Header Ads



பஷர் அல் அஸாத்திற்கு எதிராக போராடும் ஐரோப்பியர்கள்



(tn) ஐரோப்பாவின் நூற்றுக்கணக்கான போராளிகள் சிரியாவில் கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து போராடி வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவர் ஜைல் டி கெர்சொன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சிரியாவில் சுமார் 500 ஐரோப்பிய நாட்டினர் பஷர் அல் அஸாத் அரசுக்கு எதிராக போராடுவதாக அவர் தெரிவித்துள்ளார். அல் கொய்தா பிரிவுடன் தொடர்புபட்டே ஐரோப்பிய நாட்டினர் சிரியாவில் போராடி வருவதாகவும் இவர்களால் ஐரோப்பாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் புலனாய்வு துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் பெரும்பான்மையாக பிரிட்டன், அயர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோரே சிரிய கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து செயற்படுகின்றனர். “கடும்போக்காளர்களாக இவர்கள் நாட்டை விட்டு செல்லவில்லை. ஆனால் இவர்களில் பெரும்பாலா னோர் அங்கு கடும் போக்காளர்களாக மாறி இருப்பார்கள். 

ஆயுதப் பயிற்சியிலும் ஈடுபட்டிருப்பார்கள்” என கெர்சொன் பி.பி. சிக்கு தெரிவித்தார். இந்நிலையில் இவர்கள் நாடு திரும்பினால் பாரிய அச்சுறுத்தலை சந்திக்க வேண்டி வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் ஐரோப்பா நாடுகளின் உளவுப் பிரிவினர் தற்போது விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

1 comment:

  1. இது அமெரிக்கா, பிரான்ஸ், சவுதி, கட்டார், துருக்கி நாடுகளின் கூட்டுச் சதி என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று. கத்தாபியை கவிழ்த்து லிபியாவின் இறைமையை அமெரிக்காவுக்கு தாரை வார்த்ததும் இதே கூட்டணி தான்.

    ReplyDelete

Powered by Blogger.