Header Ads



சுய விசாரணை செய்து கொள்வது...!


(அல்ஹாபிழ் மௌலவி ஏ ஸி  அஷ்ரப் பலாஹி காஷிபி)

சர்வ புகழும், புகழ்ச்சியும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது.அவன் ஒருவனே இந்த உலகின் நித்திய ஜீவன்.வையகம் சிறக்க வந்த,வள்ளல் நபி(ஸல்)அவர்கள் மீதும்,அவர்களின் சஹாபாக்கள் .குடும்பத்தார் அனைவர் மீதும் சலவாத்தும் சலாமும் உண்டாவதாகுக.

அமைதியின்மையும்,அவநம்பிக்கையும்,கவலையும் நிறைந்த காலமிது.மனித நேயம்.அன்பு, பரிவு,கருணை,ஒற்றுமை போன்ற,மனித கலாச்சார விழுமியங்கள் எல்லாம், மனித இனத்திடமிருந்து விடைபெற்றுச்செல்லும் நவீன ஜாஹிலியக்காலமிது.மனித உயிர்களுக்கு அறவே பெறுமதியில்லாத நிலை காணப்படுகின்றது,இப்படிப்பட்ட காலத்தில்,புதிய கலாசாரங்களும்.கொள்கைகளும் சித்தாந்தங்களும் மனிதனின் பல்வேறு பட்ட துறைகளில். தோன்றி,மனித இனத்தின் நிம்மதிக்கு உலை வைக்கும் பணியினை செய்து முடிக்கின்றன.இந்தச்சூழ்நிலையில் ,ஓர் இருபத்தியோராம் நூற்றாண்டின் மனித மறுமலர்ச்சியை , நிம்மதியை,சுபீட்சத்தை,விடிவை முழு உலகுமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது.,அந்த எதிபார்த்தலின் விளைவு, எதிர்பார்த்தபடிஇருக்குமா,அல்லது எதிராகப்போய் விடுமா?எனும் பீதியும்.இன்று உலகை அரித்துக்கொண்டிருக்கிறது.இன்று மனித இனம் நிம்மதி என்ற நிழலை நோக்கி அலைந்து கொண்டிருக்கிறது..ஆனால் அந்த நிம்மதியே,மனித இனத்தைப்பின்னே நின்று பின் தொடர்வதை மனித இனம் அறிய முற்படவில்லை

இவ்வாறு நாம் நோக்கும் போது இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் அன்றைய உலகு இருந்த இருந்த நிலையும் ,அறிவியற்றுறையிலே சிகரத்தையடைந்து, விஞ்ஞானத்தைக்கட்டிக்கொண்டு புரளும் இன்றைய உலகின் நிலையும் நடத்தை சார்ந்த அடிப்படையில் ஒன்றாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.மட்டற்ற கீழ்த்தரமான,வக்ர குணமுடைய அக்கால அரேபிய மக்களின் குணைவியல்புக்காகத்தான் அவர்களை,வரலாறு;;அறியாமைக்கால மக்கள்(ஜாஹிலிய்யா);;என நாமம் வழங்கிற்று.ஆனால்அம்மக்கள் சகல பொருளாதார ,சமூக தொழில் நுட்ப விடையங்களிலே முன்னேறிய மக்களாக இருந்தனர்.அவர்களின் குணவியல்புகளை வைத்துத்தான் வரலாறு அவர்களை அவ்வாறு அழைக்கிறது .ஆக ஒரு சமுதாயத்தின் ,அதன் மேம்பாட்டுக்கு அறிவியல் முதிர்ச்சி முக்கியமல்ல.மாறாக  மனித இனத்தின்நற்பண்புகளின் முதிர்ச்சியே உயர் ரக அளவு கோலாக அமைகின்றது.

இன்று மனித இனத்தின் நிம்மதிப்பஞ்சத்திற்கும் பயத்திற்கும்,பீதிக்கும் என்ன காரணம் என்று ஆராயும் போது ,நற்குணங்களும் மனித நேயமும் குன்றியமையுமே இதற்கு முக்கிய காரணியாக அமைகின்றது.எந்த மனிதனிடம் நற்குணங்களும்,நற்பண்புகளும் மனித நேயமும் காணப்படுகின்றதோ அந்த மனிதன் வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வான்.இஸ்லாம் இவற்றிற்கெல்லாம் சஞ்ஜீவியாக, ஒளடதமாக அமைவதானது, இஸ்லாமிய வாழ்வு முறை மாத்திரமே மனித இனத்தின் வெற்றிக்கு வழியாகும் என்பது வெள்ளிடை மலை.

