இலங்கையை முன்மாதிரியாகக் கொண்டு உகண்டாவில் இலவச சுகாதார சேவை
இலங்கையை முன்மாதிரியாகக் கொண்டு உகண்டா அரசாங்கம் இலவச சுகாதார சேவையை அந் நாட்டில் அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் உகண்டாவின் எட்டு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது.
இலங்கையின் இலவச மருத்துவ சேவை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளவென வருகை தந்துள்ள உகண்டா நாட்டு மருத்துவக் குழு ஒருவார காலம் இலங்கையில் தங்கி இருக்கும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Post a Comment