May 10, 2013

முஸ்லிம்கள் பொறுமை காக்க வேண்டும் - முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத்


(Tn) நாட்டின் தற்போதைய சூழ் நிலையில் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மிகவும் நிதானத்துடன் செயற்பட வேண்டுமென மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடையடைப்பு, ஹர்த்தால் மற்றும் உண்ணாவிரதம் போன்ற செயற்பாடுகள் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு உட்பட்டவையல்ல. எனவே எந்தவொரு விவகாரத்தையும் ஜனநாயக வழியிலான பேச்சுவார்த்தை மற்றும் பிரார்த்தனைகள் மூலமாக தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டுமென அவர் மேலும் கேட்டுள்ளார்.

ஆஸாத் சாலி கைது செய்யப்பட்டிருப்பது சட்டத்திற்குட்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பாக குரல் கொடுத்தார் என்ற ஒரே காரணத்திற்காக முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அமைப்புக்கள் அஸாத் சாலியின் விடுதலை குறித்து ஜனாதிபதியிடம் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் உணர்ச்சிக்கும் வெற்றுக் கோஷங்களுக்கும் அடிமைப்பட்டவர்களாக செயற்படுவதன் மூலம் நிலைமையினை சிக்கலாக்கிக்கொள்ளக்கூடாது என்றும் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கடையடைப்பு, ஹர்த்தால் செய்வதன் மூலமாக அரசாங்கத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்குமிடையில் பய னற்ற முரண்பாடுகளைத் தோற்றுவிக்கக் கூடாது.

சமூக விரோத சக்திகளின் சதிவலையில் கிழக்கு முஸ்லிம்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது என்றும் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் கேட்டுள்ளார்.

10 கருத்துரைகள்:

ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரெம்பப் புதுமையாக இருக்குது

சாத்தான் வேதம் ஓதுகிறது.

தங்களுக்கு எனின் எதுவும் சரி, ஆணால் அடுத்தவருக்கு எனில் இஸ்லாத்தில் எதுக்கும் இடம் இல்லை.

முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் பேசி (வலியுரித்தி) எதைக்கிளித்திருக்கிரார்கள்?

உங்களைப்போன்ற கையாலாகாத அரசியல்வாதிகள் (அரசின் கைக்கூலிகள்)இருக்கும்வரை முஸ்லிம்கள் இவ்வாறுதான் செய்வார்கள். அதில்மாற்றமில்லை.

உங்கள மாதிரி நாங்களும் அரசாங்கம் எது செய்தாலும் பொறுமையா இருக்கனும் என்று சொல்றிங்க...... நல்ல தலைவர்...

நன்றி விசுவாசம் !!! என்ன செய்வது நம் சமுகத்தின் நிலைமை இப்படிப்போய்விட்டது.

இஸ்லாத்தில் பொறுமைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதற்காக, இந்த அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்தைப் "பொறுமை"க்குள்ளேயே புதைத்துக் கொன்று விடுவார்கள் போலிருக்கிறதே..!

ஏன் இவர்களின் கண்களில் அதிகாரவர்க்கத்தினரின் அநீதிக்கும், அடக்குமுறைக்கும், அக்கிரமத்திற்கும் எதிராக உலகெங்கும் இடம்பெற்று வருகின்ற விழிப்புணர்வுப் போராட்டங்கள் எதுவும் படுவதாக இல்லை.

இவர்கள் எல்லோரும் இதுவரை காலமும் தூங்கி வழிந்ததைப்போல் இப்போதும் தூங்கிக் கொண்டே இருந்நிருக்கலாம்.

-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

Mr. Majeed Unkal Iruppukak Muslimkalai Kurupoddu Pasathir Ceylon Muslim anne pavam Saithom Nathi atra Samukamak Poividom Anathai Samukamak Poi Viddum (Aniyay Aachi karrkku Thunai Ponal Avar Islathil irunthu Veliyarividdar)-Thaprani Hathis-

முஸ்லிம்களுக்கு புத்திசொல்வதற்கு ஒரு ஆளில்லாத குறை ஒன்றுதான்.

