Header Ads



வவுனியா மாவட்ட இஸ்லாமியர்களின் விபரம்

 (ஏ.எல்.ஜுனைதீன்)  

   வட மாகாணத்திலுள்ள வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகங்களிலும் மொத்தமாக 12 ஆயிரத்து 341 (7.2%) இஸ்லாமியர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் இறுதிக் கணக்கெடுப்பின் பின்னர் வெளியிட்டுள்ள தனது புள்ளி விபர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இம் மாவட்டத்தில் பிரதேச செயலகப் பிரிவுகள் ரீதியாக வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பற்றிய விபரம் வருமாறு:

பிரதேச செயலகப் பிரிவு
இஸ்லாமியர்களின் எண்ணிக்கை
வெங்கலச் செட்டிக்குளம்
7209   பேர்
வவுனியா
5112   பேர்
வவுனியா வடக்கு      
  15   பேர்
வவுனியா தெற்கு
  05   பேர்



                
      இம் மாவட்டத்தில் மொத்தமாக 1 இலட்சத்து 71 ஆயிரத்து 511 பேர் வாழ்ந்து  கொண்டிருப்பதாகக் கணக்கெடுக்கெடுக்கப்பட்டிருக்கிறது. சமய ரீதியாக இங்கு வாழும் சனத்தொகை பற்றிய விபரம்:


சமயம்
சனத்தொகை
வீதம்
இந்துக்கள்
119286   பேர்
69.6%
பெளத்தர்கள்
 16688   பேர்
 9.7%
ரோமன் கத்தொலிக்கர்கள்
 14857   பேர்
 8.7%
இஸ்லாமியர்கள்
 12341   பேர்
 7.2%
ஏனைய கிறிஸ்தவர்கள்
  7963   பேர்
 4.6%
ஏனைய சமயத்தவர்கள்
   376   பேர்
 0.2%

No comments

Powered by Blogger.