Header Ads



பெருநாள் விடயத்தில் சமூகத்தை மலினப்படுத்தாது மனப்பாங்குகளை மாற்றுங்கள்...!

நோன்பை நோற்பதிலும் பெருநாட்களைக் கொண்டாடுவதிலும் நாம் இன்னும் பிளவுபட்டுக்கொண்டே இருக்கிறோம். ஏன் இந்த நிலை. நமது ஒவ்வொரு பலவீனத்தையும்; பலமாக்குவதற்காக இஸ்லாத்தின் எதிரிகள், முஸ்லிம்களின் துரோகிகள் திட்டமிட்டுச் செயற்பட்டுக்கொண்டிருக்கையில் நாம் நமக்குள் அரசியல் ரீதியாகவும், கோட்பாடு ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும், இயக்கங்கள் ரீதியாகவும் இன்னும் இன்னும் பல்வேறு கோணங்களில் நமக்குள் ஒற்றுமை இல்லை என்பதை வெளிப்படையாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு சமூகத்தின் கட்டுக்கோப்பை உடைத்து அதைக் கேவலப்படுத்தி ஏனைய சமூங்களின் பார்வையில் ஒரு  மலினமான எண்ணங்களைத் தோற்றுவித்து தொடர்ந்தும் எமது  சமூகத்தின் நிலை இதுதான் என்பதைக் காண்பித்துக் கொண்ருக்கின்றோம்.

ஆமாம், இன்று 8-8-2013 நம்மில் ஒருதொகையினருக்கு நோன்பு. மற்றும் ஒருதொகையினருக்கு பெருநாள்.  நாங்கள் பிளவுபட்டவர்கள் எங்களுக்குள் ஒற்றுமையில்லை. நாங்கள் இப்படித்தான் வாழ்கிறோம் என்று ஏனையவர்களுக்கு புடம்போடுகிறார்கள். இவர்கள் மனங்களில் ஏற்றுக்கொள்ளும், விட்டுக்கொடுக்கும் புரிந்து கொள்ளும் மனப்பாங்கு உருவாக வேண்டும். அந்த நேர்மறை மனப்பாங்கை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

07-08-2013 பிறை தென்பட்டதா இல்லையா பெருநாளா இல்லையா எனத் தீர்மானிப்பதற்கென்று ஒரு குழு நம்மாட்டில் சகல அமைப்புக்களையும் சார்ந்ததாக உருவாக்கப்பட்டு அது அதன் முடிவைஅறிவித்துள்ளது.

அந்த முடிவு உண்மையில் உண்மையை மறைத்து யாரோ ஒரு கூட்டத்தின் தேவைக்காக அவர்களின் நலனுக்காக வெளியிடப்பட்டிருந்தால் அதற்கான முழுத் தண்டனையையும் அவர்கள் வல்ல அல்லாஹ்விடம் நிச்சயம் பெற்றுக்கொள்ளவார்கள். அதற்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல. அதற்குரிய தீர்ப்பை வல்ல அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுவோம்.

இவ்வாறான நிலைமைகள் இந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் முகத்திரையை கிழியச் செய்து, மேலும் மலினப்படுத்தும் செயலாகவே அமைகிறது. நமது பொல்லை நாமே கொடுத்து அடிவாங்கும் நிலையை  இந்த ஏற்றுக் கொள்ளா மனப்பாங்குகள் நிச்சயம் உருவாக்கும். 

சமூக ஒற்றுமைக்காக முழு நோன்பு நாட்களிலும் இப்தார் வைபவம் நடத்திய நாம் நமக்குக்குள் ஒற்றுமைப்படாது நாம் விரும்பியோ விரும்பாமலோ பிரிவினையை வெளிப்படுத்தியுள்ளோம்.

முஸ்லிம் சமூகத்திடையே பிளவைத் தோற்றுவித்து இஸ்லாத்தின் எதிரிகளுக்கு தீனி போடுகிறார்கள். நிச்சயம் இவர்களும் சமூகத்தின் ஒற்றுமையை சீர்குழைத்து சல்லடையாக்கும் குற்றத்துக்கான தண்டனையை நிச்சயம் வல்ல அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வார்கள். அல்லாஹ் இவர்களின் மனப்பாங்கில் மாற்றத்தை உருவாக்குவானாக.

