Header Ads



மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் வன்முறை - பள்ளிவாசலுக்கு தீ

மியான்மர் வடக்கு பகுதியில் புத்தமதத்தினர், முஸ்லிம்கள் இடையே மீண்டும் பயங்கர வன்முறை ஏற்பட்டுள்ளது. மசூதி, கட்டிடங்கள் சந்தைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கலவரத்தை கட்டுப்படுத்த அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மியான்மர் மக்கள் தொகையில் புத்தமதத்தினர் பெரும்பான்மையினராகவும், முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவும் உள்ளனர். வடக்கு பகுதியில் பெரும்பான்மை புத்த மதத்தினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடும் மோதல் வெடித்தது. 
   
இந்நிலையில், முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த, 2 நகரங்களில் குடும்ப கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. முஸ்லிம் தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள கூடாது, பல பெண்களை ஆண்கள் திருமணம் செய்து கொள்ள கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஆங் சான் சூகி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மியான்மர் வடக்கு ஷான் மாகாண தலைநகர் லாஷியோவில் நேற்று மீண்டும் இருதரப்பினருக்கும் பயங்கர மோதல் வெடித்தது.

புத்தமத்தினர்  முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு அவர்களும் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது மசூதி, மார்க்கெட், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். 

இந்த கலவரத்தில் உயிரிழப்பு, பொருள் சேத விபரம் இன்னும் தெரியவில்லை. சம்பவத்துக்கு காரணமான முஸ்லிம் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரை தங்களிடம் ஒப்படைக்க கோரி புத்தமதத்தினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஷான் மாகாணத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த மியான்மர் அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

4 comments:

  1. பைத்தியம் பலவகைப்படும் அதில் இது ஒருவகை

    ReplyDelete
  2. மனித உரிமைகள் மீறல் சபை ம் என்னசெய்துகொண்டிருக்கின்றார்களோ தெரியவில்லை.

    ReplyDelete
  3. நாங்கள் பொறுமை காத்துக்கொண்டும் அல்லாஹ்வின் உதவியை வேண்டிக்கொண்டும் இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ் விரைவில் நாங்களும் எழுவோம்

    ReplyDelete
  4. யா அல்லாஹ்! இக்கயவர்களை உன்னிடமே போறுப்புச் சாட்டுகிறோம். இவர்களின் உள்ளங்களில் பிளவை ஏற்படுத்துவாயாக. இவர்களின் ஒற்றுமையை சிதறச் செய்வாயாக. இவர்களுக்கு மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்தி ஒருவருக்கொருவர் சண்டையிட்டு அடித்துக்கொண்டு சாகச் செய்வாயாக. இவர்களின் சமூகமே இவர்களை ஒதுக்கி ஓரம்கெட்டச் செய்வாயாக. இவர்களின் குற்றம் குறைகளை மக்களுக்கு மத்தியில் பகிரங்கப்படுத்துவாயாக. இவர்களை அவமானப்படுத்துவாயாக. இறைவா! உன்னிடமே பிரார்த்திக்கின்றோம். பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக.

    ReplyDelete

Powered by Blogger.