May 17, 2013

இலங்கை சிங்களபௌத்த நாடு என ஏற்றுக்கொள்ளாதோர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்


இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவ்வாறானவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்தது. இங்கு இயங்கும் சர்வ மத அமைப்புக்களை தடைசெய்ய வேண்டும். இவ் அமைப்புக்கள் சிங்கள பௌத்தர்களை அழிக்கும் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கின்றன என்றும் அவ் அமைப்பு தெரிவித்தது.

கொழும்பிலுள்ள சம்புத்தத்வ மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்,

இலங்கை பல்லினங்களுக்குச் சொந்தமான நாடல்ல. சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமான அம்மக்களின் ஆட்சியதிகாரத்திற்கு உட்பட்ட நாடாகும். எனவே, இங்கு வாழும் அனைவரும் இலங்கை சிங்கள பௌத்த நாடு என ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதனை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு, வெளிப்படுத்தாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதற்கான எமது போராட்டம் ஆரம்பமாகும்.

சர்வமத அமைப்புக்கள் இங்கு அவசியமில்லை. இவ் அமைப்புக்கள் சிங்கள பௌத்தத்தை அழித்தொழிக்கும் நிகழ்ச்சிநிரலையே முன்னெடுக்கின்றன. எனவே, இவ் அமைப்புக்களை தடைசெய்ய வேண்டும்.

தானசாலை என்ற பெயரில் பலாத்காரமாகப் பணம் கேட்டு நடத்துவது, இதன் பின்னால் மறைந்து கொண்டு மது அருந்துவது போன்றவை பௌத்த தர்மத்திற்கு மாறானதாகும். இவையனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்.
கேளிக்கை வெசாக்கிற்கு இதுவே இறுதி வருடமாகட்டும். அடுத்த வருடம் இதற்கெல்லாம் இடமளிக்க மாட்டோமென்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவித்தார். vi

15 கருத்துரைகள்:

THIS MUST BE TRANSLATED AND POSTED IN FOREIGN MEDIA.

please if any one can translate &send it to foreign media please hurry up dont delay

who is this bull shit to put orders like this.Ado awagnasararaya umbata thamai rata dala yanne wenna americawata.

Did your father tell you that this country belongs to only Buddhists??? You are a moran...May be your great great grandpa said this to you!! Then this country belongs to Weddas..if you can go on searching the original people who came to SLK first then they are not Buddhists.

what the hell you are said this?

இவனுக்கு இப்ப பைத்தியம் நல்லா முத்திபோய்ச்சி,இனி அனுப்ப வேண்டிய இடத்துக்கு தான் அனுப்பி வைக்க வேண்டும்.

There are lot of tamil typing mistakesvby me so please read with rearange sorry for difficult SriLankaக்கு எல்லொரும் வெலியில் இருன்டு வன்டவர்கலெ.
ஆதாவது பொடு பல சென கூருவது, அவர்கல் மாத்திரம் தான் இந்த மன்னின் சொன்டக்காரர்கலாகும். எனயவர்கல் அனெய்வரும் வெலி நாட்டில் இருன்டு வன்டு srilankavil மனம் முடித்துக் கொன்டு பரவினார்கல் என்பதெ.
BBஸ் புரின்டு கொல்ல வென்டும் அவர்கலும் வன்டவர்கலெ என்ரு,
அதாவது Vijayaவும் கூட்டதாரும் பாரதம் இருந்து நாடு கடத்தி ilangaயெய் அடைந்து விஜய் குவெனி யெய் மனம் முடித்து பிரகு குவெனியின் பெட்டொர்கலெய் கொன்ரு, ஆட்சி அமெய்து பிரகு குவெனியெயும் கொன்ரு விட்டு. ஈன்னும் பல மனைவி மார்கலெய் பாரதில் இருன்டு கொன்டு வன்டு மனம் முடித்து. ஆரியர்கல் பலரெய் பாரதம் இருன்டு அலெய்து வன்டு குடியிருப்புகலெய் இலஙயில் யெட்படித்திய பிரகு புத்த பெருமால் இலஙெய் வன்டும் ஷில புட்ட பிக்குகல் வன்டும் புத்த மதம் பரவியது என்பது ஷுருக்கமான வரலாரு ஆகும். இது தான் பாடசாலெய் புத்தாம் கலிலும் படிப் பிக்க படு கின்ரது. ஆதட்கு முன்பு தொட்டெ இலஙயில் கோத்த்ரிக்கயர் கலும் இருன்டு வன்ட சான்ருதல் வரலாட்ரு புத்தகம் கலில் காஙிரோம். Muslim கலும் வன்டவர்கல் தான் ஆனால் இச்லாம் வருவதட்கு முன்பு இருந்தெ அரபியர் கல் வியாபாரம் ஷம்பன்டமாக வன்டுல்லதெயும்evidance காஙிரோம். ஈவர்கல் கூருகிரார்கல் முச்லிம் கல் இப்பொ 300 400 வருடமாக தானம் இலஙெயில் இருப்பதாக. ஈலஙயில் இருக்கும் பல மச்ஜிட் கல் 1000 வருட வரலாரெய் எத்தியுல்லது
சொல்லும் பொய்ய யும் பொருன்ட சொல்லுஙல். ஆனெய்வரும் உலகதுக்கு வன்டவர்கலெ எல்லொருக்கும் வாலும் போது சமமாக வால உரிமயுன்ரு ஜனனாயக சுகன்டிரம் உன்டு வட்புருத்த யாருக்கும் உருமெய் இல்லெய்.

Please translate this in English and inform to international, get justice immediately.

ஆடத் தெரியாதவன் மேடை சரி இல்லை என்று சொன்ன கதைதான் இவனுடையதும் .....மது அருந்துவது பௌத்த மதத்துக்கு எதிரானது தான் ,அனால் அதை சொல்வதற்கு இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது????மது போதையில் வாகனம் செலுத்தி accident செய்து பொலிசிடம் மாட்டி நீதிமன்றம் சென்று தண்ட பணம் செலுத்தி பிணையில் வந்தது நியாபகம் இல்லையா??????????யார் என்ன சொன்னாலும் இது எல்லோருக்கும் உரித்தான நாடு....இலங்கை தேசம் ..

Ivarin intha pilaiyaana karuththukku anaivarum kandikka vendum.

பைத்திய காரன் பத்தும் சொல்வான் போனால் போகட்டும் விட்டு விடு

யாரு வேணாம் என்று சொன்ன?
எங்களுக்கும் விருப்பம்தான் எங்காவது ஒரு நல்ல நாட்டுல வாழனும் என்று....
முஸ்லிம்கள் எல்லோரும் வெளியேறி விட்டால் நீயெல்லாம் பிச்சைதான் எடுக்கணும்....

لاتبالوا كاماته لانه يدعي أن الأرض مخلوقة له ولأسرته فقط

oh My GOD. What is this hell talk of Buddist Monk? pleas translate in English and Post now US new paper. eighter pls send a copy to CID and we will see the decition.

Post a Comment