றினைக்கும் வகையில் அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதே வேளை மன்னார் மாவட்டத்தில் தன்னிச்சையாகவும், பக்கச்சார்பாகவும் அமைக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் குறித்த மதத்தலைவர்களுக்கு தெளிவு படுத்தப்பட்டது. இதன் போது இனி வரும் காலங்களில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வீட்டுத்திட்டங்கள் உற்பட எவ்வித திட்டங்களாக இருந்தாலும் தமிழ்,முஸ்ஸிம் மக்கள் ஒன்றிணைக்கப்பட்டு நீதியான முறையில் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும்,தமிழ்,முஸ்ஸிம் மக்களை ஒன்றிணைக்க வெகு விரையில் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என வடாகாண மச்ஜிரசுல் உலாமா சபைத்தலைவர் மௌலவி முபாரக் ரசாபி மன்னார் ஆயரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை உறுதியளித்தார்.

இச்சந்திப்பில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை,மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.