பிரிவினைகள் ஏற்றுக்கொள்ளாத மனப்பாங்குகள் நம்மை மட்டும் மாத்திரமின்றி நமது எதிர்கால சந்ததிகளையும் பாதிக்கும் என்பதை மனதில் இவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நாம் நமது மனப்பாங்குகளை மாற்றிக்கொள்வதன் மூலம் நமது வாழ்கையின் ஒவ்வொரு படியையும் மாற்றிக்கொள்ள முடியும் ஒவ்வொரு தனிநபரும் ஒரு  ஒரு சமூகத்தின் அங்கத்தவராகிறார். அந்தவகையில், ஓவ்வொரு தனி மனிதனும் தமது மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்தி மாறுகின்றபோது அவர் அங்கம் வகிக்கும் குழுவிலும், இயக்கத்திலும் அவன் சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஆனால் உளவியல் தத்துவ அறிஞர் லியோ டால்ஸ்டாய் கூறுவது போன்று 'ஒவ்வொரு மனிதனும் உலகத்தை மாற்ற வேண்டும் என நினைக்கிறான். ஆனால் ஒருவர் கூட தன்னை மாற்றிக்கொள்ள வேண்டுமென நினைப்பதில்லை.' இதுதான் இச்சமூகத்தின் ஒற்றுமையை சீர்குழைத்து சின்னாபின்னமாக்கும் நிலையாகும். 

அல்லாஹ் ஏனையோரையும் பாதுகாப்பானாக 

அல்லாஹ் அக்பர் 

22 comments:

  1. இதற்கு முன்னர் நாட்டின் சில பாகங்களில் பிறை கண்டிருப்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டால் அதனை அ.இ.ஜ உலமா சகலருக்கும் அறிவித்தது. ஏன் கிண்ணியா ஜ.உ முடிவை கைவிட்டது. சற்று சிந்தியுங்கள். அல்லாஹ் போதுமானவன்!

    http://www.kinniya.net/2011-11-08-16-59-46/2011-11-08-17-00-45/2487-2013-08-07-19-43-45.html

    ReplyDelete
  2. ஒரு தலைப்பட்ச்சமான கருத்து என்றுதான் கூறவேண்டும்.தெளிவாகவே பிறை கண்டதனை அறிவித்தும் தலைமைகள் ஏற்க மறுத்ததன் பின்னணி என்ன?.ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் கூட என்ன கூறினார்.பிறை பார்ததவர்கள் அடுத்தவருக்கு கூறாது இருந்து நாளை எல்லோருடனும் சேர்ந்து பெருநாள் கொண்டாடவும். அப்படியாயின் நோன்புப் பெருநாள்,ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு தினம்களிலும் நோன்பு வைப்பது ஹராம் என்ருல்லேதே இந்த தலைமைகள் மக்களுக்கு ஹராத்தினை செய்யும் படி ஏவி அனைவரினையும் பாவியக்கு கின்றனரா?அல்லது ஒட்டுமொத்த சமுதாயத்தின் பாவத்துக்கும் இவர்கள்தான் பொறுப்புதாரிகளா ?. இந்த சமுதாயன் அல் குர்ரான் ,அல் ஹதீஸ் இல் ஒன்றுபடாத வரை ஒற்றுமை என்பதற்கு அர்த்தமே இல்லது போய் விடும்.அல்லாஹ்வே போதுமானவன்.

    ReplyDelete
  3. தலைமைக்கு கட்டுப்படத்தான் வேண்டும் மறுப்பதற்கில்லை ஆனாலும் தலைமைகள் விடுகின்ற பிழைகளுக்கும் கட்டுப்படவேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த பிறை விடயத்தில் மேலிடத்து உந்துதல்கள் இடம்பெற்றிருக்கவேண்டும் என என்னத்தோண்றுகிறது. உயர்தரப்பரிட்சை எமக்கு எந்த அசௌகரிகத்தையும் ஏற்படத்தியிருக்காது காரணம் தொழுகையை சற்று முற்படுத்த வேண்டும் என கோரிக்கையை அரசின் ஊதுகுழல் சபை அனைத்து பல்லிவாசல்களுக்கும் விடுத்திருக்க முடியும்.

