Header Ads



மஹாநாயக தேரர்களுடன் அஸாத் சாலி சந்திப்பு


கண்டி மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சி பட்டியலில் போட்டியிடும் தேசிய ஜக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி இன்று (28.08.2013) கண்டியில் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மஹாநாயக்க தேரர்களை சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பின் போது தேசிய ஜக்கிய முன்னணியின் கொள்கைகள் குறித்து மஹாநாயக்க தேரர்களுக்கு விரிவாக விளக்கம் அளித்த அஸாத் சாலி நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தான் அர்ப்பணிப்புடன் பணியாற்ற உறுதி பூண்டுள்ளதாக கூறினார். அஸாத் சாலியின் கருத்துக்களை ஆழமாக செவிமடுத்த மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் திப்பொடுவே ஸ்ரீ சுமங்கல தேரர் தேசிய ஐக்கியத்துக்காக குரல் கொடுக்கும் ஒரு அரசியல்வாதியாக தான் அஸாத் சாலியை காண்பதாகவும், இன ஐக்கியத்துக்காக குரல் கொடுக்கின்றபோது பிரச்சினைகளை எதிர் நோக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் இந்த நாட்டில் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் அஸாத் சாலியால்தான் சர்வதேச சமூகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என்பதை தான் அறிந்து வைத்துள்ளதாகவும் கூறினார்.

அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரரை சந்தித்த போது நாடு இன்று மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டுள்ளது.இவ்வாறான நிலைமைக்கு நாடு செல்வதற்கு காரணமாக இருக்கும் சிறுசிறு குழுக்களுக்கு ஆட்சியாளர்கள் முக்கியத்துவம் அளிக்காமல் தேசிய ஒற்றுமையில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.அத்தோடு அஸாத் சாலி கண்டி மாவட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்ய முன்வந்துள்ளதையும் அவர் பாராட்டினார்.

மகாநாயக்க தேரர்கள் இருவரும் அஸாத் சாலிக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். 

ஊடகப் பிரிவு
தேசிய ஐக்கிய முன்னணி


2 comments:

  1. தனி மரம் தோப்பாகாது, முஸ்லிம்களின் பிரச்சினைகளை, சர்வதேசதிற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு சகல முஸ்லிம் அமைச்சர்களுக்கும், ஏனைய புத்திஜீவிகளுடயதும் பொறுப்பாகும்

    ReplyDelete
  2. மல்வத்த பீடங்கள் நம்ம நாட்டில்தான் உள்ளார்கள். அவர்களை எப்போவும் சந்திக்கலாம். ஆனால், அதிரடியா காட்டுற உங்களுக்கு ஐநா உங்க காலடியில் வந்திருக்குறது இன்னும் உங்க கண்ணுக்கு தெரியலியா ஐயா??? ஏன் அவவ கண்டுக்காம இருக்கிங்க சார்?

    ReplyDelete

Powered by Blogger.