ஆம் இஸ்லாம் நற்குணத்தையும்,நாகரீகமான நற்பண்புகளையும்தான் முதன் முதலில் மனித உள்ளங்களில் விதைத்தது.இஸ்லாத்தின் வருகைக்கு முன், காட்டு மிராண்டிகளாக.கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று மனம் போன போக்கிலே, மிருகவாழ்வு மேற்கொண்ட அம்மக்கள்,பிற்காலத்தில் பெரும் இராஜ்ஜியங்களை ஆளும் ராஜாக்களாக மாறியதற்கு எது காரணம்? இஸ்லாத்தின் நிழலில்  நபி (ஸல்) அவர்கள் விதைத்த நற்பண்புகளென்ற வித்துக்களாகும்.

நபி(ஸல்) அவர்களின் நற் பண்புகளின் காரணமாகத்தான் 23 வருட குறுகிய காலத்துக்குள் இஸ்லாம் என்ற மரம் சுவையான கனிகளைத்தரும் பெரு விரூட்ஷமாக வளர்ந்தோங்குவதற்கு காரணமாக அமைந்தது.இதன் காரணமாகத்தான் நபியே உண்மையாக  நீங்கள் நற்குணங்கள் நிறம்பப்பெற்றவராக இருக்கின்றீர்கள்.(அல்கலம் -05)என்று சிலாகித்துக்கூறுகின்றான்.

நற் பண்புகள், நல்லவிழுமியங்கள் நன்நடத்தைசார் விருத்தி ,போன்றவைகளே ஒரு தனிமனிதனின்,சமூகத்தின் ,சமூக மேம்பாட்டு அளவுகோலாகக்கணிக்கப்படுகின்றது,இவ்வளவு கோலுக்கு, ,முன்மாதிரியான தலைமைத்துவக்கூறு அமைவது அவசியமாகும்.இந்த வகையில் நபி(ஸல்) அவர்கள் ,தம் சமூகத்தாருக்கு வாழ்வின் சகல துறைகளிலும்  முழுமையான முன்மாதிரியாகத்திகழ்ந்ததன்காரணமாக, அன்றைய சமுகத்தில் கேடிகளாகக்கருதப்பட்டவர்கள் சமூகத்திலேஒதுக்கப்பட்டவர்கள்,பின்னர் மனித மாணிக்கங்களாகமாறினர்.நபி(ஸல்) அவர்கள், அன்று அறியப்பட்ட அரேபியாவிலே  உயர்குலவம்சமான குறைஷ் வம்சத்திலே பிறந்திருந்தும், மக்கா நகரத்து அரசியல் தலைமைத்துவக்குடும்பத்தவராக இருந்தும்  மற்றவர்களின் வீடுகளுக்குச்சென்று  உதவும் பண்புடையவராக இருந்தார்கள்,அவர்களின் இந்தநற்பண்புகளின் காரணமாகத்தான் அரக்க குணம் படைத்த அம்மக்கள் அல் அமீன் நம்பிக்கையாளர், அஸ்ஸாதிக் உண்மையாளர் என்று அவர்களுக்கு சிறப்புபெயர் வழங்கிக்கௌரவித்தார்கள். நீங்கள் அல்லாஹ்வையும்  மறுமை நாளையும் ஆதரவு  கொள்பவராக இருந்தால் அல்லாஹ்வின்  தூதரில் நிச்சயமாக அழகிய முன் மாதிரி இருக்கின்றது(33.21)இன்று எம்மத்தியில் போட்டியும் புறாமையும் பித்தலாட்டங்களும் காட்டிக்கொடுப்புகளும் கழுத்தறுப்புகளும் தாராளமாக இடம்பெறுவதற்கு எது காரணம்? அறிவியலில் சற்று முதிர்ச்சி ஏற்பட்டு விட்டால் மற்றவர்களை தரக்குறைவாக மதிக்கும் நிலை, ,,அரசியலதிகாரத்தை வைத்து பந்தா காட்டும் நிலை, அரசியல் சுக போகத்தை தக்கவைத்துக்கொள்ள உயிரிலும் மேலான மார்க்கத்தை விற்று ஏப்பமிடும் நிலை,பதவியைவைத்து பெருமையடித்து மற்றவர்களை மட்டம்தட்டும் நிலை,பொருளாரத்தையும் புகழையும் அடைந்து கொள்வதற்காக எதையும் இழக்க அல்லது விலை கொடுத்து வாங்க தயங்காத மனோ நிலை,இதுவே இன்றைய முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலையாகும் இதனால் பொறாமை  காழ்ப்புணர்ச்சி பழிவாங்கும் தன்மை,கொலை கொள்ளை போன்றன  மலிந்து காணப்படுகின்றன,இவ்வாறான மோசமான இந்த நிலைப்பாடுகளுக்கு நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த நற்பண்புகளினதும் ,குணசார் விருத்தியிதும், பஞ்சமே காரணம் என்று துணிந்து கூறமுடியும்.மறுமையில் ஒருவரின் நன்மை ஏட்டில் அதிக கனமாக இருப்பது நற்பண்புகள்தான் என ந்பி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(திர்மிதி ,அரிவிப்பவர் அபுத்த்ர்தாஃ ரழி)