    ReplyDelete
  4. I totally blame the all Ceylon Jamyathul Ulama (ACJU) to this trend growing rapidly in Sri Lank because the ordinary people are following the ACJU’s orders but some unethical men or a particular group are creating these kind of naughty situation and the ACJU also well known them but what has action been taken up to now to eliminate such trend in the country?. However the ACJU cannot go away from the responsibility of guiding the community. The all mighty Allah has given every think to ACJU to guide the community but they are missing from their responsibility because, why I am telling this the ACJU has branches in every villages people still obey and respect the decision and fathwas of Ulamas from such branches (village level or District level Jamya-thul-Ulamas) so why can they not properly coordinate and guide the people? Because they do not (Ulamas) have commitment and coordination among them (Ulamas) they always confronting each other and confusing the ordinary people. Not only that, most of Ulamas do not obey and follow the instruction of the leaders (ACJU) but they all are very vigilant in one think that is to get respect or advantages from the society by using the Hadhees and wards of Al Qur-aan.( Ulamas are the predecessor of Prophets). But this trend may lead to the community to crusade against and among Muslim.
    In summary, “some ulamas say to celebrate Ramadan festival today and others are saying not” but those both are say we are the predecessor of Prophets. So as ordinary peoples’ point of view who is correct and who is to be followed.
    So I am asking in the name of Allah” please you (Ulamas) first make unity and uniformity among you then try in the community”.

    ReplyDelete
  5. Kulappa wathihalai Orupothume Thiruththa Mudiyathu , Thirunthavum mattarhal.

    "May Allah guide them if they have Githayath or destroy them from the society.

    ReplyDelete
  6. Kulappa wathihalai Orupothume Thiruththa Mudiyathu , Thirunthavum mattarhal.

    "May Allah guide them if they have Githayath or destroy them from the society.

    ReplyDelete
  7. நோன்பு பிடிப்பது ஹராமாக்கப்பட்டுள்ள பெருநாள் அன்று நோன்பு நோற்கச் சொல்வதை-அதுவும் இலங்கை முஸ்லிம் உம்மாவை வழி நடாத்திக் கொண்டிருக்கும் உலமா சபையே அவ்விதம் சொல்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. யாருக்கோ பயந்து-எதற்கோ அச்சப்பட்டு வெள்ளிக்கிழமை ஜும்ஆ இல்லை; அதனை சனிக்கிழமை வைத்துக் கொள்ளலாமென்றால், அதனை ஏற்றுக் கொள்வது எவ்வாறு முடியாதோ, அவ்வாறுதான் இதுவும்.

    பிறை கண்டது உண்மையெனில்-ஊர்ஜிதமெனில் இன்று வியாழக்கிழமை பெருநாள் தான். அவ்வாறன்றி,'வேறு காரணங்களுக்காக' வெள்ளிக்கிழமை பெருநாள் என்று சொன்னால் , அவை எந்தக் காரணங்களாக இருந்தாலும்,அவ்வாறு பிரகடனம் செய்வோர் ஈமானை இழந்தவராகவே பார்க்கப்படுவார்!

    அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக; ஆமீன்!

    ReplyDelete
  8. assalamu alaikum
    maarkkam emmidaththil malinamavathu onrum pirachinai illeyo.
    anpukkuriya sahothareray islam solvathu al qur aan matrum nabihalaarin valimuraihalukku keel naam irukkum varai pilavu varathu.
    aanal naam athanai viddu veliyeri emathu viruppukku inankakkoodiya pakkankalukku ilutthuchella ninaitthamaye ivvalavu pilavuhalukkumkaaranam,
    iniyavathu allavudaye maarkkatthukkaha vaala vaendum entra mudivai eduppom.
    samoohatthai allah palaakkuwan
    al hamdulillah

    ReplyDelete
  9. Pirai kandum perunalai arivikkamal, calenderai kurivaitthu nadappavarhalai munafikkuhal andru shollamal; neerum avarhalukku vakkalatthu vanguhireer.

