Header Ads



பெருநாளைக்கூட சந்தோசமாக கொண்டாட முடியாமல்..!


(நவாஸ் சௌபி)

ஒரு தரப்பினர் நோன்புடன்
ஒரு தரப்பினர் பெருநாளுடன்
ஒரு தரப்பினர் நோம்பும் இல்ல பெருநாளும் இல்ல

ஒரு பெருநாளைக்கூட சந்தோசமாக கொண்டாட முடியாமல் சந்தேகப்படுகின்ற துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருப்பது எமது பலவீனத்தை ஒரு படி உயர்த்திக்காட்டுகிறது.

இலங்கையில் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரமடைந்திருக்கும் மதப் பயங்கரவாதம் எமக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ள நிலையில் எமது பலம் ஒரு பெருநாளின் மூலம் மதிப்பிடப்பட்டிருக்கிறது என்பது ஒரு பக்க உண்மை.

நோன்பு காலங்களில் இப்தார் பயான் சொல்லுவதற்கும் மார்க்கச் சொற்பொழிவு செய்வதற்கு மட்டும் வானொலி தொலைக்காட்சிகளை நாம் பயன்படுத்து மட்டும் போதாது. பிறை பார்த்து பெருநாள் அறிவிக்கும் பொறுப்பும் பகிரங்கமாக தொலைக்காட்சி வானொலிகளில் நேரம் ஒதுக்கப்பட்டு அந்த விடயம் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட வேண்டும்.

இன்று வந்துள்ள பிரச்சினை சவுதியில் பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் பிரச்சினையல்ல. கிண்ணியாவில் பிறைகண்டு அதனைத் தெரியப்படுத்தியும் அது கருத்தில் கொள்ளப்படவில்லை எனும் விமர்சனமும் குற்றச்சாட்டும்தான் இன்று வந்துள்ளது.

பிறைக்கு முன்னால் கொண்டாட வேண்டிய பெருநாளுக்குத் திரைக்கிப் பின்னால் என்ன நடக்கிறது என்ற கேள்வியும் சந்தேகங்களும் இன்று எழுந்துள்ளது. எனவேதான் பிறைகண்டு அறிவிக்கும் நிகழ்வு பகிரங்க ஊடகப்படுத்தப்பட வேண்டும்.

பிறையைப் பார்த்துவிட்டு இறுதியாக பெருநாளா இல்லையா என்று அறிவிப்பது மட்டும் இந்த விடயத்தில் போதாமல் இருக்கிறது. பிறை காண்பதற்கு கூடுகின்ற இடம் நேரடி ஒளிபரப்புக்குள்ளாக வேண்டும். நோன்பு கால நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாமல் இதனை மட்டுமாவது செய்வது முஸ்லிம் நிகழ்ச்சியின் பயனுள்ள ஒரு விடயமாக இருக்கும் என்று கருதவேண்டியிருக்கிறது.

இதைத் தொடர்ந்தும் இப்படியே விட்டுவிட முடியாது இது ஒரு உணர்வற்ற சமூகமும் அல்ல. இந்தப் பெருநாளின் அறிவிப்புத் தொடர்பாக பகிரங்க குழு ஒன்று உயர் மட்டத்தில் உருவாக்கப்பட்டு இது தொடர்பான ஆதாரத்தன்மையான விடயங்களை ஆராய வேண்டும்.

பிறை கண்டதாக கூறுகின்ற கிண்ணியா பிரதேச நபர்களை அல்லது மக்களை முறையாக அணுகி கிண்ணியா ஜமியத்துல் உலமா சபையினரையும் முன்வைத்து அகில இலங்கை ஜமியத்துல் உலமா மற்றும் பிறை அறிவிப்புக்குழுவினர் எல்லோரையும் ஒரு பொதுவான தளத்தில் வைத்து பகிரங்கமான ஒரு ஊடக உரையாடலைச் செய்ய வேண்டும்.

இது தனிப்பட்ட கொள்கை சார்ந்தவர்களுக்கான முடிவல்ல. இது ஒரு சமூகத்தின் தீர்ப்பும் அறிவிப்புமாகும் இதை இப்படியே எதுவுமற்று விட்டுவிடுவதும் ஆபத்தான ஒரு வரலாற்றுக்கு அடிப்படையாக அமைந்துவிடும்.

