Header Ads



சமூக, சமய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வல்லமை எமக்குள்ளது - மஹிந்த

எவரும் எந்தவொரு விடயத்தையும் பகிரங்கமாக தெரிவிப்பதற்கான உரிமை தற்போது இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கம்பனை தொழுவ பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மக்கள் சந்திப்பு பிரதமர் D.M. ஜயரத்ன தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன்போது ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில்,

'இங்கு ஜனநாயகம் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். வெளிநாடுகளுக்குச் சென்று நான் சர்வாதிகாரி என்று கூறுகின்றனர். ஏன் சர்வாதிகாரி என்கின்றனர் என்று எனக்குத் தெரிவதில்லை. இந்த 3,4 பேர் ஏன் சர்வதிகாரி என்று கூறுகிறார்கள் என்று நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். மேடைகளில் இருந்து கொண்டு பகிரங்கமாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்,' 

"நாடு என்ற ரீதியில் தேசிய பிரச்சினை, சமயப் பிரச்சினைகள் மற்றும் சமூக பிரச்சினைகள் அத்தனைக்கும் தீர்வு காணும் வல்லமை எமக்குள்ளது"  நாடு, சமயம், சமூகம் என அனைத்தையும் கட்டியெழுப்புவதே சிறந்தது எனவும் பெளத்த சாசனத்தைப் பாதுகாத்து கட்டியெழுப்புவது போலவே அனைத்து சமயங்களையும் பாதுகாத்து சகவாழ்வை உருவாக்குவது முக்கியம் 

பெளத்த சாசனத்தில் நிலவிய பிரச்சினைகள் பல கலந்துரையாடல்கள் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன.நாட்டில் பிரச்சினைகள் உள்ளன. சமயங்களில் பிரச்சினைகள் உள்ளன. சமூகங்களில் பிரச்சினைகள் உள்ளன. அத்தனை பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடிய வல்லமை எமக்குள்ளது. எமக்கு சிறந்த நாடு உள்ளது. நாடு என எமக்கு ஒன்று இல்லாவிட்டால் சமயத்தை வளர்க்கக்கூடிய சூழல் இருக்காது. நாம் நாட்டில் சிறந்த சூழலை உருவாக்கியுள்ளோம். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளோம்.

இதனால் நாம் அனைவரும் இணைந்து எதிர்கால பரம்பரையைப் பாதுகாக்க வேண்டும். சகல இன, மதங்களும் சமூகங்களும் ஒன்றாகக் கைகோர்த்து எதிர்காலத்தை சிறந்ததாகக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

4 comments:

  1. நீங்கள் கூறும் எதிர்கால சமூகம் என்பது பெளத்த மேலாதிக்கத்தை ஒங்க செய்து ஏனைய சமூகங்களை அடிமை வாழ்வுக்கு இட்டு செல்வதே ஒழிய வேறு எதுவாக இருக்கும்.

    ReplyDelete
  2. your r the lier.never get that power

    ReplyDelete
  3. உண்மைதான் உதட்டளவில் மட்டும் உள்ளத்தில் இல்லியே

    ReplyDelete
  4. பேசுவது ஒன்றும் செய்வது அனைத்தும் படுமோசமான செயல்களே, உம்மால் முடிந்தால் இன்றுவரை நாட்டில் பள்ளிகள் உடைக்கப்படுகின்றனவே அவைகளை உம்மால் நிறுத்த முடியாமைக்கு காரணம் என்ன? அதை நீங்கள் முன்னின்றும் அணுசரணையுடனும் செய்வதனால்தானா? எமக்கு உம்மேல் கோபமில்லை நாட்டை இனங்களுக்குள் மோதல்களை உருவாக்கி தமது சுய இலாபத்திற்கான அரசியலை நடந்தும் தலைவர்கள் யார் என்பதை நாட்டின் சகல சமுதாய மக்களும் இன்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் இனங்கண்டுள்ளார்கள் அவர்களுக்கான சரியான முடிவுகள் நாட்டு மக்கள் அனைவராலும் எடுக்கப்படும் என்பது நிச்சயமாகிவிட்டது இதை யாரும் நல்லபிள்ளைபோன்ற வார்த்தைகளால் இனிமேல் மாற்றியமைக்க முடியாது காரணம் மக்கள் உம்மைப்போன்றவர்களால் பலமுறை அனுபவித்துவிட்டார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.