Header Ads



கிண்ணியா வைத்தியசாலையில் மறைக்கப்பட்ட ஒரு உயிரின் உண்மைச் சம்பவம் (படம்)



கிண்ணியா குட்டிக் கராச்சை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்திற்காக கிண்ணியா வைத்தியசாலையில் 2012.12.28 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த பெண்மணிக்கு குழந்தையினை சுகப்பிரசவம்  முடியாததனால் வைத்தியர்களால் சீஸர் செய்யப்பட்டு குழந்தை எடுக்கப்பட்டது. 

சீஸர் செய்யும் போது வைத்தியர்களின் கவனக் குறைவால்  அப்பெண் கோமா நிலையினை அடைந்துவிட்டார். இதனை அடுத்து கிண்ணியா வைத்தியசாலை நிருவாகம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அப்பெண்மணியை அனுப்பினார்கள். மட்டக்களப்பு வைத்தியசாலையில் 12 நாள் சிகிச்சையளிக்கப்பட்டது பிறகு மட்டக்களப்பு வைத்தியர்கள் எங்களால் இதனை பார்க்க முடியாது எனக் கூறி திருகோணமலை வைத்தியாசலைக்கு அனுப்பிவைத்தார்கள். 

திருகோணமலை வைத்தியசாலையில் 15 நாள் சிகிச்சைக்கு பின் சீஸர் செய்த வைத்தியரிடம் கொண்டு செல்லுங்கள் என்று கிண்ணியா வைத்தியாசலைக்கு அனுப்பி வைத்தார்கள். நான்கு மாதங்களுக்கு மோல் அப் பெண்மணி கிண்ணியா வைத்தியசாலையில் உயிர் மட்டும் வாழும் நிலையில் உறங்கிக்கொண்டு இருக்கின்றார்.

 சீஸர் செய்யப்பட்ட அப் பெண்ணுக்கு ஏழு பிள்ளைகள் இருக்கின்றார்கள். மற்றும் கணவர் ஒரு கூலித் தொழில் செய்பவர். இப்படியான ஒரு நிலையில் கடந்த நான்கு மாதங்களில் 5 இலட்சம் ரூபாய்களை வைத்தியச் செலவுக்காக கடன் வாங்கி செலவு செய்து இருக்கின்றார். 

ஆனால் சீஸர் செய்த வைத்தியர்கள் வைத்தியசாலையினை விட்டு இடமாற்றம் பெற்றும் ஏனைய வைத்தியர்கள் சீஸர் செய்யப்பட்ட வாட் இலக்கம் 03 இல்   இருக்கும் பெண்ணை வீட்டுக்கு அனுப்புங்கள் என்றும் வீராப்பு பேசுகின்றார்கள்.  

வைத்தியர்களின் கவனக் குறைவால் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு தவறாக சீஸர் செய்யப்பட்டுள்ள நிலையில் அப் பெண் கோமா நிலையை அடைந்துள்ளார். இதனை வைத்தியசாலை மூடி மறைத்து சம்ந்தப்பட்ட வைத்தியர்களை உடனாடியாக இடமாற்றம் செய்து அந்த ஏழைப் பெண்ணின் உயிரில் விளையாடி   உள்ளார்கள்.  எந்த ஊடகமும் இதனை வெளிக் கொண்டுவர முடியாதவாறு முடி மறைத்து வைத்துள்ளது வைத்தியசாலை நிறுவாகம். 

இச் செய்தியை வாசிப்பதுடன் நின்று விடாமல் வாசகர்கள் தட்டிக் கேளுங்கள் உரிய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியினைப் பெற்றுக் கொடுங்கள். 




8 comments:

  1. Intha sahothari kunamadaya allahvidam anaivarum pirarthippomaha

    ReplyDelete
  2. முடியமான வரை அனைவரும் அவருக்காக துஆ செய்வதுடன் அவரின் பிள்ளைகளின் கல்விக்கு தொடர் உதவிகளைச் செய்ய முன்வருவோம். இதற்கு நாம் அனைவரும் பதில் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  3. இவ்வாறான அநீதிகள் வைத்தியசாலைகளில் நிறையவே இடம்பெறுகிறது. அசிரத்தையோடு வைத்தியர்களும் தாதிமார்களும் செய்கின்ற தவறுகளால் எத்தனையோ உயிர்கள் பலியாகியுள்ளது. மரணித்த பின் வேறு ஏதேதோ வருத்தங்கள் உள்ளுக்குள் இருந்ததாக பொய்யைச் சொல்லி உறவினர்களை ஏமாற்றி உடனாடியாக பிரேதத்தினை அவசர அவசரமாக பெயரை வெட்டி அனுப்பிவிடுகிறார்கள். இவர்களின் இவ்வாறான அநியாயங்களை பொதுமக்கள் விழிப்படைந்து வீதிக்கி இறங்கி நியாயம் தேட வேன்டும் இல்லையேல் இவர்கள் பாமரர்களை தொடர்ந்தும் முட்டாளாக்கிக் கொன்டேயிருப்பர்கள்.