அது மட்டுமல்ல இந்த முடிவை யார் பொறுப்பாக்கிக் கொள்வது என்ற கேள்வியும் இங்குண்டு. எனவே பொறுப்புவாய்ந்த தளங்களில் இது தொடர்பான முறையான ஒரு உரையாடலை இது தொடர்பானவர்களை அழைத்து பகிரங்கமாக ஊடகப்படுத்துவது ஒரு சமூகக் கடமையாகும்..!

26 comments:

  1. iwarhal ulamakkal? ondum illatha makkuhala?

    ReplyDelete
  2. நல்லதோர் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்வர்கள் செயல் வடிவம் கொடுக்க முனைவார்களா?

    ReplyDelete
  3. if a leader cannot provide a better leadership to a community,OR a society,OR an organization OR a group of people etc. he should know that immediately he has to withdraw from his position and let someone else who has enough courage do it.
    no use of having backbone less leaders....

    ReplyDelete
  4. ya allah arivana, thunivana ulmakkali engalukku thalaimai thanga seivayaha.....

    ReplyDelete
  5. உண்மையில் கிண்ணியாவில் பிறை தென்பட்டதற்கான ஆதாரங்களை பலதரப்பினரும் உறுதி செய்திருக்கிறார்கள்.பெருநாளையும் சிறப்பாக கொண்டாடவும் செய்திருக்கிறார்கள். பிறை தென்பட்டால் நோன்பு பிடிக்க கூடாது பெருநாள் தான் கொண்டாடனும்.இது இந்த உல முட்டாள்களுக்கு தெரியாதா?மங்கிக்கு (சாறிப்பா) அரசாங்கத்திற்கு ஏன்டா அஞ்சுறிங்க படைப்பாளனுக்கு அஞ்சுங்கடா.ஒரு கூட்டம் நோன்பு ஒரு கூட்டம் நோன்பில்ல ஒரு கூட்டம் பெருநாள்.சரி நம்ம போக்கத்த அந்த வாதிகள் என்ன சொல்றாக.வானத்தையே காணோம் என்று இருப்பார்களே.

    1900. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    "நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாள்களை எண்ணிக் கொள்ளுங்கள்."
    என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
    மற்றோர் அறிவிப்பில் 'ரமலான் பிறை" என்று உள்ளது. ஸஹீஹ் புகாரி-1900

    எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.(அல்-குர்ஆன்-30:32)





    ReplyDelete
  6. Masha Allah.. nayamana oru urai... ipadi nadanthal oru theervu kittum...

    ReplyDelete
  7. Thavaru thavaruthalaaha nadanthaal paravayilley avarhalum manithar hal thavaru nadanthathey perithu paduthaamal nadakka kattup pada kadamap pattulloom.
    Aanaal palar peshiyum yetruk kollum mana swabaavam illaamal seyal pattu thavaraana mudiveduththu HARAAMana thinathil silarukku noonbu noatka veythathu PIDIVAATHA MAAHA SEYYUM THAVAREY SHUTRIK KAATATHAAN VENDUM.
    Pirey kandum .
    ATHU EPPADI INRU PIREY KAANA VAYPILLEY ENRA PORUPPATRA PATHIL poruppullavarhal sollalaama. Pirey 1allathu2 per kandathaaha irunthaalum yetrukkollanum aanaal10 20 per mattil pirey kandum VEENAANA KURUKKU VISHAARANEY SEYTHU ATHEY ILLAATHAAKKA PORUPPAANAVARHAL MANI THIYAARA KANAKKIL SILAVALITHTHU AVARHALIN MANO ITCHAYIN PADI THEERVU EDUTHULLAARHAL.
    PIREY ETHTHANA NIMIDAM IRUNTHATHU?
    ETHTHANA MANIKKU IRUNTHATHU?
    EVALOO SIZE IL IRUNTHATHU?
    EVALO UYARATHIL IRUNTHATHU?
    UYARNTHA IDATHIL IRUNTHU PAARTHEERHALA? ENRU PALA KELVI KALEY KETRU ARIVITHTHAVARHALEY UTHAASEENA PADUTHTHIYATHU EVSLO PERIYA THAVARU..
    INIYAAVATHU SINDITHTHU SEYAL PADUNGAL