    Allahu Akbhar

    ReplyDelete
  10. nabiyavarhalinazum sahabakkalinazum kalathil piraikkena kulu irukkaviallai. Kanda peraikku etpa perunaik kondadinarhal.

    ReplyDelete
  11. pirai kandaal perunaal kodaduwathu nabi wali.karuththu muranpaaduhalin pothu nabi waliye iruthi theerppaahum.
    kandor kondaduhiraarhall. kaanaathor kondadavillai.

    ReplyDelete
  12. கட்டுரையாளர் தெரிவித்த அத்தனை முன்மாதிரியான விடயங்களையும் களத்தில் சாதித்துக் காட்ட வேண்டிய பொறுப்பு அ.இ.ஜ.உ. சபைக்கே முதற் கடமையாக இருக்கின்றது.

    நாட்டில் பிறை தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள குழுவில் கிண்ணியா உலமா சபையும் ஒரு அங்கம் என்பதைப் புறந்தள்ள முடியாது.

    சமூக ஒற்றுமையைப் பேண வேண்டும் என்பதற்காக பெருநாள் தினத்தில் நோன்பு நோற்கும் பாவமொன்றை , ஹறாத்தைச் செய்வதா? செய்யத் தூண்டுவதா?

    உலமாசபை முற்றிலுமாக முதலில் அதனைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு சக்திக்கும், அழுத்தங்களுக்கும் விலைபோகாது மார்க்கத்தை நிலை நிறுத்துவதில் திடமாக இருக்க வேண்டும். அப்படி ஜம்இய்யதுல் உலமா உறுதியுடன் இருந்தால்தான் சமூகமும் வழி பிறழாது நேர்வழியில் நிலைத்திருக்கும்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  13. ஜம்மியத்துல் உலா சபையில் சக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கு கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தால், அந்த முடிவு தொடர்பாக அவ்வப் பிரதிநிதிகளின் குழுக்களை விளக்கப்படுத்த வேண்டியது அவர்களுடை பொறுப்பாகும். அத்தோடு அவ்வாறு பிரதிநிதித்துவம் வகிப்பவர்கள் சேர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தால், முடிவுக்கு மாறாகச் செயற்படுவதும் வருந்தத்தகு செயலாகும்.

    ReplyDelete
  14. allahuko payapdamal kafiriku payadum ulamakal samuham epadi onruserum piray kandum eid mubarak illaie olama sabaie allhah niram kativitan kiyamth nalil muthigal naragam selvargal

    ReplyDelete
  15. கிண்ணியா பிரதேசத்தில் 20 இற்கும் அதிகமான முஸ்லிம் சகோதரர்கள் பிறை கண்டு ஊர்ஜிதம் செய்த பின்னும் அதனை கொழும்பு பெரிய பள்ளியில் கூடிய உலமாக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் கிண்ணியா பிரதேசத்தின் ஜம்இய்யத்துல் உலமா ஏற்றுக்கொண்டுள்ளது. இது பற்றி நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள். ஒவ்வொரு வருடமும் இந்த பிறை பார்க்கும் சர்ச்சை ஏற்படுகிறது என்றால் ஏன் அதற்கான தீர்வை இதுவரையில் ஜம்இய்யத்துல் உலமாவினால் ஏற்படுத்த முடியாதுள்ளது. ஏன் குறித்த பிறைபார்க்கும் தினத்தில் பிறை தென்படும் என எதிர்வு கூறப்படும் இடங்களில் ஒரு குழுவாக பலர் பிறையை பார்க்க வேண்டும் என்கின்ற நோக்கில் அதனை ஒரு நிகழ்வாக ஏற்பாடு செய்ய முடியாது. ஒருவர் உண்மையில் பிறையை கண்டிருந்தாலும் அவரிடம் விசாரிக்கப்படும் ஒழுங்கில் அவர் தடுமாற்றத்திற்கு உள்ளாகின்றார். இவ்வாறுதான் 2006ம் வருடம் நோன்புப் பெருநாளுக்காக பிறை பார்த்த ஒரு சகோதரரிடம் விசாரிப்பதற்காக கேட்கப்பட்ட கேள்விகள்

    நீங்கள் பிறையை பார்தீர்களா?

