Header Ads



‍பலங்கொடை, குரகல பாறையிலிருந்து ஆதிகால மனித எச்சம் மீட்பு


(NF) கற்காலத்தில் வாழ்ந்த ஆதிமனிதனுடையது என கருதப்படும் மனித எச்சம் பலங்கொடை - குரகல பாறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட யுகத்தில் வாழ்ந்த ஆதிமனிதனின் எச்சம் என அனுமானிப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் அகழ்வாராய்ச்சியாளர் தெரிவித்தார்.

இந்த மனித எச்சம் எந்தக் காலத்திற்குரியது என்பதை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மானிட எச்சமானது இதற்கு முன்னர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கால ஆதிமனிதன் தொடர்பான சாட்சிகளுக்கு இணையானது என்று தொல்பொருள் அராய்ச்சி திணைக்களத்தின் அகழ்வாராய்ச்சியாளர் கூறினார்.

அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது குறித்த யுகத்தில் ஆதிமனிதர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் ஆயுதங்கள் மற்றும் கடற்சிற்பிகள் உட்பட இதர பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

3 comments:

  1. இந்த ஆதிகால எச்சம் இந்தக்கட்டத்தில் கன்டுபிடிக்கப்பட்டதெப்படி? முஸ்லீம்களுடன் இவ்விடம் தொடர்பாக மோதிகொன்ன்டிருக்கும் நிலையில் புதிய கன்டுபிடிப்பு. எங்கு போய் முடியுமோ? முஸ்லீம்கள் ஜாக்கிரதை

    ReplyDelete
  2. ஆதம் நபி வாரிசுகளான முஸ்லிம்களின் எச்சம். முபாறக் மௌலவி

    ReplyDelete
  3. இது மாத்தளை மனித எலும்புக்கூடுகள் கிடங்குக்கு சம்மந்தமான் இடமாகவும் இருக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.