Header Ads



இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் கத்தாரில் முக்கிய கூட்டம் (படங்கள்)



(கத்தாரிலிருந்து MACM. முனவ்வர்) 

கடந்த சில மாதங்களாக இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினை தொடர்பிலும்,அவற்றின் தற்கால நிலைமைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கின்ற மக்கள் சந்திப்பொன்று கட்டார் நாட்டின் தோஹா நகரில் 26.04.2013பிற்பகல் 06.30 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை நடைபெற்றது.

சிறீலங்கா முஸ்லிம் மஜ்லிஸின் முன்னாள் தலைவரும் தற்போதைய ஆலோசனை சபை உறுப்பினருமான சகோதரர் மொஹமட் மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து இந்நிகழ்வுக்காக விசேடமாக வருகை தந்திருந்த சிறீலங்காமுஸ்லிம் கவுன்சில் தலைவர் அல்ஹாஜ் என்.எம் அமீன், கலாநிதி மஸீஹூத்தீன் இனாமுல்லாஹ், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களும் விசேட உரைகளை ஆற்றினார்கள். இலங்கையின் பல பிரதேசங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான சகோதர, சகோதரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கடந்த சுமார் ஐந்து மாதகாலமாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத நடவடிக்கைகள் இராஜதந்திர ரீதியாக எவ்வாறு நிதானமாகவும் பொறுப்புணர்வுடனும் கையாளப்பட்டது என்றும், தமது அனுபவங்களை அல்ஹாஜ் அமீன் அவர்கள் விபரமாக எடுத்துரைத்தார்கள்.

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்டு வரும் பிரச்சினைகளின்  பின்னணியில் இருக்கும் பூகோள அரசியல் காரணிகள் பற்றிய விபரங்களையும் தெளிவுகளையும் கலாநிதி மஸீஹூத்தீன் இனாமுல்லாஹ் அவர்கள் விளக்கினார்கள்.

இறுதியாக, உரையாற்றிய பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள், 'இவ்வாறான சூழ்நிலைகளின் போது முஸ்லிம்களின் எதிர்கால இருப்பையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் எவ்வாறு தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்' என்ற தொனிப்பொருளில் உரையாற்றினார்.






No comments

Powered by Blogger.