Header Ads



யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடாத்த முடியாது



யாழ்.மாநகர சபைக்குட்பட்ட சகல தனியார் கல்வி நிலையங்களில் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கான வகுப்புக்களை நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் தேவைகள் மற்றும் ஒழுக்க விழுமியங்களில் அவர்களின் வளர்ச்சி எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல் நேற்று யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்களின் தலைமையில் முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அக் கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமைகளில் சாதாரண தரத்திற்குட்பட்ட மாணவர்களுக்கு வகுப்புக்களை நடாத்த முடியாது. உயர்தர மாணவர்களுக்கு வகுப்புக்களை நடாத்தலாம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணிக்கு முன்னதாக வகுப்புக்களை நடாத்த முடியாது.

இத்தீர்மானங்கள் எதிர்வரும் ஜீன் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் கட்டுப்பாடுகளை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ்.மாநகர முதலவர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அறிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் கௌரவ மாநகர சபை உறுப்பினர்கள் இந்து, கிறீஸ்தவ, இஸ்லாம் மத குருமார்கள் கல்வியியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 



No comments

Powered by Blogger.