    ReplyDelete
  4. காலா காலமாக நடை பெறும் கவனஈனத்தினால் ஏற்படும் தவறுகளே, ஆனால் வைத்தியர்கள் கொலை செய்வதற்கு லைசன்ஸ் எடுத்தவர்கள் என்று மக்கள் ஜோக்காக கூறுவார்கள். வைத்தியராக இருந்தாலும் இடம் மாறிச்சென்றாலும் மனச்சாட்சி உள்ள வைத்தியராக இருந்தால் மீண்டும் இந்த தவறு நடக்காது தான் விட்ட பிழையை திருத்தி நடக்க முயற்சிப்பார், மாறாக வைத்தியப்பட்டம் பெற்ற மிருகக்குணம் கொண்டவராக இருந்தால் அவர் இந்த தவறை செய்து கொண்டே இருப்பார் மக்கள்தான் இவரை ஒதுக்கி வைக்க வேண்டும் இவரை சட்டத்தின் மூலம் தண்டனை பெற்றுக்கொடுப்பது இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினால் முடியுமான காரியம் அல்ல.

    ReplyDelete
  5. intha mathiri thavaro seium DOCTOR`S kandippaka thandikkapada vendom mudiumanavarkal itharko muayartchi seitho kodukavom.

    ReplyDelete
  6. தவரிட்கும், கவனஈனத்திட்கும் இடையில் பெரிய வித்தியாசம் உண்டு. இவற்றை வைத்தியத்துறையில் தவிர்ப்பதட்காகதான் வைத்தியர்கள் பாரிய போட்டியின் மத்தியில் தெரிவு செய்யப்பட்டு பயிட்சியளிக்கப்படுகிரார்கள். அப்படி தெரிவான ஒருவர் இவ்வாறு செயட்படுகின்ற போது அன்றில் இருந்து அவர் அத்துறைக்கு தகுதி அற்றவர். மனச்சாட்சி உடைய ஒருவராக இருந்தால் அவர் தானாக அத்துறையில் இருந்து விலகவேண்டும். இல்லையாயில் அவர் வெளியேற்றப்பட வேண்டும். இத்துறையில் மட்டும் மன்னிப்பே கூடாது. ஏனெனில் இது மனித உயிர்களில் நேரடியாக தொடர்புபட்ட துறையாதளால் ...........

    ReplyDelete
  7. innalillahi vainna ilaihi rajioon.the news is really imaginary story . complications of emergency cesareans are several types which could be preventable and some couldn't as well. here the story was rare complication which was preventable if detected early .the problem is lack of staff and number of deliveries {normal & cesareans } high .but still i don't completely accept the above blame on particular doctor.the fault she did can happen to any specialist also. as far as i know the doctor is not transfered for this reason and she personally applied this for 2 years .but both happened coincidently.really speaking the doctor is one of best in her services .every body knows this . good mankind , public servant even in non duty times .jaffna muslim pls don't publish without any clarification .u also should answer to Allah.

    ReplyDelete
  8. இச் சம்பவம் உண்மையகவிருந்தாலும் நடந்தது என்ன ? என்பதை வைத்தியர்களிடமே கேட்டு அறிய வேண்டும். வைத்தியசாலைகளில் தவறுகள், அசிரத்தை நடைபெறுவது உண்மையாகவிருந்தாலும், குறித்த வைத்தியரைப்பற்றி கூறப்பட்டுள்ளவை ஏற்றுகொள்ள முடியாதவையாகும் குறித்த வைத்தியர் சில வருடங்களுக்கு முன்

    இடமாற்றம் பெற்றபோதும் அவரது சேவையின் தேவை கருதி பொது மக்களும் நிர்வாகமும் கேட்டுக் கொண்டதற்கு இணக்ங்க இடமாற்றத்தை ஒத்தி வைத்திருந்தார்.

    அவர் நேர காலம் பாரது நோயாளிகளின் தகுதி அந்தஸ்துப் பாரது சிறப்பாக சேவை செய்த ஒருவராவார் பல சந்தர்பங்களில் நான் கண் கூடாக கண்டுள்ளேன் எனவே ஏதும் பிழை நடந்து இருந்தால் அது கவலையீனத்தினால் நடந்த்ததாகவிருக்கது என்று நிச்சயமாக கூறலாம்.

    ஆண்டவன்தான் அனைத்தையும் அறிந்தவன்.

    நோயாளி குணமடைய ஆண்டவனைப் பிராத்திப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.