    ReplyDelete
  8. # palar pala idankalil pirai kandathaaka kooriy pinpum,
    # kurippaaka Kinniya Jammiyathul Ulama thalaiwar, Sheikh Hithayathulla (Naleemi), pirai then pattathai uruthip paduthiya pinpum,

    iwarkal yaarai thirupthip padutha munaikinranar ?

    mayd kondum naankal iwarkal meethu melum nampik waippathu entha adippadiyil ?

    samukathin poruppuk koorak koodiya oru niruwanam enra anthasthil entha alwu thooram iwarkalai ethir paarkka mudiyum ?

    ReplyDelete
  9. We need to use Technology! Need to design a system.

    ReplyDelete
  10. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செய்தது சரியா?

    ReplyDelete
  11. குரப்பட்டுள்ள கருத்துக்கள் வரவேற்கத்தக்கதும் உண்மையானதும் இதற்கு ACJU வின் பதிலை எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  12. what about forming an other Jamath to celebrate EID and get some riyals or dollers from sheihks.

    ReplyDelete
  13. முதலில் இன்றைய பெருனாள் விடய‌த்தில் ஊடகங்கள் சமூக ஒற்றுமைக்கான தளத்தில் இருந்தே இதை அணுகவேன்டும், குறிப்பாக ஜப்னா முஸ்லிமுக்கு அதிக பொறுப்பிருக்கிறது. இந்த விமர்சனத்தை நீங்கள் சேர்த்துகொள்ளவேன்டும். தங்கள் ஊடகத்தில் இதுதொடர்பாக வெளிவந்த செய்திகள் பெருனாள் என்கின்றவர்களை வெகுவாக ஆதரிக்கும் செய்தியாகவே இருந்திருக்கிறது. மறுபக்கம் தரப்பட்ட விளக்கங்களை கன்டுகொள்ளவில்லை போலும். அ.இ.ஜ.உ. சபை தலைவரின் அறிக்கையின்படி கிண்ணியா ஜ.உ.சபை தலைவர் உரிய கடிததில் ஒப்பமிடவில்லை எனவும் அவர் வட்புறுத்தப்பட்டதால் அவர் அவ்விடத்தை விட்டு விலகிச்சென்றபின் வேறுஒருவர் கையொப்பமிட்டிருக்கிறார் என்பதற்குரிய விடை தேடப்படவேன்டும். வானியலாலர்களின் பிரை தெரியக்கூடிய நேரம் இத்தனை நிமிடம்தான், அதுவும் வெற்றுக்கண்ணுக்கு தெரிய வாய்ப்பில்லை என்ற விடயமும், காணப்படக்கூடிய நேரத்துக்கு பின்னர் தென்பட்டதாக கூறும் விடயமும் கிண்ணியாவில் ஆராயப்பட்டு ஜப்னா முஸ்லிமில் பிரசுரமானால் இதில் உள்ள நியாயத்தன்மையை வாசகர்கள் புரிந்துகொள்வர்

    ReplyDelete
  14. ACJU & MUSLIM SOCIETY: Only the solution we need an intellectual body with Doctors,astrologist, geographies,lawyers......etc for ACJU to guide this society.

