இஸ்ரேல் - சிரியா எல்லையில் பதற்றம்
சமீபகாலமாக இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா போராளிகளுக்கு சிரியா ஆயுதங்கள் கொடுத்து உதவுவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.
எனவே ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வலியுறுத்தி சிரியா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் 3 தடவை குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு சிரியாவும், இஸ்ரேலில் ஆக்கிரமித்துள்ள கோலன் ஹெய்ட்ஸ் பகுதியில் குண்டு வீசி தாக்கியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை நிலவியது.
தற்போது, அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிராக போராடும் புரட்சி படைக்கு இஸ்ரேல் ஆயுத உதவி வழங்குவதாக சிரியா குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் சிரியா எல்லைக்குள் புகுந்த இஸ்ரேல் ராணுவ வாகனம் சிரியா ராணுவத்தினரால் தாக்கி அழிக்கப்பட்டது. இதனால் இஸ்ரேல் ஆத்திரம் அடைந்தது.
எனவே, பதிலுக்கு சிரியா ராணுவம் மீது துப்பாக்கியால் சுட்டது. சிரியாவும் பதிலுக்கு சுட்டதால் இரு நாடுகளின் எல்லையில் பதட்டம் நிலவுகிறது.

Post a Comment