பொய் சொல்லி வயிற்றுக்காகப்போராடும் ஏழைமக்களை ஏமாற்றுவதன் மூலம் அவர்களின் வயிற்றிலடிப்பது. மார்கப்படி அனுமதிக்கப்பட்டுள்ளதா? பதவியில் இருப்பதனால் இங்கு யாரும் மேதைகளல்ல, தன்வயிற்றுக்காகப்போரடிக்கொன்டிருப்பவன் ஒருபோதும் உம்மைப்போல அறிவுகெட்டவர்களுமல்ல மற்றவனை ஏமாற்றிப்பொழப்பு நடத்துபவனுமல்ல. செல்வந்தனைவிட ஏழை மெகுவிரைவில் சொர்க்கத்தை அடைவதாக இறைவன் சொல்கின்றான்.........

இது நாள் வரைக்கும் முஸ்லிம்களுக்கு நடந்து கொண்டிருக்கும் அனீதங்களுக்கு யார் யார் குரல்கொடுத்தார்களோ அவர்கள் மட்டுமே முஸ்லிம்களைப்பற்றி பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள். மற்றவர்கள் யாவரும் என்னென்ன செய்து கொண்டிருந்தீர்களோ அதைமட்டும் செய்யது உங்கள் ஆசனங்களையும் பெயரையும் தக்கவைத்துக்கொள்ளுங்கள் அதுவே உங்களுக்குப் போதுமானது.....

உங்களுக்கு ஒரு நெருக்கடி வந்து கடையடைப்பு ஹர்த்தால் பண்ணினா அதெல்லாம் இஸ்லாம் ஆகுமோ.

ஆமாம், இவருக்கும் பதவி கிடைத்ததால் கிடு கிடு என்று பேசுகிறார்.
இல்லாவிட்டால் அதோ கெதிதான்........................

இஸ்லாமிய கோட்பாடுகளை பற்றி இப்பதான் இவர் பேசுகிரார். கடந்த சில மாதங்களாக இவர் என்ன அமேரிக்கா போயிருந்தாரா தெரியவில்லை. அல்லது அரசாங்கம் கொடுத்த சொகலட்டை மற்றும் வாயில் வைத்து உருஞ்ஞிகிட்டு இருந்தாரோ தெரியவில்லை. பாவம் ஒன்றும் தெரியாத பப்பா.

கடையடைப்பு, ஹர்தால், உண்னாவிரதம் இவைகள் ஜனநாயக வழியில்லை மற்றும் அவைகள் இஸ்லாதின் கோட்பாடுகளுக்கும் அப்பாற்பட்டவை என்று இவரால் எப்படி சொல்லமுடியும். மார்க்கத்தை சரியாக படித்திருந்தால் இப்படி பேசியிருக்க மாட்டார். ஏதோ ஒரு உள்நோகத்திற்க்காக பேசுகிறார் என்பது நிச்சயம்.

இதற்க்கு முன் காளங்களில் இது போன்ற கடையடைப்பு, ஹர்தால் இன் நாட்டில் நடிக்கவுமில்லை மக்களுக்கு அது பற்றி ஏதும் தெரியாது என்ற தோரணத்தில் இவர் இப்ப வாய்திரந்திருக்கரார். நல்லாயிருக்குது இப்பெறியவர் நடிப்பு. இதற்க்கு முன் நடந்த ஹர்தால்களுக்கு நீங்கள் திரந்த உங்கள் வாயின் நீலம் எவ்வளவு Sir? இதா 000000000000000000000000

பாராளுமன்றத்தில் இஸ்லாத்தை கொச்சை படுத்தும் போது அவைகளுக்கெதரிகாக உங்களை பொன்றவர்கள் ஏன் வாயை திரக்க வில்லை அப்போது எங்கே போனது உங்கள் இஸ்லாமிய கோட்பாடுகள்.
பல மாதங்களாக இஸ்லாதிற்க்கு எதிராகவும், முஸ்லிங்களை கொச்சை படுத்தியும் திரிந்தவர்களுக்கும் அவ்வமைப்புகளுக்கும் எப்படி எங்கே நீங்கள் உங்கள் வாயை திரந்தீர்கள்? முட்டையை விழுங்கி ஏப்பம் விட மாதிரம் வாயை திரக்கும்போது எப்படி Sir கோட்பாடுகள் அங்கே வரும்.....

பதவியின் மோகம் தீயின் கோலம்!
பணத்தின் பாசம் தப்பின் கோலம்!
உண்மையின் நீலம் அழியா கோலம்!


Post a Comment