நாமல்வத்த கிராம முஸ்லிம்களின் ஏக்கத்திற்கு விடிவு கிட்டுமா..?

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்டத்தில் மொறவௌ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீளக்குடியேறிய கிராமம் நாமல்வத்த கிராமமாகும்!
முஸ்லிம் இனத்தவர்களும்,சிங்கள இனத்தவர்களும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய கிராமமான இக்கிராமத்தில் எகமுது எனும் பெயரில் விவசாய சங்கம் உருவாக்கப்பட்டு இரு இனத்தவர்களும் ஒற்றுமையுடன் விவசாயத்தை மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. மொறவௌ குளத்தை நம்பி விவசாயம் செய்யும் அப்பாவி விவசாயிகள் இன்று தலையில் கையை வைத்த வண்ணம் தமது வயலுக்கு இன்று தண்ணீர் வரும் நாளை தண்ணீர் வரும் என வாய்க்காலை பார்த்துக்கொண்டிருப்பதை நேரில் சென்ற எனக்கு தெரிகின்றது.
யுத்தம் காரணமாக பல வருடங்கள் அகதிமுகாம்களிலும்,உறவினர்களின் வீடுகளிலும் வாழ்ந்து வந்து தற்போது விவசாயம் செய்கையை மேற்கொண்டாவது ஜீவியத்தை கழிக்க முடியும் என எதிர்பார்த்து வந்த எமக்கு இன்று விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் தண்ணீர் இன்றி தவிர்த்துக்கொண்டிருக்கின்றோம். எனவே எமக்கு விவசாய பயிர்ச்செய்கைளை மேற்கொள்ள அரசு கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மொறவௌ குளத்தில் அன்னளவாக 28 அடி தண்ணீர் நிரம்பி இருந்தும் வடிகால் சீரற்று காணப்படுவதினாலேயே எமக்கு தண்ணீர் வருவதில்லை.இவ்விடயங்கள் குறித்து விவசாயிகள் தமது கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
விவசாய சங்க தலைவர் ஏ.எம்.அபூபக்கர் (செத்தா) இவ்வாறு கருத்து தெரிவிக்கின்றார்.
1963ம் ஆண்டு எனது தாய் தகப்பனோடு சிறுவயதில் நாமல்வத்த பகுதிக்கு வந்தேன்.நான் வரும் போது எனக்கு 06 வயது! அதிலிருந்து எனது தகப்பன் விவசாயம் செய்து வந்தார்.அன்று தொடக்கம் இன்று வரை நான் விவசாயியாகவே இருக்கின்றேன். 1985ம் ஆண்டு 08ம் மாதம் 22ம்திகதி நாமல்வத்த பகுதியில் இருந்து கால் நடையாக காட்டு வழியில் தம்பலகாமம் பிரதேச முள்ளிப்பொத்தானைக்குச் சென்று 2003ம் ஆண்டு வரை அகதியாகவே வாழ்ந்து வந்தேன்.
யுத்தம் முடிவடைந்த 2003ம் ஆண்டு மீண்டும் நாமலவத்தை பகுதிக்கு மீளக்குடியேறினேன்.அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்ளை மேற்கொண்டு வருவதை ஊடகங்கில் பார்த்தும்,கேட்டும் இருக்கின்றோம்.அந்த ஆவலுடனும், ஆசையுடனும் எதிர்பார்த்தோம். எங்களுக்கும் இவ்வாறான தொழில் ரீதியான தொழிற்சாலைகள் அமைத்துத்தருவார்கள் என! முஸ்லிம்கள் 600 குடும்பங்களைச்சேர்ந்தவர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றோம். விவசாயத்தையே நம்பி வாழும் நாங்கள் தற்போது வடிகாலில் தண்ணீரின்றி தவித்துக்கொண்டிருக்கின்றோம். மோறவௌ குளத்தில் 28 அடி தண்ணீர் நிரம்பி காணப்படுகின்றது என சந்தோசமாக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளின் ஆலோசனைப்படி விவசாயம் செய்ய தொடங்கினோம்.ஆனால் 2013-04-25ம் திகதி தொடங்கிய நாள் முதல் உழவு போட்ட வயல் காய்ந்தும்,விதைத்த வயல் கங்கலவு கட்டிக்கொல்ல இயலாத நிலைக்கும் சுமார் 100 க்கும் 60 வீதமான விவசாயம் காய்ந்தும் காணப்படுகின்றது. இக்காரணம் வாய்க்காலில் தண்ணீர் வருவதில்லை.
மொறவௌ குளத்தில் இருந்து 14 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள நாமலவத்த விவசாயிகளி;ன் நலன் கருதி வாய்க்காலை சீர்திருத்தி தண்ணீரை எமது விவசாயத்து பெற்று தருமாறு வேண்டிக்கnhள்கின்றேன்.
