Header Ads



மட்டக்களப்பு உலமாக்களுக்கான கல்வி கருத்தரங்கு


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

உலக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் அனுசரனையுடன் அபிவிருத்திற்கும் மனிதாபிமானத்திற்குமான சர்வதேச அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உலமாக்களுக்கான கல்விக் கருத்தரங்கு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் காரியலாய மேல்மாடியில் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) தலைமையில் இடம்பெற்றது.

சவூதி அரேபிய நாட்டின் சிறந்த அறிஞர்களின் விரிவுரைகளுடன் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் சவூதி அரேபிய ரியாத் ஜாமியதுல் இமாம் ஸூஊத் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் உமர் இப்னு ஸூஊத் அல் ஈத், சவூதி அரேபிய சமூக நலன் விரும்பியும் நிதாஉல் கைர் அமைப்பின் தலைவருமான அஷ்ஷெய்க் அபூ ஸாலிஹ் ஹாலித் தாவூத்,சவூதி அரேபிய அல் கஸீம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அபூ ஸூலைமான் அல் ஹத்லூல்,ரியாத் அல் குர்-ஆன் மனனப் பிரவு உப தலைவர்  அஷ்ஷெய்க் அப்துர் றஹ்மான், சவூதி அரேபிய வளவாளர்களான அஷ்ஷெய்க் இப்றாஹீம், அஷ்ஷெய்க் ஸர்ஹான்,காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி), காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய தலைவர் அஷ்ஷெய்க் அலியார் (ரியாதி), காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் ஆயூட்காலத் தலைவர் மௌலவி முஸ்தபா (பஹ்ஜி),காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி கவிமனி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி), காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் ஜிப்ரி (மதனி) மற்றும் காத்தான்குடி ,ஏறாவூர்,கல்குடா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ஜம்மியதுல் உலமா சபை பிரதிநிதிகள்,உலமாக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இங்கு 'உலமாக்கள் ஒன்றினைவதன் மூலமே சுபீட்சமான சமூகத்தை கட்டியெழுப்பலாம்' எனும் தலைப்பில் சவூதி அரேபிய ரியாத் ஜாமியதுல் இமாம் ஸூஊத் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் உமர் இப்னு ஸூஊத் அல் ஈத், 'அபிப்பிராய பேதங்களின் போது உலமாக்கள் எவ்வாறிருக்க வேண்டும்' எனும் தலைப்பில் சவூதி அரேபிய அல் கஸீம் பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அபூ ஸூலைமான் அல் ஹத்லூல் மற்றும் உலமாக்களால் பல்வேறு தலைப்புக்களில் விரிவுரைகள் இடம்பெற்றன.

இதன்போது உலமாக்களுக்கு இராப்போசன விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.