    எந்த உயரத்தில் பார்த்தீர்கள்?

    அன்டனா (Antenna) உயரத்தில் இருந்ததா?

    என பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. உண்மையில் சடுதியாக பிறையை காண்கின்ற ஒருவர் மன எழுச்சி (EXCITEMENT) அடைந்து ஏனையோரிடம் காண்பிப்பதற்காக தயாராகுவாரே தவிர அவர் குத்து மதிப்புக் கணக்குகள் போட்டு பிறை தென்படும் உயரத்தைக் கணித்துக்கொண்டிருக்கமாட்டார். ஆக பிறை பாரத்து நோன்பு நோற்றல், பெருநாள் கொண்டாடுதல் என்கின்ற இஸ்லாத்தின் அதி முக்கியமான விடயங்களை பள்ளிவாயல்களில் கூடி ஆராய்வதற்கு முதல் மேற் கூறியது போல் அதனை ஒரு நிகழ்வாக வெளியரங்குகளில் முஸ்லிம்கள் வாழும் ஒவ்வொரு ஊர்களிலும் ஏற்பாடு செய்தால் மேற்படி பிறை பார்க்கும் சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரலாம் என்பது எனது அபிப்பிராயமாகும்.

    ReplyDelete
  16. பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். ஒரு முழுமையான சமுக மாற்றம் எவ்வாறு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அல்லாஹ்வும் அவனது ரசூலும் காட்டிச்சென்றிருக்கிறார்கள் என்பது நாம் யாவரும் அறிந்த உண்மை. பற்பல காரணங்களால் எம்மவரிடம் இறையச்சம் இல்லை, நபி(ஸல்) அவர்கள்மீது நேசம் இல்லை. இந்நிலை புரணமாக மாறும்போது மாத்திரமே அல்லாஹ்வும் அவனது றசூலும் எதிர்பார்த்த அந்த சமுதாயத்தைக் காணமுடியும். உரியவர்கள் சிந்தித்து செயற்படுவார்களா?

    ReplyDelete
  17. Theermaanam edukka poruppil ullavarhal YAARUKKUM PAYAPIDA THEVAYILLEY. ALLAH VEY PAYANTHAAL POOTHUM. appadi allahvey anri veru silarukku payappiduvathaaha iruppavarhal antha poruppukku vara THAHUTHI YATRAVARHAL. avarhal remote mulam seyal padum robo pool iyangi avarhalthaan PIRIVINEY YETPADA KUUDUM.
    Thaleyvarukku kattup padu vathu kadamey ANTHA THALEYVAR ALLAHVUM THUUTHARUM SONNATHIL IRUNTHU MUDIVU EDUKKUM VAREY. thavaraana mudivuhaley kanmuudiththanamaaha pinpatruvathum kutrame. Shindikka allah arivey thanthullaan

    ReplyDelete
  18. ச்சீ ச்சீ...என்னது சின்னப்பிள்ளத்தனமா சொல்றிங்க!
    நாங்க அப்படித்தான்..அதுலதான் ஒரு கிக்கு இருக்குது!
    நாங்க தொப்பி போடுவோம்-போடமாட்டோம்:
    விரல ஆட்டுவோம்-ஆட்டமாட்டோம்!
    எட்டு தான் தொழுவோம்-இருபத்திரெண்டு தான் தொழுவோம்!
    சலவாத்து சொல்லுவோம் (அதானுக்கு முன்)-சொல்லமாட்டோம்!
    நெஞ்சிலாதான் தக்பீர் கட்டுவோம்- கீழதான் கட்டுவோம்.....
    இப்படிப்பாருங்கோ நம்மவங்க லிஸ்ட்டு நீண்டு போகுமிங்க..
    இத எவரும் திருத்த இயலதுங்கோய்...........