ளூளூளூ டபிள்யூ.ஏ.தேசப்பிரிய ஆர்-67 நாமல்வத்தை பகுதியில் வசித்து வருகின்றேன். நான் கூறிவது மொறவௌ குளத்திலிருந்து வரும் தண்ணீர் மொறவௌ சந்தியில் உள்ள சைபன் என சொல்லப்படும் நீர் வரும் வழி பெட்டி வடிவத்தில் காணப்படுவதினால் நாமல்வத்த பகுதிக்கு தண்ணீர் வருவது தாமதம் ஏற்படுகின்றது. காரணம் பெட்டி வடிவத்தில் வடிகால் அமைக்கப்பட்டிருப்பதால் நீர் இரு பக்கங்களினாலும் வீனாக வெளியேறுகின்றது. நான் கூற விரும்புவது வீ எழுத்து முறையில் வடிகால் அமைப்பபை செய்ய வேண்டும். அப்படி செய்தால் நாமல்வத்த பகுதிக்கு தண்ணீர் வரும். 03 ஏக்கர் வயல் செய்து வருகின்றேன்.கடந்த வருடம் மாஸ்கன்னையில் நஸ்டப்பட்டு விட்டேன்.இக்கன்னையாவது இலாபம் பெற முயற்சித்தும் குளத்தில் நீர் அதிகமாக இருந்தும் வடிகால் சீர்கேட்டினால் தண்ணீர் வருவதில்லை எனவும் தெரிவிக்கின்றேன்.அன்னளவான 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் செய்யப்பட்டு வருகின்றது. நீர்பாசன தினைக்களத்தினால் சிறந்த முறையில் பார்க்காதமையினாலேயே இப்பிரச்சனைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. எனவே இறுதியாக கூறிக்கnhள்ள விரும்புவது கூடிய விரைவில் வடிகால் வசதியை திருத்தி தருமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்கின்றேன்.
எம்.எஸ்.எம்.தையிப் ஆகிய நான் நாமல்வத்த பகுதிக்கு 2004ம் ஆண்டு முள்ளிப்பொத்தானையிலிருந்து வந்தேன். வந்தது முதல் விவசாயம் செய்து வருகின்றேன். மழைகாலத்தில் பெரும்போக விவசாயத்தை மட்டும் செய்து வந்தேன்.எனது குடும்பத்தில் மிகவும் பொருளாதார சிக்கலினால் சிறுபோகத்தையும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. 08 ஏக்கர் வயலை ஒரு கன்னைக்கு 40 ஆயிரம் ரூபாய் கொடுத்து குத்தகைக்கு செய்கின்றேன்.எனது மகள் மற்றும் மனைவியின் காதிலும் ,கழுத்திலும் அணிந்திருந்த நகையை வங்கியில் அடகு வைத்தே குத்தகை பணத்தை கொடுத்தேன்.நான் வயல் செய்யும் இடத்துக்கு தண்ணியே வருவதில்லை.விதைத்து 15 நாளாகி விட்டது.இருந்த போதிலும் இன்னும் ஓரிரு நாளில் மழை பெய்யா விட்டால் நஞ்சி குடிக்க வேண்டிய நிலை ஏற்படும்.விவசாயத்தை நம்பியே காலத்தை கழித்து வருகின்றோம்.காலை நேரம் தொடக்கம் பின்னேரம் வரும் வரை வாய்க்காலை பார்த்த வண்ணம் இருக்கின்றேன். எனக்கு நிம்மதியாக வாழ பணம் தரத்தேவையில்லை. விவசாயம் செய்ய தண்ணீரையாவது தருவீர்களா?
தாஐ_தீன் றபாய்தீன் ஆகிய நான் 1985ம் ஆண்டு அகதியாக போவதற்கு முன்னால் 1982ம் ஆண்டு 17 அடி தண்ணீரில் டி 09ம் வாய்க்காலில் சிறுபோகம் செய்தோம்.எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. 2003ம் ஆண்டு பீஸ் திட்டத்தில் செய்யப்பட்ட வாய்க்கால் ஊடாக தண்ணீர் கிடைப்பதில்லை.ஏன் காரணம் எனவும் கேள்வியாக கேட்கின்றேன்.அரசாங்கம் எமக்கு முடிவொன்றை தர வேண்டும்.தண்ணீர் பிரச்சனை தொடருமானால் ஊரையே விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.விவசாயத்தை நம்பி வங்கி கடனை பெற்று தற்போது ஆபத்தான நிலையில் அதாவது கட்டாத பட்சத்தில் வழக்கு தொடரும் பயத்தில் இருக்கின்றோம்.இம்முறையாவது கடன்களை கட்ட முயற்சித்தும் விவசாயத்தை மேற்கொண்டோம்.இருந்தும் வடிகால் சீர்கேடு காணப்படுகின்றது. எனவே இவ்விடயத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

Post a Comment