    ReplyDelete
  15. Kuraif.(rali)Koorukiraarkal
    "நான் ஷாமை அடைந்து குறித்த
    வேலையை நிறைவு செய்தேன். நான்
    ஷாமிலிருக்கும்போதே ரமழானுக்கான
    பிறை தென்பட்டது. நாம் பிறை கண்டது ஒரு ஜும்ஆ
    தினத்தில்தான். பின்பு ரமழான் இறுதியாகும்போது மதீனாவை அடைந்தேன். அப்போது என்னிடத்தில்
    இப்னு அப்பாஸ் விசாரித்தார். பிறை பற்றிய
    பேச்சு வந்ததும் 'நீங்கள் எப்போது பிறை கண்டீர்கள்?'
    எனக் கேட்டார். அதற்கு நான் 'ஜும்ஆ தினத்தில்'
    என்றேன். அதற்கவர் 'நீங்களும் கண்டீர்களா?' என
    வினவினார். நான் 'ஆம். நான் கண்டேன். மற்றவர்களும் கண்டனர். நாம் நோன்பும் நோற்றோம்.
    முஆவியாவும் நோன்பு நோற்றார்' என்ப்
    பதிலளித்தேன். அதற்கவர் 'ஆனாலும், நாங்கள்
    சனிக்கிழமை இரவுதான் பிறை கண்டோம்.
    எனவே நாங்கள் பிறை காணும்வரையில்
    முப்பது நாட்களும் தொடர்ந்து நோன்பு நோற்போம்' என்றார்.
    அதற்கு நான்
    'உங்களுக்கு முஆவியா பிறை கண்டதும்
    நோன்பு நோற்றதும் போதாதா?' எனத்
    திருப்பிக்கேட்டேன். அதற்கவர் 'இல்லையில்லை...
    தூதர்(ஸல்) அவர்கள் எமக்கு இவ்வாறுதான் ஏவியிருக்கிறார்கள்' எனக் கூறினார்"

    ReplyDelete
  16. நீங்கள் சொல்வது முற்று முழுதாக வரவேற்க்கப்பட வேண்டிய விடயம்தான் என்றாலும் இப்தாருக்கு எண்டு கேட்டாத்தான் அரபி காசு தருவான் பெரு வாள் அறிவிக்க தரமாட்டான்…..?....?

    ReplyDelete
  17. Alhamthulillah... We appreciate your opinion.

    ReplyDelete
  18. அஸ்ஸலாமுஅலைக்கும் அன்பர்களே இலங்கை வாழ் முஸ்லீம்களே இந்த பிறை சம்மந்தப்பட்ட விஷயம் இலங்கை முஸ்லீம்களை ஒரு கேல்விக்குறியாக்க ஜமிய்யத்துள் உலமா முடிவெடுத்துள்ளது என்பதை தெளிவுபடுத்துகின்றது ஏனன்றால் முன்னதாகவே இலங்கை ஜமிய்யத்துள் உலமா ஹலால் விஷயத்தில் கை வைத்து இலங்கை முஸ்லீம்களை ஒரு கேல்விக்குறியாக்கியது.இன்னும் நாம் இந்த கேடு கேட்ட ஜமிய்யத்துள் உலமாவின் சமுதாயத்தலைவர்களை நம்பினால் இலங்கை முஸ்லீம்கள் நம்முடைய தாய் நாட்டை இழந்து நடுத்தெருவுக்கு வரவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏட்படும் என்பதில் எவ்விததிலும் சந்தேகம் இல்லை.
    இப்போதே ஒரு முடிவை எடுங்கள் இந்த கேடு கேட்ட ஜமிய்யத்துள் உலமாவுக்கு ஜால்ரா போடுவதா? என்பதை.

    ReplyDelete
  19. இது சாதாரனவிடயமல்ல முழு சமூகத்த்யும் ஒற்றுமை படுத்தவேண்டிய ஜம்மியத்துல் உலமா மூன்றாகபிரித்ததை வன்மெயாக கண்டிக்கிறேன் .

    ReplyDelete
  20. mudiveduppawarhal pidiwaathamaaha erunthal(pibaharan poala)onrum saiyamudiyathu.

    ReplyDelete
  21. நவாஸ் செளபி, உங்களுது இந்த கருத்து மிகவும் முக்கியமான கருத்தாகும். கட்டாயம் இந்த விடயம் கருத்தில் கொள்ளப்பட்டு நடைமுறைபடுத்த வேண்டும்.

    அகில இலங்கை ஜம்யதுல் உலமாவின் தலைவரோ அல்லது கிண்ணியா ஜம்யத்துல் உலமாவின் தலைவரோ தங்களது பதவியை ராஜினாமா செய்வதுதான் நாகரீகமான செயலாகும். அப்போது தான் எதிர்காலத்தில் இப்படியான குழப்பங்கள் நடை பெறாமல் ஒரு பொறுப்பு வாய்ந்த முடிவை எடுப்பார்கள் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

    ReplyDelete

Powered by Blogger.