நபி(ஸல்)அவர்களை கொல்ல வந்தவர்கள் கூட ,அவர்களின் தரிசனத்தின் பின்னால்  ,அவர்களின் நற்பண்புகளினால் ஈர்க்கப்பட்டு ,இஸ்லாத்தினை ஏற்ற எத்தனையோ வரலாறுகள் எம் மனக்கண் முன்னால் நிழலாடுகின்றன.இவ்வாறான,நபியவர்களின் இன்னோரன்ன நற் பண்பு சார் விருத்திகளே,அவர்களின் ,,ரிஸாலத்,, என்ற தூதுத்துவப்பணிக்கு, அதன் துரித வளிர்ச்சிக்கு பெரும் உந்து சக்தியாக அமைந்ததை நாம் காண முடிகின்றது.நபியவர்களின் இந்த உயரிய பன்புகள், சாதாரண மனிதர்களை மாத்திரமல்ல, அன்று காணப்பட்ட ரோம் பாரசீக வல்லரசுகளைக்கூட நெகிழ வைத்தது,இதனால்தான் அவர்களால் வரையப்பட்ட கடிதங்களும் கூட ராஜாங்க மரியாதையைப்பெற்றதனை வரலாற்று ஏடுகளில் காணமுடிகின்றது.

மறுமை நாளில் அனைத்து மனிதர்களும்,நபிமார்களும் மஹ்ஷர் மைதானத்தின்அமளி துமளிகளில் சிக்கி தவிக்கும் போது ,அனைத்து முன் ,பின் வந்த சமுதாயத்திற்கும் சிபாரிசு செய்கின்ற ஷபா அத்துல் குப்றாவை நபியவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கின்றான் என்றால் அது அவர்களின் அருள்பொருந்திய நற்குணவியல்புகளுக்கும்தான் என்பது தெளிவாகும்.

மக்கா வெற்றியின் போது, பலமிழந்த, எதிரிகளுடனான நபியவர்களின் அணுகுமுறைகளை,உலகு இன்றளவும் நினைவு கூர்ந்து மெய் சிலிர்த்து நிர்க்கின்றது.சுமார் கால் நூற்றாண்டுகளாக பல வழிகளில்  எண்ணெற்ற துன்பங்களை புரிந்த,தனது ஊரைவிட்டு விரட்டிய, தனது குடும்பத்தார்களை கொலை செய்த.பொருளாதாரங்களை கபளீகரம் செய்தகாபிர்கள்,கைகட்டி வாய் பொத்தி, நபியவர்களின் முன்னால் தனக்கு என்ன கதி நேருமோ என்று கிலி பிடித்து நின்ற ,பல கொடியவர்களைப்பார்த்து ,நான் காய்ந்த இறைச்சியை தின்று வளர்ந்த பெண்ணின் மகன் நீங்களெல்லாம் விடுதலை பெற்ற சுதந்திரவான்கள் என்று கூறி அவர்களை மன்னித்துவிட்ட காருண்ய மாநபி (ஸல்)அவர்களின் நற் பண்புகள்  தான் உலகில் இஸ்லாம் வேகமாக வேரூன்றி வளர்வதற்கு காரணமாக அமைந்தது மட்டுமல்ல ,அன்றைய வல்லரசுகளுக்கும் நபியவர்களின் பெயரைக்கேட்டதும் நடுங்கம் ஏற்பட்டது என்பது வரலாற்றுச்சான்றாகும்.இன்று முஸ்லிம்கள் என்று கூறும் நாம் பதவி .பட்டம் அந்தஸ்த்து அதிகாரம் வந்து விட்டால் தனது எதிரிகளை கொலை செய்வதும் அல்லது வதை செய்வதும் அல்லது பொருளாதரங்களை நாசம் செய்வது அல்லது ஆக்குறைந்தது தொழில் ரீதியாக இடமாற்றங்களைச்செய்வது போன்ற அடாவடித்தங்களைத் திரை மறைவில்செய்து விட்டு புனிதனாக நடிக்கும் அல்லது வேசமிடும் பல முஸ்லிம்களைப்பார்க்கிறோம்இத்தகையவர்கள் நபி(ஸல்)அவர்களின் அழகியமுன்மாதிரி தன்னிடம் இருக்கின்றதா? மறுமையில் அவர்களின் புனிதமான ஷபா அத்துக்கு(சிபரிசுக்கு) நாம் துகுதியானவர்களா என்று தம் நெஞ்சங்களிலே கைவைத்து சுய விசாரணை செய்து கொள்வது சிறந்ததாகும்.

No comments

Powered by Blogger.