Header Ads



வடமாகாண சபை தேர்தலில் ஆளும்கட்சி சார்பில் போட்டியிட விரும்புகிறீர்களா..?


(Tm) எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, விண்ணப்பங்களைக் கோரவுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. 

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 19 பேரையும் மன்னார் மாவட்டத்துக்கு 8பேரும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 8பேரும் வவுனியா மாவட்டத்துக்கு 9பேரும் கிளிநொச்சி மாவட்டத்துக்கு 7பேருமாக மொத்தம் 51பேர் கட்சியால் தெரிவு செய்யப்படவுள்ளனர். 

இந்நிலையில், முதன்முறையாக வட மாகாணசபை நிறுவப்படவுள்ளது. முன்னர் வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணசபை இயங்கிய நிலையில் அது நீதிமன்ற உத்தரவின் பேரில் பிரிக்கப்பட்டது. 

மொத்தமாக நியமன உறுப்பினர்கள் உட்பட 38 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட இருக்கின்றார்கள். அரசியல் சாசன விதிகளின்படி வட மாகாணசபைத் தேர்தலை நடத்த ஜனாதிபதியினால் தேர்தல் நிறைவேற்று அதிகாரிக்கு அரச கட்டளை பிறப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. மக்களே தற்போது உங்கள் நேரம் ஆரம்பிக்கின்றது,
    நாம் சிந்திக்கவேண்டிய நிலைமை வந்துவிட்டது. நமக்கு யார் யார் என்ன செய்தார்கள். ஒரு சங்கடமான சந்தர்ப்பத்தில் யார் நம்மை ஆதரித்தார் யார் நம்மை கவனிக்காமல் விட்டார் என்பதை நாம் அனைவரும் இனிமறந்துவிடக்கூடாது ஞாபகத்தில்வைத்திருந்து கண்டிப்பாக தேர்தல் வரும்போது யாருக்கு வாக்கழிக்கவேண்டுமென்று முடிவுசெய்யவேண்டும். இதில்தால் நமக்கு வெற்றி இருக்கின்றது. நாம் வழமைபோல் யாராவது எதையாவது சொன்னால் அதை நம்பி அவருக்கே நமது வாக்குகளை போடுவது பின்பு நமது கதி வழமைபோலதான். ஆனால் இனிமேல் அதுபோன்றதொரு நிலை வரக்கூடாது அரசியலவாதிகள் உண்ரவேண்டும் மக்களுக்கு ஏதாவது செய்தால்தான் அவர்கள் நம்மை ஆதரிப்பார்களென்று தலைவர்களுக்கு விளங்கவைக்கவேண்டியது நமது கடமை

    ஆகவே நாம் ஒவ்வொருவரும் இரண்டு மூன்று பேருக்கும் நம்மைச்சார்ந்தவர்களுக்கும் விடயங்களைத்தெளிவுபடுத்தி எதிர்வரும் காலங்களில் நமக்குள் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வளர்துக்கொள்ளவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.