Header Ads



மகிந்த ராஜபக்ச ஒரு சிங்களத் தீவிரவாதி, அவரை திருத்தவே முடியாது - சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ

இலங்கை ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ச ஒரு சிங்களத் தீவிரவாதி, அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் நவீன சிற்பி என்று அழைக்கப்படும், சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ கூறியுள்ளார்.

“லீ குவான் யூ உடனான உரையாடல்கள்“ என்ற தலைப்பில், லொஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த பேராசிரியர் ரொம் பிளேட், லீயிடம் செவ்வி கண்டு நூல் ஒன்றை எழுதியுள்ளார். முன்னணி பத்திரிகையாளரான பேராசிரியர் ரொம் பிளேட், எழுதியுள்ள இந்த நூலில்தான் மகிந்த ராஜபக்ச குறித்து லீ குவான் யூ இவ்வாறு கூறியுள்ளார். 

இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ அளித்துள்ள செவ்வியில் கூறியுள்ளதாவது. 

இலங்கையின் இனச்சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டு விட்டது என்று  ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ச கூறி வருகிறார்.  இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். 

ராஜபக்சவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன்.  அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ முடியாது. 

இலங்கை இன்று மகிழ்ச்சியுடன் இல்லை.  பெரும்பான்மையாக உள்ள சிங்களவர்கள், விடுதலைப் புலிகளை அழித்து விட்டனர் என்பது உண்மைதான்.  தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. 

அதேபோல இஸ்ரேலியர்களும், ஜப்பானியர்களும் மிகக் கடுமையான உழைப்பாளிகள்.  எதிர்கால உலகம் சீனர்கள் மற்றும் ஆசியர்களிடம் தான் இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார்.

7 comments:

  1. අන්න ජනාධිපතිතුමනි, ඔබ පිළිබඳව හොඳ චරිත සහතිකයක් අප විසින් නොව සිංගප්පූරුවේ පියා යැයි සැලකෙන ලී ක්වාන් යූ මහතා ලබාදී තිබෙනවා. එතුමන් අප දන්නා පරිදි සිංගප්පූරුව දියූණු කලේ ඔබතුමන් මෙන් අන්තවාදීන්ගේ ක්‍රියාවලට ආශීර්වාද කරමින් නොවේ. අන්තවාදීන් තුරුල් කරගනිමින්ද නොවේ. රට පිළිබඳව ජනතාවට කැක්කුමක් ආලයක් ඇති කිරීම‍ට තවත් දහමට ලබැඳි ජන කොටසක් දඩමීමා කරගෙන ජාතියාලය වැපිර යුතු යැයි අපි විශ්වාස නොකරමු. මෙයට කදිම උදාහරණයක් ලී ක්වාන් යූ ආසියාවටම ලබාදී තිබේ. ඔහු ඔබ ගැන පවසන්නේ මෙන්න මෙසේයි...
    "ලංකාවේ ජාති අරගලයට විසඳුම් ලබාදී ඇති බව ජනාධිපති මහින්ද පවසමින් සිටිනවා. මෙය අනෙක් අයද විශ්වාස කළයුතු බව ඔහු බලාපොරොත්තුවෙනවා. රාජපක්ෂගේ කථාවල් මම කියවා ඇත්තෙමි. ඔහු සිංහල අන්තවාදියෙකි. මෙය හොඳාකාරව මම දනිමි. ඔහුගේ හිත වෙනස් කිරීමට හෝ නිවැරැදි කිරීමට නොහැකිය. ශ්‍රී ලංකාව අද සිටින්නේ සතුටින් නොවේ. මහ ජාතීන්වන සිංහල අය විමුක්ති කොටීන් විනාශ කළ බව සැබැය. දමිලයින් නැවතත් ආයුධ සන්නද්ධ අරගලය අරඹාවිද යන්න මට කිව නොහැතියි."
    ආසියාවේ දියුණුවේ මුදුන්පෙත්තට නැග ඇති සිංගප්පූරුවේ පියාගෙන් ඔබ ගැන අසන්නට ලැබීම ගැන ඇත්තෙටම කනගාටුවෙමු. වැරැද්ද නිවැරැදි කරගැනීම ඔබතුමාට බාරයි.

    ReplyDelete
  2. சபாஸ் சரியா சொன்னிங்க சேர் உங்கட வாயில் தேந்தான் வைக்கணும்

    ReplyDelete
  3. எங்கவோ இருக்கும் உங்களுக்கு விஷயம் விழங்கிப் போட்டுது ஆனா, இந்த மஹிந்தைக்கும் அரசில இருக்கிற‌ முசிலிம் அரசியல்வாதிகளுக்கும் இது விழங்கல்லையே சார்.

    ReplyDelete
  4. ஆமாம் இன்னும் உலகம் இவர்களைப்பற்றி அறியவேண்டும், சகோதரர்களே நாமும் முயற்சிப்போம்.

    ReplyDelete
  5. சிங்கப்பூரில் வசிக்கும் முன்னாள் பிரதமருக்கு எமது ஜனாதிபதியின் இனவாத செயற்பாடுகள் விளங்கியது போல் எமது அரசியல் தலைமைகளுக்கு இன்னும் தெளிவாகவில்லையே அதுதான் கவலையாக உள்ளது எப்போ எமக்கு விடிவு காலம் பிறக்குமோ எமது அரசியல் தலைமைகள் எப்போது விளித்தெளுவார்களோ அல்லா தான் அருள் பாலிக்க வேண்டும்

    ReplyDelete
  6. een ungalukkum munnar vilangkamal thanee uno vil kodi bidiththeerkal

    ReplyDelete
  7. It's very evry true no one can help us this the curse we suffer in this country

    ReplyDelete

Powered by Blogger.