Header Ads



கோத்தாவின் முஸ்லிம் விரோத பேச்சில் மாற்றமில்லை - ரவூப் ஹக்கீமையும் சாடுகிறார்

ரவூப் ஹக்கீம் களநிலவரம் தெரியாமல் குருட்டுத்தனமாக இருக்கிறார். முஸ்லிம் தீவிரவாதத்தினால் இலங்கைக்கு  மட்டுமன்றி, பிராந்திய  நாடுகளுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக, பாதுகாப்புச் செயலாளர்  கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டில்  முஸ்லிம் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பில்    அண்மையில் கோத்தாபய ராஜபக்ச கருத்துக்களை தெரிவித்திருந்தார் இதற்கு அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் கண்டனம் தெரிவித்தமை பற்றி தே அய்லண்ட் ஆங்கில ஊடகத்திற்கு பதிலளிக்கும் போது கோத்தாபய ராஜபக்ச தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.

“ரவூப் ஹக்கீம் களநிலவரம் தெரியாமல் – குருட்டுத்தனமாக இருக்கிறார். தீவிரவாதத்தினால் உலகமே பாதிக்கப்பட்டு இப்போது நெருக்கடியில் உள்ளது. தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு நாம் பல நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றுகிறோம். புலனாய்வு அமைப்புகளாலும் ஏனைய சம்பந்தப்பட்ட அமைப்புகளாலும் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான கண்காணிப்பின் மூலம், அவர்களின் வன்முறைத் திட்டங்களை முறியடிக்க முடிகிறது. ஈரான், பாகிஸ்தான், சவூதி அரேபியா போன்ற நாடுகளை ரவூப் ஹக்கீம் இந்த விவாதத்துக்குள் இழுத்து வரக் கூடாது. நான் அந்த நாடுகளை சுட்டிக்காட்டவில்லை.

நான் என்ன கூறினேன் என்பதை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது.  தீவிரவாதம் முஸ்லிம் நாடுகள் உள்ளிட்ட எல்லா நாடுகளுக்குமே அச்சுறுத்தல் தான். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் சிறிலங்கா இணைந்து செயற்பட்டது.

ஹக்கீம் அந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த போது தான், தீவிரவாதி ஒருவரை அமெரிக்கப் புலனாய்வு அமைப்பிடம் சிறிலங்கா ஒப்படைத்தது. உள்ளூர் முஸ்லிம்களை உலகத் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புபடுத்தியதாக ஹக்கீம் தவறாக வழிநடத்த முற்பட்டுள்ளார்.

முஸ்லிம் அடிப்படைவாதம், இந்தப் பிராந்தியத்தில் மட்டுமன்றி, உலகெங்கும் பரவிவருகிறது. இந்தநிலைமை குறித்து, சட்டத்தை பேணும் அமைப்புகளும் பாதுகாப்புப் படையினரும் கவலை கொண்டுள்ளனர். தீவிரவாத அமைப்புகள் சிறிலங்காவில் முஸ்லிம் தீவிரவாதத்தை ஊக்குவிக்க முனையலாம் என்பது, கவலை தரும் ஒரு விடயம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Defence Secretary Gotabhaya Rajapaksa yesterday reiterated that extremism posed a severe threat not only to post-war Sri Lanka but many countries in the region as well as the industrialised world.

The war veteran was responding to a statement issued by Justice Minister Hakeem, who is also the SLMC leader, in the wake of Rajapaksa’s address to the Defence Seminar in Colombo early this week. Minister Hakeem was obviously blind to the ground situation, he said, adding that the world was in turmoil today partly due to extremism.

The Defence Secretary said: “We are working closely with many countries to tackle extremist acts. In fact, it is an ongoing process involving intelligence services and other relevant agencies. Due to vigilance on the part of those fighting extremism and terrorism we were able to thwart plans to cause mayhem.”

The Defence Secretary said Minister Hakeem shouldn’t have dragged Iran, Pakistan and Saudi Arabia into the debate as he never mentioned those countries. “The SLMC failed to comprehend what I have said”, he said.

Extremism fueled by a few threatened all countries including the Muslim world, Rajapaksa said. “Minister Hakeem’s reference to Muslim countries backing Sri Lanka at the United Nations Human Rights Council is irrelevant. At the recent Defence seminar, I discussed the threat posed by Muslim extremists as well as Sinhala hardliners.

There is absolutely no suggestion that Muslim countries are in anyway responsible for the situation. Regrettably Minister Hakeem had misinterpreted facts.”

The Defence Secretary said that the government had cooperated with many governments in the region as well as the US during Ranil Wickremesinghe’s tenure as the Premier. “Sri Lanka handed over an extremist wanted by the US intelligence during the UNP-led administration in which Minister Hakeem was a senior member. The present administration too acted on information furnished by foreign intelligence services to intercept wanted extremists.”

Responding to a query by The Island, Defence Secretary Rajapaksa said that Minister Hakeem had misconstrued his assertion that there were some foreign groups bent on encouraging misguided local Muslims to identify themselves more with the extremist global Muslim community, thereby reducing the community’s integration with the rest of the population.

The Defence Secretary said: “It is a known fact that Muslim fundamentalism is spreading all over the world and in this region. This is a situation that our law enforcement agencies and security forces are concerned about, particularly as there have been instances where extremist elements have been in transit in Sri Lanka prior to arrest and handing over to appropriate authorities. The possibility that such extremist elements may try to promote Muslim extremism in Sri Lanka is a cause for concern.”

5 comments:

  1. Will see how long this guy can show off.

    ReplyDelete
  2. நீங்க பல நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றுகின்ற லடசணத்தை நாங்கள் அடிக்கடி பார்கக்கூடியதாக இருக்கின்றதே. போர்க்குற்றவாளிகளாக.

    ReplyDelete
  3. உன்னுடைய வேஷம் கூடிய சீக்கிரம் களையும், உன்னைப் போன்ற பல பேரை நாடு கண்டுள்ளது, டென்சில் கொப்பேகடுவ, ரஞ்சன் விஜேரத்ன இன்னும் பல...........

    ReplyDelete
  4. இலங்கையைப்பொறுத்தவரை பயங்கரவாதிகள் தூரத்தில் இல்லை தலைமையில்தான் இருக்கின்றது பயங்கரவாதிகள்தான் ஆண்டுகொண்டிருக்கின்றார்கள். ஒண்ட நெஞ்சத்தொட்டு சொல்லு நீ நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்யவில்லையென்று.

    ReplyDelete
  5. நீயும் உன் அண்ணனும் தான் மகா தீவரவாதி >>>>த்து

    ReplyDelete

Powered by Blogger.