    ReplyDelete
  19. mumingal allahwukkum thootharukkum kattuppaduwargal

    ReplyDelete
  20. அய்யா ஜப்னா முஸ்லிம் ஆசிரியரே, எனையா எமது குறிப்புகளை போடாமல் உள்ளீர்?

    ReplyDelete
  21. இன்னும் ஒரு பிளவை அ.இ.ஜ.உ. வின் தலைவர் இன்று இப்னு தைமிய்யா மத்ஹபைப் பிரகடனப்படுத்தி ஏற்படுத்தி விட்டார். இவற்றைப் பேசினால் குழப்பவாதிகள் என்பார்கள். முஹம்மத் (ஸல்) அவர்களின் மத்ஹபைப் பின்பற்றாது புதுப் புது மத்ஹப்களை அறிமுகப்படுத்தி தம் குதிகால்கள் தெரிக்க வந்த வழியே செல்கிறார்கள். அப்படிச் செல்வதற்கு இவர்கள் வழிகாட்டுகிறார்கள். பிரிவினை வராதா? வரத்தான் செய்யும்.

    இவ்வாறான பித்அத்வாதிகளிடமிருந்தும் வழிகேட்டைப் போதிப்பவர்களிடமிருந்தும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக.

    ReplyDelete
  22. அல்லாஹ் போதுமானவன்...
    ஜமியதுல் உலமாவிடம் ஒரு சில
    அறிவு பூர்வமான கேள்விகள்...
    பதிலளிக்குமா ஜமியதுல் உலமா?
    01. நேற்று பிறை தெரிவதற்கான
    வானியல்
    வாய்ப்பு இல்லைஎன்று தெரிந்தும் ஏன்
    நீங்கள் பிறை பார்பதற்காக
    பிறை குழுவை நியமித்தீர்கள்?
    02. இன்று பிறை பார்க்க தகுந்தத
    நாளில்லை என்று முன்னமே ஏன்
    அறிவிக்கவில்லை?
    03. வானியலின்
    படி பிறை நேற்று தெரிவதற்கான
    வாய்ப்பில்லை என்பது எந்த வானியல்
    அறிஞ்சரின் கருத்து? ஆதாரம் எங்கே?
    04. நம்பகமான 20 பேர் அறிவித்தும் எந்த
    அடிப்படையில் அதை நீங்கள் மறுத்தீர்கள்?
    20 பேரின் தகவலும் பொய்யானதா?
    06. பிறை கண்ட இமாமை அங்கு வாழும்
    மக்களும், உலமா சபையும் ஏற்றாக்கள். ஏன்
    நீங்கள் ஏற்கவில்லை?
    06. கிண்ணியாவின் ஜமியதுல்
    உலமா கிளை பிறையை உறுதி செய்த
    பின்னரும் ஏன் அது பற்றி தகவல்
    தெரிவிக்கவில்லை?
    07.ஜமியதுல் உலமாவை ரவூப் ஹகீம்
    அவர்கள் நீண்ட நேரம் தொடர்பு கொள்ள
    முயன்றும் ஏன் அவருக்கு பதில்
    அளிக்கவில்லை?
    08. பிறையில் சந்தேகம் வந்தால்
    நோன்பு வைத்தவர்
    நபிக்கு மறு செய்து விட்டார் என்ற
    ஹதீசுக்கு என்ன பதில்?
    இதோ ஹதீஸ்.
    "ராமலானா? ஷவ்வாலா? என்று சந்தேகம்
    உள்ள நாளில் யார்
    நோன்பு நோற்கிறாரோ அவர் நபிகள்
    நாயகம்(ஸல்)
    அவர்களுக்கு மாறு செய்துவிட்டார்."
    அறிவிப்பவர்:அம்மார் பின் யாசிர் (ரலி)
    நூல்: திர்மிதி 622

    ReplyDelete

Powered by Blogger.